பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 13 February 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Friday, 13 February 2026
இது உண்மையா ?

தமிழ்நாட்டு உண்மையான விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பலர் வெளிநாட்டு இலங்கைத் தமிழர்களால் மிரட்டப்படுகிறார்கள் என்பது உண்மையா.

வெளிநாடுகளில் இருந்து இன்றும் தலைவர் இருக்கிறார் விரைவில் புதிய போராட்டம் ஆரம்பிக்க போகிறது என்று வெளிநாட்டு வாழ் தமிழர்களிலும் பணம் சேர்க்கும் சிலர் அண்மையில் திடீரென தலைவர் குடும்பத்தை பற்றி கூறி பணம் சேர்ப்பதாகவும் தலைவர் பேரை சொல்லி ரகசிய கூட்டங்கள் போட்டு பணம் பெறுவதாகவும் பல செய்திகள் கசியத் தொடங்கின.
பலர் பணம் கொடுத்தவர்கள் இதைப்பற்றி தீர விசாரித்து இப்படி போலியாக பணம் சேர்ப்பது பற்றி பல முக நூல்களில் எழுதத் தொடங்கி விட்டார்கள். இந்த செய்திகள் எல்லாம் கடந்த வாரம் நடந்ததாக அறிய முடிகிறது.
இதனால் பணம் சேமிக்க முடியாமல் போன வெளிநாட்டில் வசிக்கும் பழைய விடுதலைப் புலி ஆதரவாளர்கள், தொடர்ந்து பணம் சேகரிப்பதற்காக, தலைவர் இருப்பது உண்மை என்று நிரூபிப்பதற்காக தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்களை நெருக்குதல் கொடுப்பதாகவும், தவறும் பட்சத்தில் , முன்புஅவர்களுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இருந்த பொருளாதார  சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும் என்று பயமுறுத்தப்படுவதாகவும், வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் பலர் தகவல் தெரிவித்து வருகிறார்கள்.

இது உண்மையா. அப்படி இருந்தால் இது வருந்தத்தக்க செய்தி. தமிழினத்தின் அடையாளம் என்று கூறப்படும் தேசிய தலைவரை ஒவ்வொருவரும் தங்கள் தேவைக்காக பயன்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment