இலங்கை நாட்டில் முதல் முதல் இலங்கை அரசுக்கு சவால் விட்டு தமிழிலஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த இயக்கம் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கமாகும். இந்த இயக்கத்தின் முதல் தலைவராக இருந்த உமா மகேஸ்வரன் பேரைக் கேட்டாலே நடுநடுங்கிய இலங்கை அரசு1978 ஆண்டு அவரின் தலைக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்க இலங்கை முழுக்க போஸ்டர்கள் அடித்து ஒட்டியது. அந்த போஸ்டரில் முதலில் உமா மகேஸ்வரன், வாமதேவன், நாகராஜா, மற்றும் கண்ணாடி பத்மநாபன் ஆகிய நால்வரின் படத்துடன் கங்கை அரசு ஒட்டிய போஸ்டர்களை பார்த்து சிங்கள மக்கள் பயந்தார்கள். தமிழ் மக்கள் தூரத்தில் நின்று பார்த்து அவர்களை மிகப் பெரும் கதாநாயகர்களாக பார்த்து ரசித்தார்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அந்த படங்களை போய் பார்ப்பதை கண்டு பயந்தார்கள் காரணம் இலங்கை போலீசார் சந்தேகப்படுவார்கள் என்று. இலங்கை தமிழ் மக்களின் முதல் மனதைக் கவர்ந்த எழுச்சிமிக்க தலைவராக இருந்தவர்தான் உமா மகேஸ்வரன். இதை யாரும் மறக்க,மறுக்க முடியாது.
வருடங்கள் செல்ல பல தமிழ்விடுதலை இயக்கங்கள் தோன்றின. உமா மகேஸ்வரனும், சில நண்பர்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி ஒரு புதிய இயக்கத்தை1980 ஆண்டு ஆரம்பித்தார்கள். அதன் முதல் தலைவராக உமாமகேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார். இயக்கத்தின் பெயர் தமிழீழ மக்கள் விடுதலை கழகம். இந்த இயக்கத்தில் இருந்த சிறந்த அரசியல் மற்றும் ஆயுதப்போராளியான சிவ சண்முகம் மூர்த்தி என்ற சுந்தரம் அவர்களின் அரசியல் தாக்குதலை தாங்க முடியாமல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் திரு அமிர்தலிங்கம் விடுதலைப் புலிகளின் அன்றைய தலைவர் பிரபாகரனுக்கு கூறியதின் பேரில் சுந்தரம் அவர்கள் சித்ரா அச்சகம் எனும் பிரசில் வைத்து விடுதலை புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதன்பின் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பித்தவர்களில் ஒருவரான சிறந்த இடது சாரி கொள்கைகளை அறிந்த பின்பற்றும் சந்ததியர் அவர்கள் அரசியல் செயலராக பொறுப்பெடுத்துக் கொண்டார்.
சுந்தரத்தின் கொலையை அடுத்து பாதுகாப்பு கருதி உமாமகேஸ்வரன் சில தோழர்களுடன் பாதுகாப்பு கருதி தமிழ்நாட்டுக்கு வந்து சென்னையில் தங்கியிருந்தார். அப்போதுதான் 19/05/1982 அன்று பாண்டி பஜார் இடத்தில் பிரபாகரனும் அவருடன் இருந்த ராகவன் இருவரும் உமாமகேஸ்வரன் அவர் தோழர் கண்ணன் என்கிற சோதி ஈஸ்வரனையும் சுட்டு கொலை செய்ய முயன்று இலங்கையில் தலைமறைவு விடுதலை இயக்க தலைவர்கள் இந்தியாவில் சென்னையில் பிடிப்பட்டு சிறை வைக்கப்பட்டு மிகச் சிறந்த முறையில் தங்கள் புரட்சிகர தமிழீழ விடுதலையே தொடங்கி வைத்தார்கள்.
பல மாதங்கள் சென்று 1983 July கலவரத்தை அடுத்து இந்தியாவின் கவனம் விடுதலை இயக்கங்களின் மேல் பார்வை பட்டு புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது. இந்தியா ஆயுதம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கத் தொடங்கி இலங்கை இனப்பிரச்சனையில் புதிய அத்தியாயம் தொடங்கியது இதில் 5 விடுதலை இயக்கங்கள் இந்தியாவின் உதவியை பெற தொடங்கின.
இதிலும் ஆரம்பத்தில் இலங்கையிலும் சரி இந்தியாவிலும் சரி மிகப் பெரிய இயக்கமாக இளைஞர்களை உள்வாங்கி செயல்படதொடங்கியது.உமா மகேஸ்வரன் தலைமையில் இருந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் எனப்படும் புளொட் இயக்கமாகும். வெளிநாட்டு லெபனான் பாலஸ்தீன பயிற்சிகள், இந்திய பயிற்சிகள் கிடைத்து இயக்கம் வளர, அந்த வளர்ச்சியை பயன்படுத்தி மேலும் மேலும் வளர இயக்க தலைமை உமா மகேஸ்வரனால் முடியவில்லை என்பதே உண்மை. அதே நேரம் அவரைச் சுற்றி தலைமை தாங்க தகுதியற்ற தோழர்கள் சுற்றி சுற்றி வந்து அவரே ஒரு விடுதலை இயக்கத் தலைவர் போல் அல்லாமல் ஒரு கொள்ளை கோஷ்டி தலைவரே புகழ்வது போல் துதி பாடி வந்தார்கள்.
இயக்க அரசியல் பிரிவு தலைவர் சந்ததியர் மற்றும் முக்கிய சிறந்த தோழர்கள் இயக்க கொள்கைகளை முன்னிறுத்தி முகாம்களில் பேசிய தோழர்கள் படு பயங்கரமாக சித்திரைவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இக்காலகட்டத்தில் இலங்கையின் மிகக் கொடுமையான பாதுகாப்பு அமைச்சர் லலித்அதுலத் முதலி ரகசியமாக உமா மகேஸ்வரன் உடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அவர் மூலம் மற்ற இயக்கங்கள் இந்திய அரசின் செயல்பாடுகள் போன்ற செய்திகளை இலங்கை அரசுக்கு உமா கொடுக்கத் தொடங்கியுள்ளார். இதற்கு இலங்கையில் இருந்து வந்த செர்லிகண்டப்பா என்பவர் தான் முக்கிய காரணம். அவர் இந்தியா வந்து உமாவுடன் தொடர்புகளை பேணி புளொட் இயக்கத்தில் உள்வாங்கப்பட்டதை சந்ததி யார் மிக கடுமையாக எதிர்த்தார். ஷெர்லி கந்தப்பா இலங்கை அரசின் ரகசிய உளவாளி என்று எடுத்துக் கூறினார் அது எடுபடவில்லை ஆனால் சந்ததியார் கொலை செய்யப்பட்டார்.
புளொட் இயக்கம் இலங்கையில் போராடாமலே உடைந்து சிதறத் தொடங்கிவிட்டது. போராட்ட கனவுகளோடு வந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தமிழ்நாட்டின் தெருக்களில் விடப்பட்டார்கள். இலங்கையிலோ அதைவிட மோசம் ஒரு பக்கமா இலங்கை இராணுவம், மறுபக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்ற இயக்கங்களை தேடி தேடி தமிழ் இளைஞர்களை கொலை செய்யதொடங்கினார்கள்.
1987 ஆண்டு இலங்கை இந்தியா ஒப்பந்தம் ஏற்பட்ட பின் தமிழ்நாட்டில் தங்கி இருந்த இயக்கங்கள் எல்லாம் இலங்கைக்கு குடி பெயர்ந்தனர். அப்போதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தோழர்களுக்கும் புளொட் இயக்க தோழர்களுக்கும் காடுகளில் கடும் சண்டை பல தோழர்கள் இரு பக்கமும் உயிரிழப்பு. இலங்கைக்கு கடல் மார்க்கமாக போன புளொட் உமா மகேஸ்வரன் மன்னார் காடுகளில் இருந்த போது இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி இலங்கை ராணுவ பாதுகாப்போடு ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு அழைத்து வந்து சிறந்த ராணுவ பாதுகாப்பு உள்ள பகுதியில் இருந்த தனது தங்கையின் வீட்டில் பாதுகாப்பாக தங்கி இருக்க உமா மகேஸ்வரனுக்கு உதவி புரிந்துள்ளார்.
கொழும்பு வந்த பிறகும் இயக்கத்தை வளர்ப்பதை விட இலங்கை அரசுக்கு உதவி செய்வதையே செய்துள்ளார். கொழும்பிலிருந்து முக்கிய தோழர்களே கொள்ளையடிக்க சந்தேகப்படும் விடுதலைப்புலி இயக்கம் தோழர்களை கொலை செய்வதற்கு பயன்படுத்தி உள்ளனர். முக்கிய இயக்க தோழர்களை மாலத்தீவு புரட்சி என்று கிட்டத்தட்ட 80 முக்கிய தோழர்களை இலங்கையில் இருந்து அப்புறப்படுத்தி விட்டிருக்கிறார் இதில் அதுல முதலியின் பங்கும் முக்கியமாக இருந்திருக்கிறது இதை அன்றைய கழக ராணுவ தளபதி மாணிக்கம் தாசன் விரும்பவில்லை அவரையும் மீறி நடந்துள்ளதாக அறியப்படுகிறது.
அடுத்தடுத்த காலங்களில் நடந்த முக்கிய சம்பவங்களில் புளொட் இயக்கம் கிட்டத்தட்ட அழிந்து விடும் நிலைக்கு வந்துவிட்டது. முள்ளிக்குளம் என்ற இடத்தில் இருந்த எமது ராணுவ முகாமை விடுதலை புலிகள் இலங்கை ராணுவத்தின் உதவியோடு வந்து கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட தோழர்களை கொன்று குவித்து விட்டனர். கொழும்பில் இருந்த தோழர்கள் பாதுகாப்பு அமைச்சர் லலிதின் உதவியை கேட்கச் சொல்ல, புளொட் தலைவர் உமா மகேஸ்வரன் சண்டை என்றால் சாகத்தான்செய்வார்கள், என்று அலட்சியமாக கூறியுள்ளார். அவருக்கு எதிராக மிச்சம் இருந்த தோழர்கள் போர்க்கொடி தூக்கிய போது எல்லோரையும் இயக்கத்தை விட்டு போகும் படியும், தன்னால் மலையக இளைஞர்களை வைத்து புது அமைப்பு கட்ட முடியும் என்று சவால் விட்டுள்ளார்.
அப்போது மிச்சம் இருந்த கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட தோழர்களை சித்தார்த்தனும், மாணிக்கம் தாசனும் சமாதானப்படுத்தி அடுத்த கட்ட நிலைமைகளை பற்றி யோசித்துள்ளார்கள். தோழர்கள், சித்தார்த்தன், மாணிக்கந்தாசன் போன்றவர்கள் ரகசிய ரகசியமாக கூடி கூடி பேசி ஏடுத்த முடிவு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயல் அதிபர் உமா மகேஸ்வரனுக்கு அவரின் துரோக செயல்களுக்காக மரண தண்டனை கொடுப்பது என்று முடிவு செய்துள்ளார்கள்.
சென்னையில் கழகத்தின் இந்திய பிரதிநிதியாக அப்போது இருந்த என்னிடமும் சித்தார்த்தனும், மாணிக்கண் தாசனும் உமா மகேஸ்வரனுக்கு கொழும்பில் பாதுகாப்பு கொடுத்தஆட்சி ராஜனும் மாறி மாறி தொலைபேசி மூலம் அங்கு நடந்த நடக்கும் சம்பவங்களை பற்றி விளங்கப்படுத்தி எனது கருத்தை கேட்ட போது அவர்களின் முடிவுக்கு நான் கட்டுப்படுவதாக கூறி அவர்களுக்கு நான் முழு ஆதரவு கொடுத்தேன்.
கொழும்பில் பாதுகாப்பு மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் குறிப்பாக கொழும்பு பாதுகாப்பில் பொறுப்பில் இருந்த ஆட்சி ராஜன் அவர் நண்பர்கள் மரண தண்டனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். குறிப்பாக சக்திவேல் மூத்த தோழர் ஆனந்தி அண்ணா திவாகரன் போன்றவர்களுக்கு இந்த விடயம் தெரியாது அவர்களுடன் யாரும் இது பற்றி பேசவில்லை.
சித்தார்த்தனும், மாணிக்க தாசனும் மரண தண்டனை கொடுக்க ஆச்சி ராஜனையும் அவரின் நண்பர்களையும் மூளைச்சலவை செய்து பல உறுதி மொழிகளை கொடுத்து சம்மதிக்க வைத்துள்ளார்கள்.
முக்கியமான உறுதிமொழிகள் 1. உமாவுக்கு மரண தண்டனை கொடுத்த பின்பு கொழும்பில் இருக்கும் ஆட்சி ராஜனோடு சேர்ந்த தோழர்கள் தாங்கள் தான் மரண தண்டனை கொடுத்ததாக பகிரங்கமாக கழகத்தின் மூத்த தோழர் ஆனந்தி அண்ணாவிடமும் மற்றவர்களிடமும் கூற வேண்டும். அப்போதுதான் இருக்கும் தோழர்களிடம் மத்திய குழுவுடன் நடந்த உண்மைகளை கூறி உமா மகேஸ்வரன் கடந்த காலங்களில் எப்படி எப்படி இயக்கத்தை அழித்தார், அவர் நடத்திய கொலை கொள்ளைகள் போதைப்பொருள் வியாபாரம் பற்றி எல்லாம் எடுத்துக் கூறி முடிவாக இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு எப்படி விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார் என்று ஆதாரங்களுடன் தாங்கள் விளங்கப்படுத்த போவதாக கூறியுள்ளார்கள்.
அதோடு மாணிக்கம் தாசன் தான் ராணுவ தளபதியாக இருக்கும்போது இலங்கை அரசோ அல்லது விடுதலைப் புலிகளோ அல்லது வேறு இயக்கங்களோ தங்கள் தலைவரே கொலை செய்ததாக தகவல் வந்தால் அது தங்களுக்கு இழுக்கு என கூறியுள்ளார் இதே கருத்தை ஆட்சி ராஜன் தனக்கமிருந்ததாக கூறினார்.
இதில் எல்லோருக்கும் தொடர்ந்து இயக்கத்தில் இருந்து இயக்கத்தை நல்ல முறையில் தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நான் சித்தார்த்தன் இடம் இயக்கத்தை தொடர்ந்து நடத்த முடியுமா நாங்கள் சுத்தி எல்லோரிடமும் பகை தான் இருக்கிறது. இருக்கும் தோழர்களே பலி கொடுக்க வேண்டுமா என்று கேட்ட பொழுது சித்தார்த்தன் தான் இனி லண்டனில் போய் வேலை செய்ய முடியுமா பார்ப்பவர்கள் காரி துப்ப மாட்டார்களா, அதோடு தனது அப்பா 25 வருடமாக தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து விட்டார். தான் இயக்கத்தை நல்ல வழியில் நடத்தி ஒரு ஐந்து வருடமாவது பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் கூறினார். அதை அன்று விளையாட்டாக எடுத்துக் கொண்டேன்.
இலங்கையில் சரியோ தவறோ தமிழ் சிங்களம் மக்களிடம் முதன் முதலில் அறிமுகமாக பெயர் பெற்ற தலைவரான உமா மகேஸ்வரன் மரண தண்டனை என்பது மிக அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தியாகும். இந்தக் கொலையை நாங்கள் தான் செய்தோம் என்று உரிமை கூறும் தோழர்கள் எவ்வளவு விசுவாசமாக இயக்க வளர்ச்சியில் இருந்திருப்பார் கள். அவர்களை எந்த அளவு சித்தார்த்தனும் மாணிக்கம் தாசனும் மன மாற்றம் செய்திருப்பார்கள் என்பதை அறிய வேண்டும்.
கொலை நடக்கும் போது சித்தார்த்தன் புத்திசாலித்தனமாக சென்னை வந்து விட்டார். அதோடு கொலை நடக்கும் முதல் நாள் தான் சென்னையிலும் இல்லாமல் யாழ்ப்பாணத்தில் அமுதலிங்கத்தின் செத்த வீட்டில் இருப்பதாக காட்டிக் கொள்ள இந்திய அமைதிப்படை விமானத்தில் யாழ் போய் விட்டார். மாணிக்கந்தாசன் வவுனியா போய்விட்டார்.
16/07/1989 உமா மகேஸ்வரனின் மரண தண்டனைக்கு பின் ஆச்சி ராஜன் உட்பட ஏழு பேர் தாங்கள்தான் மரண தண்டனை கொலைக்குபொறுப்பு என ஆனந்தி அண்ணாவிடம் கூறி நடந்த உண்மைகளை கூறியுள்ளார்.
இதற்குப் பின்பு வவுனியாவில் இருந்த தோழர்கள் இந்தியா அமைதிப்படையா கைது செய்யப்பட்டு இருந்த தோழர்கள் எல்லோரும் கடுங் கோபத்தில் இருந்திருக்கிறார்கள் அவர்களுக்கு மாணிக்கம் தாசன் மேல் சந்தேகம். ஆனால் மாணிக்கம் தாசன் தான் தப்புவதற்கு உரிமை கூறிய ஆறு பேரும் பெருந்தொகையான பணத்தை தலைவருக்கு தெரியாமல் கொள்ளையடித்ததால் அவரிடமிருந்து தப்பா உமாவை கொலை செய்து விட்டார்கள் என்று கூறியுள்ளார் அதையும் அந்த முட்டாள் தோழர்கள் நம்பியுள்ளார்கள் இன்று வரை. சொந்த தேவைக்காக ஒரு பெயர் பெற்ற தலைவரை கொலை செய்த விட்டு நாங்கள் தான் செய்தோம் என்று யாராவது கூறுவார்களா.
மாணிக்கதாசன் பேச்சைக் கேட்டு சித்தார்த்தனம் தடுமாறி விட்டார். என்னிடம் தான் இலங்கைபோய் எல்லாவற்றையும் சரி செய்து இயக்கத் தோழர்களை கூட்டி நடந்த உண்மைகளை கூறி தொடர்ந்து வேலை செய்வோம் என்று கூறிவிட்டு போனவர். இலங்கை போய் வவுனியா தோழர்களின் ஆவேசத்தை பார்த்து பயந்து போய்விட்டார். சித்தார்த்தனம் மாணிக்கதாசன் கலந்து பேசி எனக்கு போன் எடுத்துக் கூறினார்கள் இங்கு நிலைமை சரியில்லை அந்த ஏழு பேரையும் கொஞ்ச காலம் சென்னையில் எனது பொறுப்பில் தங்கி இருக்க அனுப்புவதாகவும் நிலமை ஓரளவு சரி வந்த பின்பு உண்மையை கூறி எல்லோரும் வேலை செய்வோம் என்று கூற நானும் இலங்கை நிலை அறிந்து ஒத்துக் கொண்டேன். சென்னைக்கு வந்த தோழர்கள் தனியாக வேறு இடத்தில் தங்க வைத்திருந்தேன்.
சித்தார்த்த தினதும் மாணிக்கம் தாசன் அவர்களும் தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதை அறிந்து ஏழு பேரும் கோபப்பட்டார்கள். சில இயக்கத் தோழர்களே சந்தித்த உண்மைகளை கூறினார்கள்.
இது மாணிக்கம் தாசனுக்கு மிகப்பெரும் பிரச்சனையை கொடுத்தது. ரகசியமாக சென்னை வந்த மாணிக்கம் தாசன் என்னிடம் இனிமேல் உமா மகேஸ்வரன் தவறுகள் செய்ததால் தண்டனை கொடுத்தோம் என தோழர்கள் இடமும் மக்கள் இடம் கூறி இயக்கத்தை வளர்க்க முடியாது. உமா மகேஸ்வரன் பெயரை வைத்து தான் வளர்க்க வேண்டும். ஜனாதிபதி பிரேமதாசா இலங்கை ராணுவ அதிகாரிகள் எங்களுக்கு முழு உதவியும் செய்கிறார்கள். அதனால் இனிமேல் மரண தண்டனை பற்றி யாரிடமும் கதைக்க வேண்டாம். ஆச்சிராஜன் மற்றும் ஏழு தோழர்களையும் ரகசியமாக வெளிநாடு போகும் படியும் கூறினார். அதை ஆச்சிராஜனும் நண்பர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை நானும் ஏற்றுக் கொள்ளவில்லை. இயக்கத் தோழர்களே மத்திய குழுவை கூட்டி உண்மையை குறும்படி கூறினோம்.
ஆனால் சித்தார்த்தன் மாணிக்கம் தாசன் அவர்களை கொலை செய்து உண்மையை மறப்பதிலேயே குறியாக இருந்தார்கள். கடைசியில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த எனக்கும் அந்த கொலையில் சம்பந்தப்படுத்தி மரண தண்டனை என்று கூறினார்கள்.
அதோடு முதலில் அவர்கள் கூறிய காரணம் பணம் கொள்ளை சம்பந்தமாக நடந்த கொலை என்று. பின்னால் என்னையும் சேர்க்க வசதியாக இந்திய உளவுத்துறை ரா இதற்கு காரணம் என்று இலங்கை அரசின் பிரச்சாரத்துக்கு அமைய அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
இன்று வரை தமிழீழ மக்கள் விடுதலை கழகம் உமா மகேஸ் வரன் படுகொலை பற்றி ஒரு அறிக்கை யாரையும் குற்றம் கூறி விடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
சித்தார்த்தனன் மற்றும் மாணிக்கம் தாசன் பதவி பணம் ஆசையால் உண்மைகளை மறைத்து ஏழு பேரை பலியாக்கிய சம்பவம் மிகவும்துரோகத்தன செய்கை யாவும். பதவியும் பணமும் எப்படி எல்லாம் மனிதர்களை மாற்றுகின்றன.
1989 ஆண்டு புளொட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரன் மரண தண்டனை பின்பு, மரண தண்டனைக்கு தலைமை தாங்கிய சித்தார்த்தனுக்கும் மாணிக்கம் தாசனுக்கும் தங்கள் இந்த கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தால் பதவி பணம் அதோடு வவுனியாவில் இருக்கும் தோழர்களால் கூட தங்கள் கொலை செய்யப்படலாம் என்ற நிலை, அடுத்த பக்கம் கழகத்தின் நன்மைக்காக இவர்கள் பேச்சைக் கேட்டு, உமாவின் மரண தண்டனையை தாங்கள் தான் செய்தது என்று பொறுப்பெடுத்துக் கூறிய ஏழு தோழர்களின் நிலை, இதற்கு இடையே இவர்கள் இருவருக்கும் இடையில் எனது நிலை மிகவும் சங்கடத்தை கொடுத்தது.
சித்தார்த்தன், மாணிக்கம் தாசன் இயக்கம் வளர உமா மகேஸ்வரன் பெயர் தேவைப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி பண ஆயுத உதவிகள் செய்ய தயாராக இருக்கிறார். அதோடு வவுனியாவில் இருந்த தோழர்களே பகைத்து கொள்ளவும் முடியாது. அதனால் கொலையை பொறுப்பெடுத்த 7 பேரும் வாய் மூடி உண்மைகளை கூறாமல் ரகசியமாக வெளிநாடு போய்விட வேண்டும், வெளிநாடு போக பண உதவி செய்வதாக கூறினார்கள். அவர்கள் மறுத்து தோழர்களிடம் உண்மையை கூறுவோம் என்று அடம் பிடித்தாள் அவர்கள் பணத்தை திருடியதற்காக கண்டுபிடித்ததால் தலைவரை கொலை செய்ததாக கூறி அவர்கள் 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து கொலை செய்யப் போவதாக கூறினார்கள்.
ஆனால் ஆட்சி ராஜன் உட்பட ஏழு பேரும் இதற்கு உடன்படவில்லை. தலைவரின் தவறுகள் தெரிந்தும் கடைசி வரை அவருக்கு நம்பிக்கையாக வேலைகள் செய்து வந்தாலும் தலைவரை விட இயக்கம் முக்கியம் என்று நினைத்ததும் சித்தார்த்தன் உமா மகேஸ்வரன் பற்றிய ஆரம்ப காலம் தொட்டு அவர் எப்படி எப்படி எல்லாம் இயக்கத்துக்கு துரோகம் செய்தார் என்றும் இலங்கை கொலைகார பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுல முதலி நட்பை வைத்துக்கொண்டு இயக்கத்தின் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இலங்கை அரசுக்கு எதிராக போராடாமல் தமிழ்நாட்டில் முகாம்களில் அடைத்து வைத்திருந்தது, இந்தியா இயக்கங்களுக்கு செய்த பயிற்சிகள் ஆயுதங்கள் பற்றிய விபரங்களை இலங்கை அரசுக்கு கொடுத்தது பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாத பல விடயங்களை எங்களிடம் கூறி எங்களை தலைவருக்கு எதிராக மனம் மாறச் செய்தார். அவருக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டு பேசாமல் இருந்திருந்தால் விடுதலை புலிகள் அல்லது அரசாங்கத்தின்பச்சை புலிகள் கொலை செய்திருக்கலாம் என்று வந்திருக்கும். நாங்களும் தொடர்ந்து இயக்கத்தின் இருந்திருக்கலாம் எக்கத்தை நல்ல வழியில் நடத்தி இருக்கலாம் என்று கூறினார்கள். தாங்கள் செய்த தவறு சித்தார்த்தன் மாணிக்கதாசன் பேச்சைக் கேட்டு பேச்சை நம்பி பெயர் கொடுத்து உரிமை கோரிய விஷயம் தான் தங்களுக்கு பாதகமாக போய்விட்டது. உரிமை கூற சொன்ன சித்தார்த்தனம் மாணிக்கம் தாசனும் தாங்கள் கூறியபடி தோழர்களிடம் உண்மையிலேயே மறைத்து தங்களை பலிக்கடா ஆக்கிவிட்டார்கள் என கோபப்பட்டார்கள்.
நானும் எல்லா உண்மைகளையும் தெரிந்தபடியால் இந்த ஏழு பேருக்கு எனது முழு ஆதரவையும் கொடுத்து மாணிக்கம் தாசனே பகைத்து கொண்டேன். எனக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட்டது இயக்கத்தால்.
அதோடு பிரேமதாசாவின் ஏற்பாட்டில் ஒரு ரகசியம் பிரச்சாரம் செய்யப்பட்டது அது இந்தியாவின் உளவுத்துறை ரா ஏற்பாட்டில் தான் இந்த கொலை நடந்ததாக. அந்தக் கதை இன்று வரை தொடர்கிறது. தைரியம் இருந்தால் இயக்கம் தலைவர் கொலை பற்றி தங்களது கடிதத் தலைப்பில் ஒரு அறிக்கை இந்தியாவை சம்பந்தப்படுத்தி இன்று வரை விடவில்லை. 1986 ஆம் ஆண்டு திம்பு பேச்சு வார்த்தையின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியே பயமுறுத்த இலங்கை அரசு தனது ரகசிய telo இயக்கத் தொடர்பு மூலம் தர்மலிங்கத்தையும் ஆலால சுந்தரத்தையும் கொலை செய்தார்கள். உடனடியாக அந்த பலி விடுதலை புலிகள் இயக்கம் மேல் விழுந்தது. எல்லோரும் விடுதலைப்புலி இயக்கத்தை கண்டனம் செய்தார்கள். விடுதலைப் புலிகள் இயக்கமும் மறுத்தார்கள். ஆனால் விரைவில் telo இயக்கம் செய்த கொலை பற்றியஉண்மைகள் வெளிவந்தன. பேச்சு வார்த்தைகளில் இந்திய அரசாங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணியை முன்னிறுத்தியே பேச்சு நடத்தியது இது எந்த ஒரு இயக்கத்திற்கும் பிடிக்கவில்லை. அதனால் telo எக்கன் தான் செய்தது என்று தெரிய வந்தவுடன் உடனடியாக இயக்கங்களால் ஒரு கதை பரப்பப்பட்டது இந்தியா உளவுத்துறை ரா சொல்லித்தான்telo செய்தது என்று. அப்போது இந்த விடயம் ரகசியமாக பேசப்பட்டது. உண்மையில் அவர்களை கொலை செய்வதால் இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லை. எப்படி திம்பு பேச்சு வார்த்தையில் இரண்டாவது கூட்டத்துக்கு telo சார்பாக இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் நெருங்கிய நண்பர் சத்தியேந்திரா கலந்து கொண்டார். எப்படி நடந்தது. இந்தியா நடத்திய திம்புபேச்சு வார்த்தை வெற்றி பெறக் கூடாது என்பது இலங்கை அரசின் நோக்கம் அதை கச்சிதமாக சத்தியந்திரா.நிறைவேற்றினார். விடுதலை இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தியா முன்னுறுத்தியது பிடிக்கவில்லை. அன்றைய காலகட்டங்களில் இலங்கை உளவுத்துறையும் தங்கள் தங்கள் சக்திக்கேற்ப இயக்கங்களில் தொடர்புகள் ஏற்படுத்தி ஊடுருவி இருந்தது உண்மை.
பல விடயங்களை எழுதுபவர்கள் கடந்த காலத்தில் நடந்த பல உண்மைகளை மறைத்து அளவு தெரியாமலே பல ஆய்வுகட்டுரைகளை எழுதுகிறார்கள்.
உமா மகேஸ்வரன் கொலை பற்றிய உண்மைகளை எழுதவும், ஏழு பேரை காப்பாற்றும் விடயத்திலும் நான் இழந்தவைகள் ஏராளம். கடந்த 34 வருடங்களாக மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன். மனதுக்கு உண்மையின் பக்கம் நின்றது மன நிறைவை தந்தாலும், இன்று புற சூழ்நிலைகள் பொருளாதார நிலை என்னைஒரு முட்டாளாக நினைக்கவைக்கிறது. பணம் தான் முக்கியம் என்று சூழ்நிலைகள் புரிய வைக்கின்றது.யார் எப்படி போனாலும் கவலை இல்லை என்று நினைத்து, என் பாட்டில் வெளிநாடுகளுக்குப் போய் இருந்தால் பல கோடிகளுக்கு பல வீடுகளுக்கு பல கார்களுக்கு சொந்தக்காரனாக குடும்பத்தினரையும் மகிழ்ச்சியாக வெளிநாட்டு பயணங்களுக்கு டூர் போக கூடியதாக எனது வாழ்க்கை அமைந்திருக்கும்.
யாருக்காக போராடி உண்மையை எழுதி வெளிகொண்டு அந்த ஏழு பேரில் 5 பேர் வெளிநாடுகளில், ஒருவர் குடித்தே இந்தியாவில் மரணம் ஒருவர் மனைவியுடன் ஸ்விஸ் நாட்டில் கொலை செய்யப்பட்டார்.
இந்த உண்மைகளை எல்லாம் எழுத வேண்டும் என்று என்னை தூண்டிய தம்பி சுரேஷ், அவருக்கு முழு உண்மைகளும் தெரியும். கொரோனா காலத்தில் நான் இறந்து விட்டாலும் உண்மைகள் வெளிவர வேண்டும் என்று விரும்பி எல்லா உதவிகளையும் செய்தவர் சுரேஷ். இப்போது எனக்கு இருந்த பொருளாதார கஷ்டத்தில் அவர்தான் உதவிகளும் செய்தார். தினமும் என்னை தூண்டி தூண்டி தூண்டி எழுத வைத்த சுரேஷ்நான் முப்பதாவது பகுதி எழுதிஇருக்கும்போது சுரேஷ் லண்டனில் மரணம் அடைந்து விட்டார். அவருக்காகவே தொடர்ந்து முழு உண்மைகளையும் எழுதி முடித்தேன்.
No comments:
Post a Comment