பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 15 September 2023

இது ஒரு பழைய பதிவு. இன்று புது போராளியாக தன்னைக் கூறிக்கொள்ளும் நிலா என்பவருக்கு அவரது பழைய பெயர் காவியா என்பவருக்கு கொடுத்த பதில்

  வெற்றிசெல்வன்       Friday, 15 September 2023
வணக்கம் தோழர்களே நண்பர்களே
அந்தோணியின் தான் பட்ட சித்திரவதையின் பதிவை நான் திரும்ப போட்டதற்கு காரணம் தமிழ் விடுதலை இயக்கங்கள் சொந்த தமிழர்களேஎப்படி எல்லாம் சித்திரவதை செய்திருக்கிறார்கள் கொன்றார்கள் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் இனி வரும் காலங்களில் ஒரு விடுதலை போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆல், இத்தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும், யார் எமது உண்மையான எதிரி என்று தெரியவேண்டும்.ஆரம்பத்தில் சிங்கள ராணுவமும் போலீசும் தமிழ் இளைஞர்களை அடித்து சித்திரவதை செய்கிறார்கள் என்று பெருமளவு இளைஞர்கள் விடுதலை இயக்கங்களில் சேர்ந்தார்கள். பின்பு எதிரி செய்தது போல தமிழர்களை தமிழர்கள் சித்திரவதை செய்து கொன்றார்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.புலிகள் மட்டுமல்ல மற்ற விடுதலை இயக்கங்களும் சண்டையின்போது பலரை கொன்று இருக்கிறார்கள். ஆனால் ஆனால் புலிகளும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் plote மும் பெரும் போர் நடக்காத காலங்களில் பெருமளவு தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் கடத்தி சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் இது பாதிக்க பட்டவர்கள் நேரடி சாட்சிகள் உண்மையானதே எழுதவேண்டும் அதை நாங்கள் பிரசுரம் செய்வோம். மக்களுக்கு இவர்களை பற்றிய உண்மை முகம் தெரிய வேண்டும். இந்த அந்தோணியின் பதிவு மாதிரி உண்மையானதாக இருக்க வேண்டும்.
லண்டனைச் சேர்ந்த காவியா என்பவர் இப்படியான பதிவுகளை போடக்கூடாது என்கிறார். இந்தப்பதிவு புலிகளைப் பற்றியல்ல ஒரு தமிழ் விடுதலை இயக்கம் தமிழர்களை எப்படி சித்திரவதை செய்து கொலை செய்தார்கள் என்பதை மக்கள் மட்டுமல்ல, பல புலி உறுப்பினர்களுக்கு கூட தெரியாது. உண்மையான விடுதலையை நேசித்த பல புலி உறுப்பினர்கள் கூட எங்கள் இயக்கமா இப்படி செய்தது என வருத்தப்படுகிறார்கள். லண்டன் காவியா வுக்காக மேலும் சில உண்மைகளை கேள்விகளாக தருகிறேன்.

லண்டன் வாசி கவியாவுக்கு

லண்டன் வாசி கவியாவுக்கு, 14.09.2019 அன்று தங்கள் பதிவில், “உலகில் உள்ள இராணுவம் அல்லது போராளிகள் கட்டமைப்பு தமக்குத் துரோகம் செய்ததாக ஒருவரை நம்பும் போது அவர்களுக்கு வழங்கும் தண்டனையையே விடுதலைப் புலிகள் கட்டமைப்பும் வழங்கியிருக்கும்” என்று யூகிக்கும் நீங்கள் துணைக்கு அ மெ ரிக்க இராணுவத்தினரையும் சாட்சிக்கு இழுத்துவந்துள்ளீர்கள். 

நன்றி அம்மா! ஏனைய இயக்க உறுப்பினர்கள் ஆறாயிரம் பேர்வரை துணுக்காயிலும் முழங்காவில்லிலும் வைத்து வதை செய்து கொன்றார்கள் புலிகள். ஆறாயிரம் பேருமா துரோகம் செய்தார்கள்? விபரம் தெரியாமல் உளறியுள்ளீர்கள். ஈழத்தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் கொடுத்த தாக்குதலை நீங்கள் நியாயப்படுத்தியுள்ளீர்கள். முள்ளிவாய்க்காலுக்கு இரண்டு இலட்சம் பேரை விரட்டிவந்து படு கொலை செய்ததை நீங்கள் ஆதரித்துள்ளீர்கள். கைது செய்யப்பட்ட அப்பாவிப் போராளிகளையும் பொதுமக்களையும் சிங்கள இராணுவம் சித்திரவதை செய்து கொன்றதை துரோகிகளுக்குக் கிடைத்த தண்டனை என்று சொல்கிறீர்கள்! அப்படித்தானே!

மேலும் எம்மை யும் துரோகிகள் என்று குறிப்பிடுகிறீர்கள். கொலை, கொள்ளை செய்திருப்பீர்கள் அதனால் தான் அவர்கள் தண்டனை வழங்கினார்கள் என்று ஐயம்வெளிப்படுத்தி உள்ளீர்கள். குப்பைகளை கிளற வேண்டாமென்று ஆலோசனை வேறு வழங்கியுள்ளீர்கள். அதுவுமல்லாமல் புலிகள் உயிருடன் இருக்கும் போது இவற்றினை கூற வக்கில்லை என்று பெருமையையும் வெளிப்படுத்தியுள்ளீர்கள். நீங்கள் புலிகளின் நிழலில் வாழ்ந்திருப்பீர்கள், அல்லது புலிகளினால் லண்டனில் லாபம் பெற்றுருப்பீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை, புலிகளின் சித்ரவதைகளை நியாயப்படுத்தி, மற்றவர்களை துரோகிகளாக்கி, சிறுது மிரட்டலும் விடுத்தது பின்னர் ஆலோசனையும் வழங்கியுள்ளீர்கள் புலிகளின் பாணியில்.

கொள்ளை - 1980 ஆம் ஆண்டு மாசி மாதம், குரும்பசிட்டி வன்னியசிங்கம் வீட்டினுள் நுழைந்து கொள்ளையிடப்பட்டதை பற்றி நீங்கள் கேள்வி பட்டுருக்குறீர்களா காவியா? அது கொள்ளை இல்லை களவு! யார் செய்தது என்று தெரியுமா? தெரியவில்லை என்றால் சவால் விட்டு பதிவிடுங்கள், விபரமாக பதில் சொல்கிறோம்.

கொலை - 1976 ஆம் ஆண்டு மைக்கேல் என்னும் போராளியையும், 1979 இல் அப்பன் என்னும் போராளியையும் கொலை செய்தது யார் என்று தெரியுமா காவியா? அவர்கள் இருவருமே புலிகள்தான், தெரியவில்லை என்றல் எழுதுங்கள் பதில் கூறுகிறோம் விபரமாக!

கொலை - 1982 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் யாழ்ப்பாணம் அச்சகம் ஒன்றில் வைத்து மறைந்திருந்து ஒரு போராளியை கொலை செய்தார்  ஒருவர்! அவர் யாரென்று தெரியுமா காவியா? தெரியவில்லையென்றால் கேளுங்கள் சொல்கிறோம்!

மேலே கொலை செய்ய பட்டவர்கள் எல்லாம் துரோகிகளாகக் காணப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் அல்ல! தன்னை மிஞ்சி யாரும் வளர்ந்துவிடக்கூடாது என்பதற்க்காக தானே துப்பாக்கியெடுத்து சுட்டு கொன்றார். அவர்  யாரென்று தெரியுமா காவியா? 

ரெலோ இயக்கப் போராளிகளைக் கொலை செய்தார்களே, எதற்காக? போட்டி, பொறாமை, பேராசை, பதவியாசை போன்ற அற்ப காரணங்களுக்காக 600 போராளிகள் வரை கொன்றொழித்தனர் புலிகள். அந்தத்தமிழ் இளைஞர்களைப்  படுகொலை செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுத்தது? விடுதலைக்காக வந்தவர்களை தெரு தெருவாக இழுத்து வந்து டயர்களில்  போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தீர்களே! மனிதர்களா நீங்கள். உங்கள் கைகளில் ஆயுதங்களும் பணமும் கிடைத்ததும் சிங்கள ராணுவம் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் முன்னின்று செய்தீர்கள், சிங்கள அரசிடம் பாராட்டும் பெற்றீர்கள்! சிங்கள அரசு செய்ய வேண்டிய தமிழின அழிப்பை நீங்கள் செய்துவிட்டு இதுதான் விடுதலைப் போராட்டம் என்று தமிழினத்தை மிரட்டி ஏமாற்றி உள்ளீர்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து இஸ்லாமியரை விரட்டியடித்ததை இப்போதும் நியாயப்படுத்துகிறீர்கள். அதவிளைவு என்னவென்று தெரியுமா காவியா? இதனால் அரபுநாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து இஸ்லாமியருக்குப் பணத்தை வாரி இறைத்தன. கல்வியிலும், பொருளாதாரத்திலும், அரசியலிலும் அசைக்க முடியாத இடத்தினை எட்டிவிட்டனர் இஸ்லாமியர். மடையர்களால் எடுக்கப்பட்ட முடிவுகளால் இன்று கிழக்கு மாகாணத்தை இழக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது. இஸ்லாமியரின் கல்விக்கென்றே கிழக்கில் பல்கலைக்களம் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்றால் அதற்கான முதலீடு அரபுக்களால் வழங்கப்பட்டதே!

துரோகத்தை ஆரம்பித்து வைத்தது யாரென்று தெரியுமா காவியா? குட்டி மணி, தங்கதுரை பிடிபட்டது எப்படி? யாரால் காட்டிக்கொடுக்கப்பட்டது என்பதுபற்றி எல்லாம் தெரியுமா காவியா? தெரியாவிட்டால் பதிவிடுங்கள் விபரமாக தருகிறோம்.

1988 ஆம் ஆண்டு இறுதியில் வெலிஓயா சிங்கள ராணுவ முகாமில் உங்கள் தலைமை தங்கி இருந்து அங்கே ஓர் செயலகத்தை நடத்தி வந்தது உங்களுக்கு தெரியுமா? அங்கே பாதுகாப்புக்கு இருந்த போராளி இன்னுமொரு பெண் போராளியை காதலித்ததும், கர்ப்பமான மூன்றாவது மாதத்தில் அவர்கள் சுட்டு கொல்லப் பட்டது பற்றியும் உங்களுக்கு தெரியுமா காவியா? காதலித்ததற்காக மரணதண்டனை வழங்கியது உங்கள் தலைமை. அதே தலைமை காதலித்துதான் திருமணம் செய்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கதானே வேண்டும் காவியா! அந்த இருவரும் செய்தது துரோகம் என்றால் உங்கள் தலைமை!!

1989 இல் புல்லுமலைக்குச் சென்ற சிங்கள ராணுவத்திடமிருந்து ஆயுதங்களும் அரிசி மூட்டையும் வாங்கி வந்து சகா போராளி இயக்க அங்கத்தினரைக் கொன்றொழித்தார்களே புலிகள். இதை என்னவென்று சொல்வது. விவரம் தெரியத்துவிட்டால் பதிவிடுங்கள், விவரமாக எழுதுகிறோம். எதிரியிடம் ஆயுதம் வாங்கி சகா இயக்கத்தினரைப் படுகொலை செய்வது விடுதலை போராட்டமா காவியா?

ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, ஆனையிறவு முகாம்கள் தாக்குதல்கள் யாரால் நடத்தப்பட்டது? யாருக்குப் பெயர் போய்ச்சேர்ந்தது என்பது பற்றித்  தெரியுமா காவியா? ஏன் கிழக்கு மாகாணப் போராளிகள் நடந்தே மட்டக்களப்புக்குப்  போய்ச்சேந்தர்கள் என்பது பற்றித் தெரியுமா?

துரோகத்துக்கு எடுத்துக்காட்டு புலிகளின் தலைமை! அதில் தோய்ந்து வளர்த்தவர்கள் அவர்கள். இவர்களை நம்பி அப்பாவித்தமிழ் இளைஞர்கள் தங்கள் உயிரை இழந்தது தான் கவலை அளிக்கிறது. புலிகளின் தலைமை சரியானதாக இருந்துருந்தால் எம் இனத்திற்கு எப்போதோ விடுதலை கிடைத்திருக்கும்.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சம்மந்தமூர்த்தி, திருச்செல்வம் போன்ற தலைவர்களை எதற்காக கொன்றீர்கள் காவியா? நீங்கள் கூறும் துரோகப் பட்டங்களை எல்லாம் புலி ஆதரவாளர்கள் நம்பலாம். எமக்கு உண்மை தெரியும், பதிவிடுங்கள் எழுதுகிறோம்.

இந்தப்பதிவு புலிகளால் சித்ரவதைக்கு உள்ளானவர் எழுதியது, அவர்பட்ட வேதனைகளை எழுதக்கூடாது என்று சொல்ல வருக்குறீர்கள். அவர் தனக்காக மட்டும் இதனை எழுதவில்லை. இது போன்று வரும் காலங்களில் நடைபெறக்கூடாது என்ற விழிப்புணர்வுக்காகவே அவர் பதிவிட்டுள்ளார். விடுதலை என்றால் மக்களுக்கானதே அல்லாமல் தலைவர்களுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்குமல்ல என்பதைத் தெரியப்படுத்தி உள்ளார் அவர்.

இந்த பதிவின் மூலம் அவருக்கு புலிகளுக்கு வழங்கியது போன்று பணத்தை யாரும் வாரி வழங்கப்போவதில்லை. இதனால் அவருக்கு யாரும் புகழ்மாலை சூடப்போவதுமில்லை. சரித்திரம் பல கோணங்களைக் கொண்டது! புலிகளின் இந்தக்  கோணத்தை மக்கள் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகப் பதிவிட்டுள்ளார்.

புலிகளைப்  பற்றிய பதிவுகள் 2005 ஆன்டே வெளியிட பட்டது. அவர்களின் மறுபக்கம் தெளிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. விரும்பி கேட்டால் மீண்டும் வெளியிடுகிறோம் காவியா!

நன்றி
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு. இன்று புது போராளியாக தன்னைக் கூறிக்கொள்ளும் நிலா என்பவருக்கு அவரது பழைய பெயர் காவியா என்பவருக்கு கொடுத்த பதில்

Previous
« Prev Post

1 comment:

  1. விபரமாக பதில் சொல்கிறோம் என பல இடங்களில் கூறிஉள்ளியர்கள்
    தயவு கூர்ந்து விபரமாக சொல்லுங்கள் ஆதாரங்களுடன்

    நீங்கள் எழுதுவது எல்லாம் புனைகதைபோல் தெரிகிறது
    "ஏனைய இயக்க உறுப்பினர்கள் ஆறாயிரம் பேர்வரை துணுக்காயிலும் முழங்காவில்லிலும் வைத்து வதை செய்து கொன்றார்கள் புலிகள்"
    விபரம் ஆதாரத்துடன் தரவும்
    அக்காலத்தில் 6000 போராளிகள் இருந்தார்கள் என்பது வியப்பாக உள்ளது

    கொள்ளை - 1980 ஆம் ஆண்டு மாசி மாதம் - விபரம் ஆதாரத்துடன் தரவும்.

    கொலை - 1976 ஆம் ஆண்டு மைக்கேல் என்னும் போராளியையும், 1979 இல் அப்பன் என்னும் போராளியையும் கொலை - விபரம் ஆதாரத்துடன் தரவும்

    கொலை - 1982 ஆம் ஆண்டு மாசி மாதத்தில் யாழ்ப்பாணம் அச்சகம் ஒன்றில் வைத்து மறைந்திருந்து ஒரு போராளியை கொலை செய்தார் ஒருவர் - பொல்லப்பட்டது , கொலைசெய்தது யார் என விபரம் ஆதாரத்துடன் தரவும்

    டெலோ செய்த அட்டூழியங்கள் கொள்ளைகள் கொலைகளை ஆதாரத்துடன் தரமுடியுமா? டெலோ தாஸ் சின் சில குற்றங்களை டெலோவே பகிரங்கமாக அறிவித்தது ஜபகமிருக்கும் என நம்புகிறேன். புலிகள் டெலோ ஐ கொண்டிருக்கவிட்டால் டெலோ புலிகளை முடித்திருக்கும் இதை மறுக்கிறீர்களா ?
    டெலோ வால் கொல்லப்பட்ட புலிகளை உங்களுக்கு தெரியுமா ??

    இஸ்லாமியர்கள் வெளியேற்றம் பற்றி எனது தனிப்பட்ட கருத்து - அது காலத்தின் கட்டாயம் என்பேன்
    மதத்தால் வேறுபட்டாலும் இஸ்லாமியரும் தமிழரே ஆயினும் அவர்களது மத ஒற்றுமை மத மோதல்களை தூண்டும், இதற்கு உதாரணம் தெற்கில் தனிப்பட்ட பாகையில் உருவான மோதல் சிங்கள முஸ்லீம் கலவரமாக வெடித்தது பலர் கொல்லப்பட்டனர் ..
    90களில் கிழக்கில் முஸ்லிம்களால் தமிழருக்கெதிராக பல கொலைகள் அரங்கேறி இருந்தன இதட்கு பதிலாக புலிகளும் பள்ளிவாசலில் முஸ்லிம்களை கொன்றார்கள் இவ் இனமுருகல் வடக்கில் பரவாமல் இருக்க இஸ்லாமியர்கள் வெளியேற்றம் காலத்தின் கட்டாயமாகிறது.
    எது எவ்வாறாயினும் உங்கள் எழுத்து கிழக்கு மாகாண இஸ்லாமிய தமிழர்களின் வளர்ச்சிகண்டு பொறாமை கொள்வதை காட்டுகிறது இது சரியல்ல

    குட்டி மணி, தங்கதுரை யை காட்டி கொடுத்தது புலிகள் என சொல்லமுனைகிறீர்கள், வேறு இடத்திலும் இதை நான் வாசித்திருக்கிறேன் . இருப்பினும் இதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை
    1975இல் புலிகள் தனியாக இயங்க தொடங்கிவிட்டனர் குட்டிமணி பிடிப்பட்டதோ 1981 இல் இப்படி இருக்க குட்டிமணியின் நகர்வுகள் புலிகளுக்கு எப்படி தெரியவரும் ??

    தெரியுமா என்று கேட்பதிவுடுத்து தெரிந்தவற்றை பதிவிடுங்கள் உண்மை உள்ளதா என்பதை ஆராய்வோம் ..

    ReplyDelete