பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 4 February 2026

இது ஒரு பழைய பதிவு. எழுதியவர் வேலுப்பிள்ளை தங்கவேலு

  வெற்றிசெல்வன்       Wednesday, 4 February 2026
இதனால் சந்திரிகா குமாரதுங்கா கொண்டுவந்த பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியல் யாப்பு வரைவு  நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. ததேகூ அதனை ஆதரித்து இருந்தால் அந்த யாப்பு  சட்டமாகியிருக்கும். முள்ளிவாய்காலில் புலிகள் அழிந்திருக்க மாட்டார்கள்.

வி.புலிகள் ததேகூ ஒரு சூழ்நிலைக் கைதியாகவே வைத்திருந்தார்கள்.
2005 சனாதிபதித் தேர்தலைப் உத்தியோகப் பற்றற்ற முறையில்  புலிகள் புறக்கணித்தார்கள். சம்பந்தன் ஐயா வன்னிக்குப் போய் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து “ இராசபக்சா ஒரு இனவாதி – சிங்கள பவுத்த வெறியன்  அவர் சனாதிபதியாக வந்தால் தமிழ் மக்களை அழித்துவிடுவார்  எனவே இரணில் விக்கிரமசிங்காவை ஆதரிப்போம்” எனக் கெஞ்சிக் கேட்டும்  தலைவர் பிரபாகரன் மசியவில்லை. விளைவு  நான்கு ஆண்டுகள் கழித்து முள்ளிவாய்க்காலில்  நடந்த போரில் ஆயிரக்கணக்கான போராளிகள்,  தளபதிகள்  கொல்லப்பட்டார்கள். தலைவர் பிரபாகரன் தற்கொலை செய்து கொண்டார். 

சமாதான காலத்தில் சிங்கள உளவுப் படை வன்னியில் ஊடுருவி இருந்தது. வன்னி மண்ணில் வைத்தே சொர்ணம் போன்ற தளபதி  கொல்லப்பட்டார். சிவநேசன் நா.உ கொல்லப்பட்டார்.

இரட்டைக் கோபுரத்தின் மீது இஸ்லாமிய தீவிரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி அழித்த பின்னர் தேசிய விடுதலைக்குப் போராடுவோருக்கும் பயங்கரவாதத்தை கையில் எடுத்தவர்களுக்கும் இடையில் உள்ள வேற்றுமை மறைந்து விட்டது. சட்டபூர்வமான அரசுகளுக்கு எதிராக ஆயுதம் எடுத்தவர்கள் எல்லோருமே பயங்கரவாதிகள்தான்.  விடுதலைப் புலிகளை 33 நாடுகள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்தன.
காரணம் இராசீவ் காந்தி,, நீலன் திருச்செல்வம், இலட்சுமன் கதிர்காமர், அமிர்தலிங்கம் போன்றோர் கொல்லப்பட்டதுதான்.

நடுநிலை அரசியல் விமர்சகர்கள்  வி.புலிகள் அழித்தொழிக்கப்பட்டதற்கான காரணங்களை அடுக்கிக் காட்டுகிறார்கள். தலைவர் பிரபாகரன் இராணுவத் தீர்வை மட்டும் நம்பினார். 

கனடாவை எடுத்துக் கொண்டால் நான் ஆயுதத்துக்குக் கொடுத்த பணத்தில் கடைகள், கட்டிடங்கள், வீடுகள், பாரவூர்திகள் வாங்கப்பட்டன. சுரபியை 5 இலட்சத்துக்கு உலகத் தமிழர் இயக்கத்தின் நிதிக்குப் பொறுப்பாக இருந்த இரஞ்சன் வாங்கினார். அது யார் வீட்டுப் பணம்? இன்று அதை சுமார் 3 மில்லியன் டொலருக்கு விற்று விட்டார்கள். விற்ற பணம் எங்கே? 

உலகத் தமிழர் இயக்கத்தின் கட்டிடம் விற்றதில் 4 இலட்சம் டொலர் மிஞ்சியது. அந்தப் பணத்தை வைத்திருக்கும் உதயன் “அண்ணர் வந்து கேட்டால் கொடுப்பேன்” என்கிறார். 

போரின் கடைசிக் கட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் கொடுத்த பணம் வி.புலிகளுக்குப் போகவில்லை. இங்குள்ள போலிப் புலிகளின் பைக்குள் அது போய்விட்டது. அதில் நான் கொடுத்த 5,000 டொலரும் அடக்கம்.

இங்குள்ள தமிழர் புனர்வாழ்வுக் கழகம் முழங்காவிலில் கட்ட இருந்து ஒரு வீட்டுத்திட்டத்துக்கு சேர்த்த 5 இலட்சம் டொலர்தான் முள்ளிவாய்க்காலில் அகப்பட்டுக் கொண்ட மக்களுக்கு உணவு வழங்கப்  பயன்பட்டது. 
விடுதலைப்புலிகள் தோற்றதற்கு இவையும்  காரணங்கள். 

இன்றைய பூகோள அரசியலில் புலிகளின் பெயரையோ, கொடியையோ பிடித்துக் கொண்டு போனால் ஒரு நாடும் தனது கதவைத் திறக்காது. இது போலி வி.புலிகளுக்கு விளங்குதில்லை. இனப்படுகொலை, சர்வதேச விசாரணை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் மலைபோல நம்பியிருந்த இந்தியா இப்போது ஈழத்தமிழர்களை கைவிட்டு விட்டது. “இந்திய  இலங்கை அரசை வற்புறுத்த முடியுமே தவிர வேறு எதையும் செய்யும் நிலையில் அது இல்லை. இலங்கை ஒரு இறைமை படைத்த நாடு. அதன் உள்விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது. நீங்கள்தான் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

எனவே கனவுலகில் சஞ்சரிக்காமல் பூகோள அரசியலைப் புரிந்து கொள்ளுங்கள்.  எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் . உலக நடப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.

எவ்வது உறைவது உலகம்  உலகத்தோடு
அவ்வது உறைவது  அறிவு. ( குறள் 426) 

இதுவே எனது இறுதி மடல். உம்மோடு மெனக்கெட எனக்கு  நேரமில்லை. 

நக்கீரன்
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு. எழுதியவர் வேலுப்பிள்ளை தங்கவேலு

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment