பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 13 February 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Friday, 13 February 2026
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரிடம் பலவித கருத்து வேறுபாடுகள் எல்லோருக்கும் இருக்கலாம். ஆனால் 2009 கடைசி யுத்தத்தின் பின்பு தலைவருக்காக உயிரைக் கொடுத்த போராளிகளையும், தலைவர் என் நம்பி அவருக்குப் பின்னால் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் பலி கொடுத்த பின், இன்று தலைவர், குடும்பத்துடன் நலமாக இருக்கிறார்  இன்று வரும் செய்திகள் தலைவரே அவமானப்படுத்துவதாக உள்ளது.
இந்த செய்திக்கு இரண்டு வித காரணங்கள் இருக்கலாம். தலைவர் தன்னை நம்பியவர்களை கைவிட்டு தப்பிவிட்டார் என்று மக்களை ஏமாற்றும் செய்தியாக இருக்க வேண்டும்.
இரண்டு இலங்கையில் சரிந்து வரும் ராஜபக்சே சகோதரர்களின் செல்வாக்கை தூக்கி நிறுத்த கடந்த காலத்தை போல் இந்த செய்தியும், ராஜபக்சே குடும்பத்துக்கு இன்று எதிராக இருக்கும் சிங்கள மக்களை புலிகளின் தலைவரின் பெயரைக் கூறி இதோ வந்து விட்டார் புலிகள் மீண்டும் வலுப்பெற்று வருகிறார்கள் என்று சிங்கள மக்களை ஒன்றுபடுத்தி மீண்டும் ராஜபக்சே ஆட்சியை கொண்டு வரும் முயற்சியாக கூட இருக்கலாம். பொருளாதார ரீதியில் போராடிக் கொண்டிருக்கும் சிங்களர்களை ஒற்றுமைப்படுத்த இப்படியான செய்திகள் பரப்பப்படுகின்றன என்று சில நல்ல உள்ளம் கொண்ட சிங்கள பத்திரிகையாளர்கள்தெரிவிக்கிறார்கள்
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment