1987 ஆம் ஆண்டு முதலில் ஏற்றுக்கொண்டஇந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக தமிழீழ விடுதலை புலிகள் இந்திய அரசுக்கு எதிராக ஒரு சாகும்வரைஉண்ணாவிரதத்தை மேற்கொண்டார்கள். தமிழீழ விடுதலை புலிகள் அகிம்சை வழி உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. ஆரம்ப காலத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருந்த உண்ணா விரதத்தில் மாணவர்கள் அடித்து விரட்டப்பட்டு உண்ணாவிரதம் இருந்த மாணவிகள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டார்கள்.
அந்த காலகட்டத்தில் எங்களுக்கு பலவிதத்திலும் கிடைத்த தகவல்கள் பற்றிய விபரங்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நிருபர்கள் தலைவர்கள் மூலம் பல செய்திகள் கசிந்தன.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் எல்லா ஆயுத இயக்கங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விடுதலை புலிகளுக்கு மட்டும் தாங்கள் இயக்கத்தையும் தங்கள் தலைவரையும் மட்டுமே ஏகப்பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டு கடைசியில் இந்திய அரசு மற்ற இயக்கங்களிடமும் அரசியல் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவர்களையும் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக கையெழுத்து வாங்கியது விடுதலைப் புலிகளுக்கு கடுமையான கோபத்தை உண்டு பண்ணியது. ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு இந்திய விமானங்களில் புதுடில்லி வந்த விடுதலை புலிகள் இயக்கம், தங்கள் இயக்கம்மட்டுமே ஒரே பிரதிநிதி என்ற கருத்தை கேட்காமல் மற்ற இயக்கங்களையும் கையெழுத்து போடச் சொன்னது தான் இலங்கை ஒப்பந்தத்தை புலிகள் ஏற்காமல் போனதற்கான காரணமாகும். பிறகும் பிற்காலத்திலும் ஆயிரம் குற்றம் குறைகள் சொன்னாலும் அதுதான் உண்மை இந்தியா இலங்கை ஒப்பந்தத்தை வேறு எந்த ஆயுதம் தூக்கிய இயக்கங்களும் ஏன் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அன்றைய சூழ்நிலை இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை இந்திய மத்திய அரசு தனது பொறுப்பு என்று கூறியதை ஏற்றுக்கொண்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார்கள். அதோடு இடைக்கால அரசில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட மற்ற இயக்கங்கள் ஏற்றுக் கொண்டன.
அந்த ஒப்பந்த காலத்தில் டெல்லியில் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா ஹோட்டல்லிலிலும், மற்ற இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் தங்கியிருந்த ஹோட்டல் சாம்ராட் நடந்த பேச்சு வார்த்தைகள் கருத்து மோதல்கள் பற்றி எல்லாம் எந்த விடுதலை இயக்கங்களும் வெளியில் விரிவாக சொல்லவில்லை. காரணம் எல்லா இயக்கங்களும் மூட்டை முடிச்சுகளோடு தங்கள் தாயகத்துக்கு திரும்பும் பணியில் மும்முறமாக இருந்தன. விடுதலைப்புலிகளும் அதன் ஆதரவாளர்களும் சொன்ன கருத்துகள் தான் இன்று வரை எல்லோரும் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறார்கள். பல உண்மைகள் மறைக்கப்பட்டன. ஆப்ரேஷன் லிப்ரேஷன் காலத்தில் பாலசிங்கம் சென்னையிலும் டெல்லியிலும் மாறி மாறி இந்தியா படை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இலங்கையை எச்சரித்து வடமராட்சி படையெடுப்பை கைவிட செய்ய வேண்டும் என்று கெஞ்சியது மறைக்கப்பட்டது. பாலசிங்கம் அன்று இந்தியாவுக்கு கூறிய காரணம் வடமகாணம் இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டால் இந்திய அரசாங்கம் இலங்கையில் எக்காலத்திலும் அரசியல் ராணுவ ரீதியில் தலையிட முடியாது என்று. அன்று இந்தியாவில் அரசியல் ரீதியில் போபோஸ்பீரங்கி பேர ஊழல் பத்திரிகைகளில் தலையங்க செய்தியாக இந்தியா முழுக்க வலம் வந்து கொண்டிருந்தபடியால், அதை திசை திருப்ப பாலசிங்கத்தின் கோரிக்கை சரியான முறையில் திட்டமிடப்படாமல் அவசர அவசரமாக இந்திய அரசால் இலங்கை இந்திய ஒப்பந்தம்ஏற்படுத்தப்பட்டது மட்டுமே உண்மை
ஒப்பந்தத்துக்குப் பின்பு விடுதலைப் புலிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் பிரபாகரனால் ஓர் அரசியல் தலைவராக வலம் வர முடியாமல் இருந்துள்ளது. காரணம் அரசியல் தலைவர் பல விட்டுக்கொடுப்புகள் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி தலைமை தாங்க வேண்டும். சிறு வயதிலிருந்து ஆயுதத்தை மட்டுமே நம்பி போராட்டத்தை நடத்திய பிரபாகரனால் ஆயுதத்தை கைவிட்டு பொதுவெளியில் வர முடியாமல் இருந்தது அதோடு பயமும் இருந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் இலங்கை தமிழ் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்றுந்தார்கள். மக்கள் மட்டுமல்ல விடுதலைப்புலிகள் இயக்கத் அங்கத்தவர்கள் கூட தங்களுக்கு அமைதியான வாழ்க்கை இனி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்திய அமைதிப்படை வீரர்களுக்கு பலவித வரவேற்புகள் கொடுத்ததாக செய்திகள் வந்தன.
மக்களின் மனமாற்றம், விடுதலைப்புலி அங்கத்தவர்களின் மனமாற்றம் என்பன விடுதலை புலி தலைவரின் மனதில் பெரும் அச்சத்தை தோற்றுவித்தது என்பது உண்மை பலருக்குத் தெரியும் அதைப் பற்றிய செய்திகள் இந்திய பத்திரிகையாளர்களிடம் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ஒப்பந்தம் முற்று முழுதாக நடைபெற்றிருந்தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மக்கள் ஆதரவு குறைந்திருக்கும் என்பது உண்மை. அதனால் விடுதலைப் புலிகளின் தலைவர் ஒப்பந்தத்தின்படி இடைக்கால நிர்வாகத்துக்கு மூன்று பெயர்களை கொடுக்கவும் அதில் ஒருவரை இலங்கை ஜனாதிபதி தெரிவு செய்வார் என்ற நிலையில் அதை ஏற்றுக் கொண்ட விடுதலைப்புலிகள் தாங்கள் கொடுத்த மூன்று பேர்களில் ஒருவரை இலங்கை ஜனாதிபதி தெரிவு செய்ய அவரை தேர்வு செய்யக்கூடாது மற்றவர் தெரிவு செய்யுங்கள் என்று பிடிவாதம் பிடித்து இடைக்கால நிர்வாக சபையை இல்லாமல் செய்தார்கள். ஒப்பந்தப்படி விடுதலைப் புலிகள் கொடுத்த மூன்று பேர்களில் ஒருவரை தான் ஜனாதிபதி தெரிவு செய்தார். அப்படி இருக்க ஏன் அவர்கள் அதை மறுத்தார்கள் என்பது புதிரானது முட்டாள்தனமானது.
வடக்கு தமிழ் மக்கள் இந்திய அமைதிப்படைக்கு கொடுத்த வரவேற்பும், விடுதலைப்புலி இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் புலேந்திரன் குமரப்பா போன்றவர்கள் அமைதிப்படை விமானத்தில் போய் வந்து திருமணம் செய்ததும் அமைதிப்படை தளபதிகளின் முன்னிலையில் அவர்களின் ஆதரவோடு திருமணங்கள் நடைபெற்றதும், விடுதலை புலி இயக்கத் தலைவரை சிந்திக்க வைத்தன. வருங்காலத்தில் தனது முக்கியத்துவம் குறைந்து விடும் என்று நினைத்து தமிழ் மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் திரும்ப பெற முடிவு செய்து, இலங்கை அரசு இந்திய அரசு ஏன் விடுதலைப் புலிகள் கூட ஏற்றுக் கொள்ளாத சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து பிரச்சினையை திசை திருப்பி தமிழ் மக்களின் அனுதாபத்தை பெற வும் இந்திய அமைதிப்படைக்கு எதிரான மனநிலையை மக்களிடம் விதைக்கவும் முடிவு செய்தார்.
அதற்கு சரியான ஆளாக அவர் தெரிவு செய்தது திலீபன். Telo இயக்கத்தைவிடுதலைப் புலிகள் அழி த்த போது உயிருடன் மற்ற இயக்க போராளிகளை டயர் போட்டு கொளுத்தியவர்களில் திலீபனும் முக்கியமானவர். அதோடு மக்கள் மத்தியில் அரசியல் வேலை செய்து மக்களுக்கு நன்றாக அறிமுகமானவர். அதோடு வயிற்றில் சத்திர சிகிச்சையின் போது அவரது குடலின் பெரும் பகுதி அகற்றப்பட்டு இருந்தார். அவர் தொடர்ந்து உயிர் வாழ கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சாப்பிட வேண்டும் தொடர்ந்து தண்ணி குடிக்க வேண்டும் என்ற நிலையில் தான் அவரின் உடல் நிலை இருந்தது. இவர் உண்ணாவிரதம் இருந்தால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் தான் இவர் தெரிவு செய்யப்பட்டதாக எல்லோரும் கதைத்தார்கள். இவரின் உண்ணாவிரதம் கட்டாயப்படுத்தி நடந்ததாக எல்லோரும் கதைத்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டும் தலைவரின் ஆணைக்கிணங்க கொடுக்கப்படவில்லையாம்.
இலங்கை தமிழ் மக்கள் இந்தியாவை பாவம் புண்ணியம் பார்க்கும் நாடு என்று நம்பினார்கள் அவர்களுக்கு தெரியாது மகாத்மா காந்தி திரும்ப வந்து உண்ணாவிரதம் இருந்தால் கூட சாகும் வரை இந்திய அரசாங்கம் விட்டு விடும். மகாத்மா காந்தி உண்னா விரதம் இருந்தது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக.
திலீபனின் மரணம் விடுதலைப் புலிகளுக்கு ஒரு திருப்புமுனை. மக்களின் மனநிலை இந்திய அரசுக்கு எதிராக மாறதொடங்கியது.
அடுத்தது குமரப்பா புலேந்திரன் மற்ற போராளிகள் கடலில் வரும் போது இலங்கை அரசிடம் பிடிபட்டபோது சைனைட் அருந்தவில்லை. அவர்களை விடுதலை செய்ய விடுதலைப் புலிகள் தலைமை இந்திய அரசாங்கத்திடம் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவசரம் அவசரமாக பால சிங்கம் ,மாத்தியாவிடம் சைனைட் கொடுத்து விடப்பட்டு உண்மையில் கொலை செய்யப்பட்டார்கள். இவற்றை ராஜதந்திர ரீதியில் அணுகி இருந்தால் விடுதலை புலிகளுக்கு பெரும் வெற்றி பெற்றிருக்கும். புலேந்திரன் குமாரப்பா கொழும்பு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டு கொலை அல்லது சித்திரவதை செய்யப்பட்டு இருந்தால் இந்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் அதை விடுதலைப்புலிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்க வேண்டும். அவசரம் அவசரமாக புலேந்திரன் குமரப்பா சைனைட் கொடுத்து கொலை செய்யப்பட்டதற்கு அவர்களின் திருமணம் இந்திய அமைதிப்படை தளபதிகளின் உறவு போன்றவையே அவர்களின் மரணத்துக்கு காரணம் என்ன ரகசியமாக எல்லோராலும் பேசப்பட்டது.
அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட இந்தியா அமைதிப்படையையும் இந்தியாவையும் மட்டுமே விடுதலைப்புலிகள் பெருமளவு எதிர்த்தார்கள். இலங்கை அரசை இலங்கை ராணுவத்தை இதோடு சேர்த்து அவர்கள் எதிர்க்கவில்லை. மறைமுகமாக இந்தியாவை எதிர்ப்பதற்கு இலங்கை அரசுடன் ரகசிய கூட்டு வைத்துக் கொண்டார்கள். அன்று இலங்கையில் இந்தியாவை தோற்கடிக்க, இந்திய அரசியலில் ராஜீவ் காந்தியை அப்புறப்படுத்த அமெரிக்க உளவுத்துறை பெரு முயற்சி விடுதலைப்புலிகளுடன் சேர்ந்து செய்ததாக நிருபர்கள் மறைமுகமாக செய்திகளை கூறினார்கள். இலங்கையில் திடீரென இந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் போனது உலக வல்லரசு நாடுகளுக்கு பிடிக்கவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர்.
அன்று1987 ஆண்டு விடுதலைப் புலிகள் விட்ட தவறை இன்று இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளும் விடுகின்றன. 2009 சண்டை ஓய்ந்தபின் இலங்கை அரசு வடக்கு கிழக்கு தமிழர் பகுதி எல்லாம் சிங்கள குடியேற்றங்கள் முஸ்லிம் குடியேற்றங்கள் ராணுவ முகாம்கள் அமைத்து
தமிழர்களே எலிப் பொறியில் வைத்திருக்கின்றன. இன்று இலங்கைத் தமிழர்களின் ஆதரவற்ற குரலை கேட்க எந்த உலக நாடுகளும் தயார் இல்லை. ஆனாலும் தமிழ் மக்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள் வாக்கு வேட்டையாட தமிழர்களை பாதிக்கக் கூடிய விதத்தில் செயல்படுகிறார்கள்.
இலங்கையில் இன்று சிங்கள மக்கள் சிங்கள அரசியல் தலைவர்களின் பொய்யான அவர்கள் சிங்கள மக்களுக்கு செய்த துரோகங்களை தெரிந்து கொண்டு சிங்கள முக்கிய தலைவர்களை எதிர்க்கிறார்கள். இதுவரை காலமும் சிங்கள தலைவர்களுக்கு கை கொடுத்து வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழர் எதிர்ப்பு பிரச்சாரம் இனிமேல் கை கொடுக்காது என்ற நிலையில் இருக்கும்போது, ரகசியமாக சில தமிழ் தலைவர்கள் சிங்கள தலைவர்களை திரும்பவும் சிங்கள மக்கள் மத்தியில் உயிர் பெற தமிழர் ஆதரவு போராட்டங்களை ஆரம்பித்துள்ளார்கள். இதில் முக்கியமானது திலீபனின் உயிர் தியாகத்தை வைத்து ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும், செய்வது. அதோடு தமிழ் பிரதேசம் என்ற நிலையில் இருந்து சிங்களப் பிரதேசம் என்ற நிலைக்குப் திரிகோணமலைமாவட்டமாகும். திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் வடக்கு தலைவர்கள் அதாவது சிங்கள தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற இப்படியான போராட்டங்கள் செய்வது தவிர்க்கப்பட வேண்டும்.
அங்கு போராட்டங்கள் முடிந்தவுடன் ஜெனிவா ஓடுவார்கள் உலக நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று.
அவர்கள் உண்மையில் மாவீரர்களுக்காகவோ, மறைந்த உண்மையான போராளிகளுக்கு ஆதரவாகவோ திலீபனுக்கு ஆதரவாகவோ போராட்டங்கள் நடத்துவதில்லை. ஒன்று வாக்கு அரசியலுக்காக இவர்களை நினைவு கூர்ந்து தாங்கள் தான் உண்மையான தமிழ் தலைவர்கள் என்று படம் காட்ட. அடுத்தது இவர்களின் தமிழர் ஆதரவு ஆன போராட்டங்கள் மூலம் அரசாங்கம் தமிழர்களே திரும்பவும் கடும் கண்காணிப்பில் கொண்டு வர வசதியாக இருப்பது. அடுத்தது இன்று மக்கள் ஆதரவு இல்லாமல் இருக்கும் இனவாதி அரசியல்வாதிகளை திரும்பவும் தமிழர் எதிர்ப்பு பிரச்சாரங்கள் மேற்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற வைப்பது என்பது மட்டுமே இவர்கள் நோக்கமாகும்.
மறைந்த மாவீரர் மாவீரர் தலைவர்களுக்கு இவர்கள் உண்மையாக அஞ்சலி செலுத்த விரும்பினால் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் போரினால் கை கால் இல்லாமல் வாழ்க்கையே கேள்விக்குறியாக்க இருக்கும் உண்மையான முன்னாள் போராளிகளுக்கு உதவி செய்து அவர்களுக்கு நீங்கள் செய்ய உதவி மறைந்த போராளிகளுக்கு உண்மையாக நீங்கள் செலுத்தும் அஞ்சலியாகும். உண்மையாக போராடிய போராளிகள் வாழ்வதற்கே கஷ்டப்படும் போது உங்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் சோசுக்கார்கள் சிறந்த வாழ்க்கை பெரிய வீடுகள் சிங்களப் பகுதிகளில் சொத்துக்கள் எல்லாம் எப்படி வந்தன என்றும் எப்படி வருகின்றன.
இலங்கையில் கடைசி தமிழன் அழியும் வரை உங்கள் தமிழர் ஆதரவு என்ற போலி போராட்டங்கள் தொடருமா.
No comments:
Post a Comment