பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 5 July 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Sunday, 5 July 2026
கடந்த சில நாட்களாக முகநூலில் புளொட் தலைவர் சித்தார்த்தன் 2017 கொடுத்த பேட்டி ஒன்று பல தடவை பார்க்க கிடைத்தது. அதில் அவர் நாங்கள் இல்லாவிட்டால் வவுனியா நகரம் இருந்திருக்காது என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால்  வவுனியா நகரம் என்ன ஆகி இருக்கும்.
முன்பு முன்பு மாணிக்கந்தாசனின் விசுவாசம் நண்பர்கள் வவுனியா நகரத்தை தாசன் அண்ணை தான் காப்பாற்றினார்., என்று கூறி வந்தார்கள். யாரிடமிருந்து காப்பாற்றினார்கள். அப்படி காப்பாற்றிய மாணிக்கம் தாசனை ஏன் அவரது இயக்கமே விடுதலை புலிகளுடன் சேர்ந்து கொலை செய்தது. எல்லாம் புரியாத புதிராகஇருக்கிறது.
அதைவிட வவுனியாவில் மலர் மாளிகை லக்கி ஹவுஸ் என்று புளொட் இயக்கத்தின் சித்திரவதைக்கூடங்களும் கொலைக்களங்களும் இருந்ததாக பொதுவான பலர் தெரிவித்து அதைப் பற்றி விபரமாக என்னை எழுதும் படி கேட்டார்கள். எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது எல்லாம் கேள்விப்பட்டது தான். கேள்விப்பட்டதை நான் எழுத தயாராய் இல்லை. ஆனால் அங்கு இன்றும் வாழ்ந்து வரும் பல முகநூல் நண்பர்கள் அதைப்பற்றி எழுதலாம் ஏன் தயங்குகிறார்கள்.
புளொட் காப்பாற்றிய வவுனியா நகரத்தில் 
ஏன் சித்தார்த்தன் போட்டியிடுவதில்லை.
வவுனியா மாவட்ட மக்கள்இவர்களை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை.
காரணம் என்ன. மலர் மாளிகை லக்கி ஹவுஸில் விடுதலை புலிகள் என்று கூறி பல பெண்களை கடத்தி சித்திரவதை செய்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உண்மையா. இல்லை இது வதந்தியா என்று அறிய விரும்புகிறேன். அப்படி நடந்து இருந்தால் ஏன் இதுவரை நேரடி சம்பந்தப்பட்ட பார்த்தவர்கள் பதிவுகளாக போடவில்லை. கடந்த கால தமிழ் மக்களுக்கு நாங்கள் செய்த துரோகங்கள் வெளிவர வேண்டும்.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment