பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 21 January 2022

கழக தோழிபற்றி

  வெற்றிசெல்வன்       Friday, 21 January 2022
என் முகநூலில் நட்போடு உள்ள அனைத்து கழக தோழர்களுக்கும்.

மிகப்பல தோழர்கள் எனது உள் பெட்டியில் வந்து, தற்போது முகநூலில் உலாவி வரும் கழக தோழியின் பாலியல் பலாத்காரம் பற்றி பின் தள, தள மாநாட்டில் எடுத்த நடவடிக்கைகள் விபரம் கேட்டிருந்தார்கள். காரணம் பின்தள மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய குழுவில் நானும் ஒருவன். அதோடு அங்கு தெரிவு செய்யப்பட்ட பொதுக் குழு உறுப்பினரும் ஆவேன்.
உண்மையில் இப்படி ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடைபெற்றதாக எந்த ஒரு செய்தியும் வரவில்லை. அது சம்பந்தமாக பேசப் படவும் இல்லை.
1986 ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற தள மாநாட்டில் பின் தளத்தில் அதாவது இந்தியாவில் நடைபெற்ற கொலைகள், போன்றவை தான் பிரதான அம்சமாக இடம் பெற்று செயலதிபர் உமா மகேஸ்வரனின் தலைமைக்கு எதிராகப் பேசப்பட்டது.
  அதோடு பின் தளத்தில் இந்தியாவில் ஒரு மாநாட்டை நடத்தி இயக்கத்தை நல்வழிப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்று காரணம் கூறி வந்த தள குழுவினர். திட்டமிட்டு இயக்கத்தை அழிக்கும் முயற்சியில் ஈடு பட்டதுதான்தான் உண்மை. உமாமகேஸ்வரனுக்கும், ராஜனுக்கும் ஏற்பட்டிருந்த கருத்து மோதலை ஊதி பெரிதாக்கி, ராஜன் தான் உண்மையான புளொட் தலைவர் என்று பத்திரிகைகளில் செய்தி கொடுத்தும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மிகவும் பலவீனப்படுத்தி உடைத்து விட்டு, தளத்தில் இருந்து வந்தவர்கள் ராஜனோடு கூட சேர்ந்து இயங்கி இயக்கத்தை வளர்த்து விடாமல் திடீரென ராஜனை விட்டும் ஓடிவிட்டார்கள். இது அன்று கழகத்தை விட்டு இருந்தவர்கள் விலகி இருந்தவர் எல்லோருக்கும் தெரியும். தளத்தில் இருந்து வந்த முக்கியஸ்தர்களில் (விவசாய அணி என நினைக்கிறேன்)ஒருத்தர் சுதுமலை யைச் சேர்ந்த என்னோடு சிறுவயதிலிருந்து படித்த பரிபூரணானந்தன். அவன் என்னைப் பார்த்து அதிசயப்பட்டு, சில உண்மைகளை கூறினார். தளத்தில் இருந்து வந்தவர்கள் இயக்கத்தை வளர்க்கும் ஆவலில் உள்ளவர்கள் இல்லை என்றும், இயக்கத்தை உடைத்துவிட்டு, இந்தியாவை சுற்றி பார்த்துவிட்டு வெளிநாட்டுக்கு போகும் எண்ணத்தோடு தான் தாங்கள் வந்ததாக கூறினார்.
பின் தளத்தில் நடந்த கொலைகள் பற்றி மிகவும் பாரதூரமாக கதைத்த தளத்தில் இருந்து வந்தவர்கள், யாரும் தங்கள் நிர்வாகத்தில் இருந்த தளத்தில் கழகத் தோழியை கழகத் தோழர்களே பாலியல் வன்கொடுமை செய்தியை கழகத் தலைமை கோ, கழகத் தோழர்களுக்கும்அறிவிக்கவில்லை. ஏன் அறிவிக்கவில்லை.
இப்படி ஒரு செய்தி வந்திருந்தால், அதை செயலதிபர் உமா மகேஸ்வரன் தலைமையில் இருந்த புளொட் இயக்கமும், ராஜன் தலைமையில் இருந்த தோழர்களும் தளத்தில் இருந்து வந்தவர்களை விசாரித்து கடும் நடவடிக்கை எடுத்து இருப்பார்கள் அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
பின்தள மாநாடு நேரம் தளத்துக்கு பொறுப்பாளர் பெண்தோழர் கூட ஏன் அறிவிக்கவில்லை. அப்படி நடந்து இருந்து உண்மையை அறிவித்திருந்தால், கடுங்கோபத்தில் அன்றிருந்த முகாம் தோழர்கள் தளபொறுப்பாளர்களை கைது செய்து தாங்களே விசாரித்து இருப்பார்கள் என்பதுதான் அன்றிருந்த உண்மையான நிலை. 
முகநூலில் இந்த செய்தி (அதாவது கழகத் தோழியின் பாலியல் பலாத்காரம் பற்றி) பல ஆண்டுகளுக்கு முன்பு கழகத் தோழி ஒருவர் கூறியதாக செய்தி வந்தது.
அதைப்பற்றி விசாரித்தபோதுதான் பல செய்திகள் கிடைத்தன.
கழகப் இன் தளத்தில் முதல் உடைவு ஏற்பட்டு சந்ததியார், ஒதுங்க தொடங்கியவுடன், சந்ததியாருக்கு உள்ள நல்ல பெயரை முகமூடியாக போட்டுக்கொண்டு, கழகத்தை விட்டு மட்டுமல்ல, சந்ததியாருக்கு தெரியாமல் அவருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான தீப்பொறி குழுவினர் ஓடி விட்டார்கள்.
இதே காலத்தில் தளத்தில் வேலை செய்த தோழர்களும், தோழிகளும் குறிப்பாக செல்வி போன்றவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைமை நிர்வாகத் நிர்வாகத்துக்கு எதிராக பேசி வருவதாக தகவல் கிடைத்து, செயலதிபர் உமாமகேஸ்வரன் தளத்தின் அதாவது இலங்கையில் தலைமைக்கு எதிராக பேசி வருபவர்களை கொலை செய்ய கந்தசாமியின் உளவுத்துறையில் இருந்து சிலரை உளவுத்துறையில் இருந்த பெண்  தோழர் உட்பட சிலரை இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவோடு இருந்த செல்வியை கொலை செய்ய எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை எனவும் தெரிய வந்தன.
தளத்தில் தலைமைக்கு எதிராக பேசிய தோழர்களை கொலை செய்தாள் அங்கிருக்கும் மக்களிடமும், கழக அங்கத்தவர்கள் இடையேயும் பெரிய எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டி வரும் என்ற காரணத்தால், கழகத் தோழர்களை சமாளிக்க பல உப்பு சப்பில்லாத குற்றச்சாட்டுகளை முதலில் கூற வேண்டும் எமது இயக்கத்தில் நாங்கள் கொலை செய்த கொலைகளை மறைக்க சுழிபுரத்தில் இருந்து பின்பு வரை சரியான காரணங்கள் கூறவில்லை. நிரஞ்சனை கொலை செய்துவிட்டு செயலதிபர் நிரஞ்சன் சிங்கப்பூர் ஓடிவிட்டதாக தோழர்களிடம் கூறினார். சந்ததி யாரை கொலை செய்துவிட்டு பத்திரிகைகளில் சந்ததியார் போதைப் பொருள் விற்பனை செய்யும் ராதா என்ற பெண்ணுடன் ஓடிவிட்டதாக நேரடியாகவே கூறினார். அதே மாதிரி முகாமில் இருந்த தோழர்களே விசாரித்து கொலைசெய்ய முன்பு அவர்கள் எல்டிடிஇ உளவாளிகள், இல்லை மற்ற இயக்கங்களில் உளவாளிகள், இலங்கை அரசின் உளவாளிகள் என்று தங்களுக்கு மனதில் வந்தபடி காரணங்களை கூறி கொலையை மறைக்க முற்பட்டார்கள்.
    அதே மாதிரி தளத்தில் கழகத் தலைமைக்கு எதிராக முரண்பட்ட அவர்களை கொலை செய்ய, கழக உளவு துறையிலேயே இருந்த ஒரு பெண் பெயரையே பாவித்த தாக செய்திகள் வந்தன.
உண்மையில் இப்படி ஒரு பாலியல் பலாத்காரம் நடந்திருந்தால், எமது ராணுவ பொறுப்பாளர் நேர்மையான சின்ன மென்டிஸ் தலைமைத் எடுத்திருந்தாலும் இப்படியாக இப்படியான சமூக விரோதிகளை கட்டாயம் பிடித்து தண்டனை கொடுத்திருப்பார். இப்படி ஒரு பாலியல் பலாத்காரம் கழக தோழிக்கு கழகத் தோழர்களால் நடந்திருந்தால் ஏன் சின்ன மென்டிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்ப சின்ன மெண்டீஸ் தவறான ஆளா.
தள நிர்வாகிகள் இதற்கு என்ன செய்தார்கள். பின் தளத்தில் நடந்த தவறுகளை ஊதிப் பெரிதாக்கி புரட்சி செய்தவர்கள் ஏன் தளத்தில் நடந்த கழக தோழியின் பாலியல் பலாத்காரத்தை செய்த கழகத் தோழர்களே பிடித்து விசாரிக்கவில்லை. இதற்கு தளநிர்வாகிகளும்எல்லோரும் கூட்டு சதியா.

 இந்த சம்பவம் நடந்து இருந்தால் அந்த காலங்களில் கழகத் தள ராணுவ பொறுப்பில்  இருந்தவர்களும், தள பொறுப்பில் இருந்தவர்களும், தளத்தில் பெண்கள் பொறுப்புக்கு இருந்தவர்களும் என்ன செய்தார்கள். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கழக தோழியை கழகத் தோழர்களே பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்றால், அதை தளத்தில் இருந்தவர்கள் அப்போது ஏன்  மூடிமறைக்கப் பார்த்தார்கள்.

 எப்படி சந்ததியார் போதைப் பொருள் விற்கும் ராதா என்ற பெண்ணுடன் ஓடினார் என்பது உண்மையோ. அதேபோல் இந்த சம்பவம் உண்மையாக இருக்கலாம். இல்லை இந்த சம்பவம் நடந்தது உண்மை என்றால் அன்று தளத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் தான் முதல் குற்றவாளி.

விரைவில் என்னிடம் இருக்கும் பின் தள மாநாட்டு அறிக்கை (பின்தள மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தயாரித்தது) வெளியிட இருக்கிறேன். அதில் சம்பவம் பற்றி எதுவும் இல்லை..
logoblog

Thanks for reading கழக தோழிபற்றி

Previous
« Prev Post

No comments:

Post a Comment