இன்று இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை தொடர்ந்து தக்க வைக்கவும், உலக நாடுகளின் உதவியுடன் குறிப்பாக இந்தியாவின் உதவியுடன் இலங்கை பொருளாதாரத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்கு முதலில் இலங்கை தமிழர் பிரச்சனையே தீர்ப்பதாக நடிக்க தொடங்கியுள்ளார். அவருக்கு தெரியும் எந்த ஒரு தீர்வுக்கும் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக ஒன்றுபட்டு குரல் கொடுக்க மாட்டார்கள் என்று,
அதுபோலவே தமிழ் தலைவர்களும் ரணில் விக்கிரமசிங்க ஏதோ உரிமையை கொடுத்து விடப் போகிறார்கள் என்று ஒற்றுமையாக ஒரே குரலில் பேச்சுவார்த்தையை சரி நடத்தாமல் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பலதரப்பட்ட குரலில் தமிழர்களுக்கு உரிமைகளை கேட்கிறார்கள். முதலில் இவர்களுக்கு கேட்கும் உரிமைகளில் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை ஆராய வேண்டும். அதோடு இன்று கிழக்குப் பகுதி தமிழர்கள் வடக்கு பகுதி தமிழர்களோடு சேர்ந்து இருக்க தயாராக இருக்கிறார்களா, என்பதை முதலில் ஆராய வேண்டும். இதற்கு கண்டனம் தெரிவிப்பார்கள் நான் தமிழர் துரோகி என்று. இன்றுள்ள எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்துக்கு கிழக்கு பகுதி தமிழர் முதலமைச்சராக ஏற்றுக்கொள்வார்களா. அதோடு கிழக்கு பகுதி தமிழர் என்றால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக கூட இருக்கலாம்.
ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல எந்த ஒரு சிங்கள கட்சிகளும் தலைவர்களும் தமிழருக்கு உரிமைகளை கொடுத்து இலங்கை அமைதியாக ஒற்றுமையாக இருப்பதை விரும்ப மாட்டார்கள். அதுபோல் தமிழர் தலைவர்களும் தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு கிடைத்து மக்கள் அமைதியாக இருந்து விட்டால் தங்களாலும் அரசியல் செய்ய முடியாது என்று நினைத்து மறைமுகமாக சிங்கள தலைவர்களுக்கே ஆதரவாக இருப்பார்கள். அதுபோல் இந்தியா உட்பட அமெரிக்கா போன்ற நாடுகளும் இலங்கை நாடு அமைதியாக பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதை விரும்ப மாட்டார்கள். காரணம் இலங்கை தமிழர் பிரச்சினையை காரணம் காட்டி எந்த ஒரு வழியிலோ இலங்கையில் தங்கள் கால்களை பதிக்க திரும்புகிறார்கள். எல்லா நாடுகளுக்கும் சீனா பயம். உள்ளது.
இதே நேரம் ரணில் விக்ரமசிங்க தமிழருக்கு எந்த உரிமையும் கொடுக்க மாட்டார் என்று தெரிந்து கொண்டு, சிங்கள அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஏன் பௌத்தப்பிக்குகள் கூட தங்கள் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை தொடங்கி விட்டார்கள். இது பொருளாதார கஷ்டத்தில் இருக்கும் சிங்கள மக்களையும் தமிழருக்கு எதிராக திசை திருப்பும் வேலை. இதற்கு பல தமிழர்களும் தமிழ் மத அமைப்புகளும் துணை போகின்றன என்பதுதான் வருத்தம் அளிக்கிறது. இன்று தமிழர்களே இலகுவாக ஹிந்து தமிழன் கிறிஸ்தவ தமிழன் முஸ்லிம் தமிழன் என்று கூறு போட்டு திட்டமிட்டு தமிழர் ஒற்று படக்கூடாது என்று வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதோடு சாதிவாரியாகவும் பிரித்து பிரித்து தமிழர்களின் ஒற்றுமையை சிதைத்து வருகிறார்கள். சாதி வேறுபாடுகளை அகற்றி ஒற்றுமையாக இருக்க வழி செய்வதை விட. சாதி சமயக் குரல்கள் பலமாக ஒலித்து பிரிவினையை தமிழர்களிடம் கூட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் மறைமுகமாக சிங்கள பௌத்த பிக்குகளிடம் சரணடைந்து, தமிழ் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதற்கு உதவி புரிகிறார்கள்.
புராண கால ராவணன் இன்று முஸ்லிமா சிங்களவரா என்று தமிழர் பிரச்சினையை விட முக்கியமான பிரச்சினையாக காணப்படுகிறது.
தமிழர் பிரச்சினைகளை சிங்களவர்கள் முஸ்லிம்கள் தமிழ் தலைவர்கள் கூட மிகச் சிறந்த முறையில் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டு முகநூல் போராளிகளும் தமிழ் தேசியவாதிகளும் தமிழர்களின் உரிமைகள் திசை திருப்பப் பட்டுக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளவில்லை.
அண்மையில் தான் ஒரு நண்பர் முகநூலில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனது முழு குடும்பத்தையுமே பிரபாகரன் இழந்துவிட்டார் என்று கவலைப்பட்டிருந்தார். அவரின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதத்தில் உண்மையாகவோ பொய்யாகவோ பிரபாகரனின் மனைவியும் மகளும் உயிருடன் இருப்பதாகவும் அவர்களுடன் சாப்பிட்டதாகவும். இன்னும் சிலர் பிரபாகரனும் கூட இருப்பதாகவும் உண்மைதான் என்றும் சத்தியம் செய்யாத குறையாக யூடியூப் பேட்டிகளில் வெளுத்து வாங்குகிறார்கள். இந்த நேரத்தில் இப்படியான செய்திகள் வரவேண்டிய தேவை என்ன? இவர்கள் மறைமுகமாக ரணில் விக்ரமே சிங்கவுக்கும் மற்ற சிங்கள தலைவர்களுக்கும் உதவி புரிகிறார்கள் என நினைக்கிறேன். பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தி சிங்கள மக்களை அவர்களது அன்றாட பொருளாதார பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி தமிழர்களுக்காக எதிராக திரும்ப வைப்பதே இவர்களின் நோக்கம்.
பிரபாகரனும் குடும்பமும் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி. அவர்கள் படை திரட்டி வரும்போது வரட்டும். இப்படி இப்போது இப்படியான செய்திகள் வருவது ஏன் திரும்பவும் பிரபாகரனையும் விடுதலையும் காட்டி பணம் சேகரிப்பதற்கான முயற்சி என்றும் பலர் கூறுவது உண்மையாக இருக்கலாம். அதே நேரம் கடந்த காலத்தை போல் சிங்கள தலைவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சிங்கள மக்களின் வாக்குகளை பெற வெளிநாடுகளில் இருக்கும் பல தமிழர்கள் உதவி செய்வதாகவும் நம்பக்கூடிய செய்திகள் உண்டு. இப்படியான செய்திகள் மூலம் பிரபாகரன் தமிழ் மக்களை சிங்கள ராணுவத்திலும் காட்டிக் கொடுத்துவிட்டு தான் மட்டும் தப்பிவிட்டார், தமிழ் மக்களே சிங்கள ராணுவத்திடம் பலி கொடுத்து விட்டு தனது குடும்பத்தை மட்டும் காப்பாற்றி விட்டார் என்று பல பிரச்சாரங்கள் இனிமேல் வரும். இதுவும் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு வே அமையும். உங்கள் தலைவன் உங்களை கைவிட்டு தப்பிவிட்டார் நாங்கள் உங்களை பாதுகாக்குவோம் என்று இனி சிங்கள தலைவர்கள் கிளம்பி வருவார்கள். இதெல்லாம் திட்டமிட்டு இலங்கை சிங்கள தலைவர்களுக்காக செய்யப்படும் நாடகம் போல் உள்ளது
2009க்கு பிறகு மிஞ்சி இருக்கும் தமிழர்களை சிதறு தேங்காயாக பிரித்து தமிழர் பிரதேசம் என்ற பாரம்பரிய இடங்கள் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு கொடுக்கப்பட போகின்றது. இதற்கு உதவி செய்யும் தமிழர்களின் சாதி சமய அமைப்புகளுக்கு பெரும்பணம் கை மாறி பதவிகள் கூட கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.
விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் தளம் எனப்படும் இலங்கையிலும் பின் தளம் எனப்படும் இந்தியாவிலும் புளொட் இயக்கத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளி இளைஞர்களும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் இருந்த பெரிய இயக்கமாக இருந்தது. வருடங்கள் போகப்போக இலங்கையில் எந்த ஒரு ஆயுதப் போராட்டமும் நடத்தாமல் இயக்கம் சிதறிவிட்டது. எத்தனையோ எத்தனை உட் கொலைகள், கழக முக்கிய தோழர்கள் கொலை இலங்கை அரசுசொடு ரகசிய உறவு என்பன தலைமையின் தவறுதான் என்று அறிந்து இயக்கம் அவருக்கு மரண தண்டனை கொடுத்தது. மரண தண்டனை கொடுத்த தலைவர்களே பின்பு அதை மறைத்து சிலரை பலிக்கடாவாகினார்கள். அந்த உண்மையை வெளிகொண்டு வர தான் நான் எனது அனுபவங்களை பதிவுகளாக போட்டேன். உமா மகேஸ்வரனின் தவறுகள் சுட்டிக் காட்டினேன்.
எனது பதிவுகளை வாசித்த அனேகம் பேர் குறிப்பாக மற்ற இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த விடுதலை போராட்டத்தில் உமாமகேஸ்வரன் மட்டும்தான் துரோகி குற்றவாளி போல் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். எல்லோரும் தங்கள் இயக்க தலைவர்கள் மட்டும் மகா உத்தமர்கள் போல் எழுதினார்கள். ஒரு இயக்கத்தில் உண்மையான தோழர்கள் தங்கள் இயக்கம் விட்ட தவறுகளை. கொலை கொள்ளைகளை எழுதி மக்களுக்கு இயக்கங்கள் பற்றி எழுதி இயக்கங்கள் பற்றிய மாயையை உடைப்பார்கள் என நினைத்தேன். யாரும் எழுத தயாராகவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதினார்கள் விடுதலைப் புலிகளும் எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் தவறு செய்துள்ளார்கள். அவர்கள் தங்கள் பங்குக்கு பெரிய தவறு ஆனால் அன்றிருந்த இன்று இருக்கும் அரசியல் தலைவர்களும் முன்னாள் ஆயுத இயக்க இன்று அரசியல் தலைவர்களும் சிங்கள அரசோடு சேர்ந்து தமிழர்களே கொன்றார்கள். விடுதலைப் புலிகளும் சிங்கள அரசோடு சேர்ந்து தமிழர்களையே அழித்தனர். யாரும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஏன் சிறந்த இளைஞர்களை போராளியாக கொண்டு இருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் எமது விடுதலையை மக்கள் ரசிக்கும்படியாக மட்டும் அதோடு பணம் சேர்ப்பதற்காக ஒரு சண்டை படம் போல் நடத்தி காட்டினார்கள். சண்டை படத்தில் கதாநாயகனே வீரத்தை மக்கள் ரசிப்பது போல் பிரபாகரனை ரசித்தார்கள். அந்தக் கதாநாயக மக்களின் ரசிப்பே அவர் தன்னை நம்பி இருக்கும் தமிழ் மக்களைப் பற்றி மக்கள் உரிமைகள் பற்றி உலக ஒழுங்கு பற்றி அன்றைய காலகட்டத்தில் உலக நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக இருப்பது பற்றி சற்று கூட சிந்திக்கவில்லை. ஆனால் எமது விடுதலைப் போராட்டம் பயங்கரவாத போராட்டமாக உலக நாடுகள் பார்ப்பதையும் அதற்கு எதிராக அணி திரள்வதையும் பாலசிங்கம் அறிந்து பலமுறை எச்சரித்ததாக தகவல்கள் உண்டு.
ஒரு மூத்த பத்திரிகை நிருபர் சந்தித்தபோது போதும் கூறினார் அமெரிக்கா இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேரடியாக களமிறங்க தயாராக இருந்தாலும், இந்தியாவை மீறி அதை செய்வது சரியாக இருக்காது என்று, இந்தியாவை விட்டு சமாதான போர்வையில் நோர்வே நாட்டை களமிறங்கி அமெரிக்காவே வேறு வகையில் அதாவது சமாதான பேச்சு வார்த்தையில் இலங்கையில் களம் இறங்கியது. உண்மையை உணர்ந்த பாலசிங்கம் பல வழிகளில் பிரபாகரனிடம் உண்மையை கூறிய போதும், பிரபாகரன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பாலசிங்கம் மேற்கு நாடுகள் இடம் இடம் விலை போய்விட்டார் என்றும் அவருக்கு எதிராகவே விடுதலில் புலிகளில் குரல் எழுந்து கடைசியாக அவரை அடித்ததாகவும் அன்று தகவல்கள் வந்தன.
அதன் பின்பு தன்னை சந்தித்த நெருங்கிய பத்திரிகையாளர்களிடம் தம்பியை கடவுள் வந்தாலும் காப்பாற்றுவது கஷ்டம் என கூறியுள்ளார்.
இது பல பேருக்கு தெரிந்த உண்மை.
இன்றும் நாங்கள் விடுதலைப்புலிகள் இல்லாத இந்த 14 வருடங்களும் ஒற்றுமையாக எமது விடுதலையை இல்லை உரிமைகளை சரி பெற என்ன செய்தோம். பதவிக்காகவும் பணத்துக்காகவும் பிரிந்து நின்று வேலைகளை தான் செய்கிறோம். கேட்டால் இன்றும் விடுதலைப் புலிகளை தான் குற்றம் சாட்டுகிறோம். விடுதலைப் புலிகளை இருந்தவர்கள் கூட முக்கியமானவர்கள் இன்று அரசாங்கத்துடனும் சிங்கள தலைவர்களுடனும் நல்ல உறவை பேணி தங்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.
அதோடு இன்று தமிழ் தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் படு முட்டாளாக இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருக்கும் இலங்கைத் தமிழர்களும் கற்பனை இல் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
யாரும் இலங்கையில் இன்று உயிருடன் இருக்கும் தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்று அறிய விரும்பியதில்லை. பல தமிழர்கள் இன்று சொந்த இடத்தை விட்டு வெளிநாட்டுக்கு போய் வாழவே ஆசைப்படுகிறார்கள் என கருத்துக்கள் வருகின்றன. இருக்கும் தமிழர்கள் எல்லாம் சொந்த இடம் தமிழ் பிரதேசங்களை விட்டுப் போய்விட்டால் தமிழர்களின் தனி நாடு கனவாகவே போய்விடும்.
இனிமேல் சரி படித்த தமிழர்களின் இன்றைய நிலை பற்றி சிந்திக்க கூடிய அறிவு சார்ந்த அறிஞர்கள் நல்ல ஒரு தமிழர்களுக்கான தீர்வு பற்றி சிந்தித்து முடிவெடுங்கள். இலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல் தலைவர்களே நம்ப வேண்டாம்.
No comments:
Post a Comment