எனக்கு அடிக்கடி சில நண்பர்கள், சில முகநூல் நண்பர்கள் எனக்கு சில கடுமையான அறிவுரைகள் கூறுவார்கள். அதாவது முகநூலில் நான் இயக்கங்களை பற்றி அதன் தலைவர்கள் பற்றி உண்மைகளை எழுதி, வளர்ந்து வரும் இளைஞர்களிடம் அந்தத் தலைவர்கள்பற்றிய நம்பிக்கையை உடைப்பதாகவும், கடந்த காலத்தை மறந்து விடும்படியும் ஆலோசனை கூறுவார்கள் எனக்கு எழுதுவார்கள்.
நான் மக்களுக்கு எதுவும் நன்மை செய்ய வேண்டுமாயின், இலங்கையில் தமிழர்கள் படும் கஷ்டங்களையும், ராணுவம் சிங்கள அரசாங்கங்கள் தமிழருக்கு செய்யும் கொடுமைகளை பற்றி வெளிநாட்டு தூதுவர்களுக்கு, பத்திரிகையாளர்களுக்கு விபரங்கள் கொடுத்து இலங்கை தமிழர்கள் உரிமை பெற உதவி செய்யுங்கள், இதே வேலையை தானே முன்பு நீங்கள் செய்தீர்கள் என கூறினார்கள். ஆம் உண்மைதான்1980 ஆண்டு காலங்களில் இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு உமது இலங்கை தமிழர் பிரச்சனை பெரிதாக தெரியவில்லை. அப்போது இந்தியாவில் இருந்த இயக்கங்கள் இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் விடயங்களை ஊதி பெரிதாக்கி பொய்களை கூறினோம். அதற்கேற்றால் போல் தமிழ்நாட்டு பத்திரிகைகள் , வார, மாத இதழ்கள் இலங்கையில் 5 பேர் செத்தால் 100 பேர் செத்ததாக தலைப்பு செய்தி போடுவார்கள். இந்த செய்திகளை தான் எல்லா இயக்கங்களும் தமது பிரச்சாரத்திற்கும் வெளிநாட்டுக்கு அனுப்பியும் ஈழப் போராட்டத்தைப் பற்றி பிரச்சாரங்கள் செய்தன.
இலங்கை அரசின் மிக நண்பனாக இருக்கும் தமிழ்நாட்டில் இந்து பத்திரிகை ராம் அவர்களை யும், அவரின் பிரண்ட்லைன் பத்திரிகையும் பிரபலியம் ஆகிறது தமிழீழ விடுதலைப் புலிகள். ஹிந்து ராம் அடிக்கடி விடுதலை புலிகள் பற்றிய செய்திகளை மூன்று நான்கு பக்கங்களில் வெளியிடுவார்கள். அப்போது ஆயிரக்கணக்கான பிரண்ட்லைன் பத்திரிகையை, முன் பக்கத்தையும், விடுதலைப்புலிகள் பற்றி செய்தி வந்த பக்கங்களையும் மட்டும் அச்சடித்து புதிதாக, முழு பத்திரிகை விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி ஒரு டாலர் ஒரு பவுன்ஸ் என்று விற்பார்கள். இதுவும் ஒரு பிரச்சாரம். அதே மாதிரி ஜூனியர் விகடன் தேவி போன்ற தமிழ் இதழ்களில் உமா மகேஸ்வரன் பேட்டி,புளொட் செய்திகள் வரும்போது நாங்கள் ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி பிரச்சாரம் செய்வோம்.
இன்றைய காலகட்டத்தில் இப்படியான பிரச்சாரங்கள் எடுபடாது.
இன்று இந்தியா உட்பட உலக நாடுகள் இலங்கை உட்பட மற்றும் நாடுகளின் உள்நாட்டு விவகாரங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர். இலங்கையில் நடக்கும் அனைத்து விபரங்களும் அந்தந்த நாடுகளுக்கு உடனடியாக தெரியவரும். ஆனாலும் இலங்கையை விட்டு வெளிநாட்டுக்கு போய் 20 ,30 வருடங்கள் ஆன பின்னரும் சில மேதாவிகள் புத்திசாலிகள் பல மனித உரிமை அமைப்புகளே தங்கள் வசதி கேட்ப அமைத்துக் கொண்டு, தனி நபர்கள் கூட தாங்கள்தான் இலங்கை பிரச்சனை பற்றி முழு விபரங்களையும் வெளிநாடுகளுக்கு கூறி வருவதாகவும், அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பேசியதற்கு தங்களின் பிரச்சாரங்கள் தான் காரணம் எனவும் கூறி மற்றவர்களை முட்டாள் ஆக்குகிறார்கள் அதோடு ஜெனிவாவில் நடக்கும் மனித உரிமை மாநாட்டுக்கு வருடா வருடம் போய் தாங்கள் தான் இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை அந்த நாட்டுப் பிரதிநிதிகளுக்கு விளக்கி கூறியதாக தம்பட்டம் அடிப்பார்கள். அப்படியானால் அந்த நாடுகளுக்கு ஒன்றுமே தெரியாதா. இன்னும் சிலர் இலங்கை ஜனாதிபதியையும் பிரதம மந்திரியும் சந்தித்து ஆசி பெற்று , இலங்கையில் தமிழர்களுக்கு நடக்கும் கொடுமையை ஜெனிவாவில் பிரச்சாரம் செய்யப் போவதாக கூறி போவார்கள். இன்று இவர்களையும் தமிழ் மக்கள் நம்புகிறார்கள்.
இந்தியாஉட் பட உலக நாடுகள் தங்கள் தங்கள் தேவைக்கேற்ப இலங்கை தமிழர் பிரச்சினையை ஊதி பெரிதாக்கி, இலங்கை அரசைபயமுறுத்தி இலங்கையில் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை. இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகள் மற்றும் பாதுகாப்பு வருங்காலத்தில் தேவை என்றால் சிங்கள பொது மக்களின் மனமாற்றமே உதவி புரியும். இலங்கையில் இருக்கும் தமிழ்இளைஞர்கள் ஓரளவு சரி சிங்கள மக்களுக்கு நிலைமைகளை விளக்கி ஒற்றுமையை ஏற்படுத்த முன் வர வேண்டும். இன்றும் பலர் உலக நாடுகள் சரி, இந்தியாவும் சரி பிரச்சினையை தீர்க்கக் கூடியவர்கள் என்று பிரச்சாரம் செய்வது பொய். இவர்களால் இருக்கும் தமிழர்களை அழிக்க மட்டுமே முடியும். நாடு கடந்த அரசாங்கம், மற்றும் பல லெட்டர் பேட் தமிழ்மனித உரிமைகள் அமைப்புகள் தனி நபர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டாம். தங்களை வளர்த்துக் கொள்ளவும், தங்களை இலங்கை தமிழ் காவலர்களாக காட்டிக் தங்கள் வசதியே மட்டுமே வளர்ப்பது இவர்கள் நோக்கம். மனித உரிமை அமைப்பில் உள்ள நாடுகள் எல்லாம் திரும்பிப் பார்த்தால் உலகத்தில் மனித உரிமை மீறியவர்களே அவர்கள் தான்.
தயவுசெய்து நண்பர்கள் அந்த காலம் மாதிரி இப்பவும் எமது பிரச்சினையை பத்திரிகையாளர், சர்வதேச நாடுகளிலும் பிரச்சாரம் செய்யும் படி கேட்க வேண்டாம். இன்று பிரச்சாரம் என்பது ஒரு ஏமாற்று வேலை.
No comments:
Post a Comment