பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 20 January 2022

பகுதி 114

  வெற்றிசெல்வன்       Thursday, 20 January 2022
பகுதி 114

டில்லி சந்திப்புகள் பற்றிய நினைவுக் குறிப்புகள்.

Norway
பெயர். H.E. Mr. Tancred  Ibsen
நிலை. Ambassador
விலாசம். Kousalya mark Chanakya Puri New Delhi
இடம் Norway embassy
காலம். 14/0185. 9.30to 10.10 am
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன், வெற்றிச்செல்வன இலங்கையில் இருந்தவர். எமது பிரச்சினைகள் பற்றி தெளிவாக அறிந்தவர். வடகிழக்கு தமிழர்க்கும், மலையகத் தமிழருக்கும் பிரச்சினைகள் வேறு 
வேறானவை என கூறினார். அகதிகளுக்கு உரிய உதவிகள் இலங்கையில் ரெட்பானா என்ற அமைப்பின் ஊடாக மட்டும்தான் செய்ய முடியுமாம். மீனவர் மலையகத் தமிழர் பற்றி முக்கியமாக பேசப்பட்டது. எமது தரப்பில் உதவிகளை நிறுத்தும்படியும், அரசியல் வற்புறுத்தல் செய்யும்படியும் கூறினோம். ரிப்போர்ட் தனது அரசுக்கு அனுப்புவதாக கூறினார்.

2)
British High commission
பெயர். Mich ael Stark
நிலை. First secretary
விலாசம். Chanakyapuri New Delhi
Kalam. 11/01/85.   4pm to5pm
இடம் British embassy
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன், வெற்றிச்செல்வன்
முதன் முதலாக அவர்களை சந்திக்கும் இயக்கம் எனவும், எமது தரப்பு வாதத்தை நேரடியாகக் கேட்க ஆவலோடு இருப்பதாகவும் கூறினார் இன்றைய நிலைமை களை இட்டு  கவலைப் படுவதாக கூறினார். எமது தரப்பில் உதவிகளை நிறுத்தும்படியும் அரசியல் ரீதியில் இனப்படுகொலையை நிறுத்த வற்புறுத்தும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது அதை உடன் ரிப்போர்ட்டர் கொடுப்பதாக கூறினார் எம்மை சந்தித்தது அவருக்கு மிக மகிழ்ச்சி அடிக்கடி தொடர்பு கொள்ளச் சொன்னார் செயலதிபர் உமாமகேஸ்வரன் டில்லிக்கு வரும்போது கட்டாயம் தன்னை சந்திக்கும்படி கூறினார்.

3)
Switzerland
பெயர் Katherine Krieg
நிலை. Counselor
விலாசம். சாணக்கிய புரி நியூ டெல்லி
காலம். 16/01/85.  3pm to3.30pm
இடம்  Switzerland embassy
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன் வெற்றிச்செல்வன்

இன்றைய இலங்கை நிலை பற்றியும், சுவிஸ் இல் உள்ள தமிழ் அகதிகள் பற்றியும் விரிவாக பேசப்பட்டது. எமது தரப்பில் சுவிஸ் அரசுக்கு இலங்கை அரசுக்கு கொடுக்கும் உதவிகளை நிறுத்தும்படியும் சுவிஸ் அரசு மூலம் அரசியல் ரீதியில் வற்புறுத்தல் கொடுக்கும்படியும் கூறினோம்.

4)
France embassy
பெயர். Bernard Emir
நிலை. First secretary
விலாசம். 2 Aurangzeb road New Delhi 110011
காலம்.11/01/85.  11am to12noon
இடம். France embassy
பங்குபற்றியவர்கள் சித்தார்த்தன்,
 வெற்றிச்செல்வன்

நீங்கள் தானே PLOTE. பெரிய இயக்கம் என கேட்டார். பின்பு மற்ற இயக்கங்களைப் பற்றியும் கேட்டார். இன்றைய நிலை குறித்தும் பயிற்சிகள் முகாம்கள் பற்றியும் பேசப்பட்டது . பிரான்ஸில் உள்ள தமிழ் அகதிகள் குறித்தும் பேசப்பட்டது எமது தரப்பில் பிரான்ஸ் அரசுக்கு உடன் இனப்படுகொலையை நிறுத்தும்படி அரசியல் ரீதியில் வற்புறுத்தலும் உதவிகளை நிறுத்தும் படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது அதை அவர் உடன் ரிப்போர்ட் ஆக கொடுப்பதாகச் சொன்னார்.

5)
 Canada High commission
பெயர் Janice. L. Sutton
நிலை. Counselor
விலாசம்.⅞ Shanti paath Chanakyapuri New Delhi
Kalam. 10/01/85.   3pm to4pm
இடம். Canadian High commission
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன் . வெற்றிச்செல்வன்

இன்றைய இலங்கை நிலை பற்றி பேசப்பட்டது இன்றைய நிலைமை பற்றி கவலைப்பட்டார் கனடிய உதவிகளை நிறுத்தும்படியும் அல்லது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படும் படியும், இலங்கை அரசுக்கு இனப்படுகொலையை உடன் நிறுத்துமாறு அரசியல் வற்புறுத்தல் கொடுக்கும்படி எமது தரப்பில் கூறப்பட்டது கனடிய அரசுக்கு அதை ரிப்போர்ட்டாக கொடுப்பதாக கூறினார்.

6) Palestine liberation organisation
பெயர் Khaled El Sheikh
நிலை. Ambassador
விலாசம் E 7/17 Vasant vihar New Delhi 110057
காலம்.  7/01/85.  12noon 1pm
பங்குபற்றியவர்கள் சித்தார்த்தன், வெற்றிச்செல்வன்

இன்றைய இலங்கை நிலைமைகளை பற்றி உரையாட பட்டது. லண்டனில் PLO வோடு உள்ள தொடர்பும் கூறப்பட்டது. தலைவர் யாசர் அரபாத் திடம் கொடுத்த கடிதத்தின் நகலை கேட்டார். PLOTE, PFLP உறவுகள் குறித்தும் கூறப்பட்டது. அதைப்பற்றி பரவாயில்லை என்று கூறினார். பின்பு அவர்களின் வழி வெளியீடுகளைகொடுத்தார்.

7) Mauritius
பெயர். S. Ponnusamy
நிலை. Second secretary
விலாசம் 5. Kausalya mark Chanakyapuri New Delhi
காலம். 17/01/ 85. M11am to12 noon
இடம் Mauritius embassy
பங்குபற்றியவர்கள் சித்தார்த்தன். வெற்றிச்செல்வன்

பொதுவான தற்போதைய நிலை பற்றி பேசப்பட்டது. மினிஸ்டர் திரு புது (Buthu) வந்து போனதாக கூறினார். விரைவில் மினிஸ்டர் பரசுராமன் வருவதாக கூறினார். அங்கிருந்து முக்கியமானவர்கள் இனி வந்தால், எமக்கு போன் பண்ணுவதாக கூறினார். வேறு ஒரு(LTTE யாக இருக்கலாம்) தன்னை சந்தித்ததாக கூறினார். நாங்கள் நமக்கிடையே சூடுபட்டு கொள்கிறோம் என கவலைப்பட்டார். நமது கழக தோழரே அங்கு அனுப்புவது பற்றி கேட்டபோது அதற்கு சரியான பதில் கூறாமல் பரசுராமன் வரும்போது கதைக்கலாம் என்று கூறினார்.

நினைவுக்குறிப்புகள் தொடரும்
logoblog

Thanks for reading பகுதி 114

Previous
« Prev Post

No comments:

Post a Comment