என் அப்பா மாறன், தேவன் என்கிற தேவதசன். அவரது இருதி முடிவு எவருக்கும் தெரியாத ஒன்று. என் அப்பா, அம்மாவின் திருமணத்தின் பின்னர் இருவரும் கொழும்பில் வசித்து வந்தனர்.
1990ல் அவிஸ்ஸாவலை எண்ணும் பிரதேசத்தில் என் அண்ணா பிறந்தார். அதனைத் தொடர்ந்து 1991ல் கொஸ்கம என்னும் பிறதேசத்தில் நான் பிறந்தேன்.
இரு வருடங்கள் கழித்து 1993ல் நாங்கள் அனைவரும் வவுனியாவில் குடியேறினோம். அங்குதான் 1996ல் என் அப்பாவுக்கு இலங்கை போக்குவரத்து சபை அதிகாரியாக பணி கிடைத்தது. அத்துடன் அவரது கடமைகள் இருமடங்காக உயர்ந்தது. இதற்கு முன்னர் அவர் எப்படிப்பட்ட முடிவுகள் எடுத்திருப்பார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இந்த காலகட்டத்தில் தான் அவர் தனது முடிவுகள் அனைத்தும் தவறானதென உணர்ந்த தருணம்.
நான் முழு நேரமும் என் அப்பாவுடன் இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சில நேரங்களில் எமக்கு அவரது பணித்தளத்திற்கு அவருடன் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
எனது சிறுவயதில் இருந்தே ஒவ்வொரு விடயங்களையும் கூர்ந்து கவனிக்கும் விளையாட்டுப்பிள்ளை நான்.அதே போன்று நான் கூர்ந்து கவனித்த விடயம் ஒன்று.
1997ல் பாடசாலை விடுமுறை தினமன்று எனது அப்பாவுடன் அவரது வேலைத்தளத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு ஆறு வயது. நான் என் சகோதரனுடன் என் அப்பாவின் நிர்வாக இயக்குனர் அறையில் அவருக்குப் பின்னால் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்பாவுடன் கழக உறுப்பினர் ஒருவரும் இருந்தார். அந்த வேலையில் அங்கு கணவன் மனைவி இருவர் தமது குடும்ப முறைப்பாடுகளைக் கூற உள்ளே நுழைந்தனர். இதனை என் சகோதரன் கவனித்தாரோ! இல்லையோ! தெறியவில்லை. ஆனால் நான் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் இருவரும் தமது இல்லறவாழ்வுப் பிரச்சனைகளைக் கூறினர்.
இறுதியில் அப்பா அவர்களது முடிவு என்னவென்று கேட்ட போது அந்தப்பெண்ணின் பதில் இதன் பிறகும் தன் கணவருடன் வாழ துளியும் விருப்பமில்லை என்றார். அதுவரை வாயை மூடிக்கொண்டிருந்த கழகத்தில் கரையேற்ற வந்த கயவன் அந்தப் பெண்ணிடம் கேட்டது “உன் கணவனுடன் உன்னால் வாழ முடியாதென்றால் நீ என்னுடன் வா! நான் உன்னை சகல சுகங்களுடன் வைத்துப் பார்த்துக்கொள்கிறேன்” என்றான் (அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது). சற்றும் யோசிக்காமல் அவளது கணவன் முன்பே அந்தப்பெண் அந்தக் கயவனுடன் சென்றுவிட்டாள்.
அந்த நொடியே அப்பாவின் முகம் வாடியதை என்னால் மறக்க முடியாது. அதுவே நான் எனது அப்பாவுடன் பயணித்த இறுதிப் பயணம். அன்றிரவு அப்பா மது போதையில் கழகம் கயவர்கள் கையில் மாட்டிக்கொண்டுவிட்டதாகவும், நான் தீர்மானங்கள் எடுத்ததில் தவறு இழைத்துவிட்டேன் என்ற உளறல் இப்பொழுதும் நேரில் பார்ப்பது போல் இருக்கிறது.
இப்பதிப்பில் அப்பா குற்ற உணர்ச்சிக்குள்ளான தருணத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டாலும் நான் இழந்த என் நாயகனை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்காது என்பது எனக்குத் தெரியும்.
ஆனாலும் நான் மாறனின் மகன். அவரைப்போன்று துரோகிகளை மன்னிக்கும் குணம் எனக்கு இல்லை. அவரது குணங்களில் சில குணங்களும் என்னிடமும் உள்ளது. அது வெளிப்படும் போது கயவர் கூட்டம் அழியும் நாளுக்கு விதையாகவே அமையும்.
என் அப்பாவுக்கு நடந்த துரோகங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த தோழர் Balasingam Balasooriyan அவர்களுக்கும் தோழர் Vetri Chelvan அவர்களுக்கும் என் நன்றி.
என் அப்பாவின் இறப்பு பற்றிய பதிவினை விரைவில் பதிவிடுகிறேன்.
நன்றி...
No comments:
Post a Comment