பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 7 January 2022

பகுதி 112. டெல்லியில் நடந்த சந்திப்புகள் பற்றிய சில முக்கிய குறிப்புகள் ஆவணங்களாக

  வெற்றிசெல்வன்       Friday, 7 January 2022
பகுதி 112

சில பழைய நினைவுக்குறிப்புகள்


Belgium
பெயர்.  Mr. Gregoire vadakis
நிலை. First secretary
விலாசம். 50.N Shanti paath, Chanakyapuri, New Delhi 21.
காலம் 24/01/85  10  am to 10.40
இடம். Embassy
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன், வெற்றிச்செல்வன்
இன்றைய நிலைமைகளை கதைத்தார்கள். உங்கள் இயக்கத்துக்கு உதவிகள் எப்படி கிடைக்கின்றன என  கேட்டார். வெளிநாட்டு தமிழர்கள் மூலம், என எமது தரப்பில் கூறப்பட்டது. இவருடன் கதைத் அளவில் சிலவேளைகளில் எமக்கு உதவி செய்வார் என நினைக்கத் தோன்றுகிறது.TELO ஸ்ரீ சபாரத்தினம் அங்கு பிடிப்பட்ட தாய் மட்டும் கூறினார். Telo  சிறி பிரயாண பத்திரங்கள் சரியில்லாத படியினால் மட்டும்தான் (அரசியல் ரீதியில் அல்ல) கைது செய்யப் பட்டாராம். இவரை அடிக்கடி சந்திப்பது நல்லது என கருதுகின்றோம்.

2) Australia
பெயர்.  D.J. fisher
நிலை. First secretary political
காலம். 21/01/85      2.30 to2.45 pm
இடம். Australia embassy
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன், வெற்றிச்செல்வன்

எம்மை சந்தித்தபோது பயத்துடன் அல்லது வேண்டாவெறுப்பாக சந்தித்தார். இலங்கையில் தற்போது நடக்கும் கொடுமைகளைப் பற்றி கூறி, நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை, இலங்கை அரசுதான் பயங்கரவாதி என எமது தரப்பில் வாதாடினோம். ஆனால் அவர் தமிழர் பிரச்சனை இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை எனவும் அதில் தனது நாடு (Australia) மிகத்தெளிவான கொள்கையுடன் இருப்பதாகக் கூறினர்.

3)
Algeria

பெயர். ..H.E. Mr.Brahim brahimi
நிலை. Ambassador
விலாசம். 13 Sundar Nagar, Delhi 110003
காலம் 25/01/85    10am to 10.30
இடம் embassy
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன். வெற்றிச்செல்வன்

பல விடயங்கள் தெரிந்தவர். ஆர்வமாக விசாரித்தார். எமது பிரச்சனை பற்றி தனது நாட்டுடன் தொடர்பு கொள்வதாக கூறினார். தன்னுடன் தொடர்ந்து தொடர்பு வைத்திருக்கும்படி கூறினார்.

4)
Oxfam
Name. David Newwell
Occupation. Chief Executive
Address 311, Maan sarovar building, 90, Nehru place, New Delhi.110019
Date.09/04/85
Participators Siddharthan, N. Pardhan
எமது இளமை கடை இந்தியா இல்லாமல் அமெரிக்க நிலைமைகளைப் பற்றிய விரிவான விளக்கம் கொடுத்தார். எதுக்கும் இந்தியாவில் இலங்கைக்கு பெரும்பாலான Oxfam உத்தியோகஸ்தர் இருப்பதாகவும் அவரை தொடர்பு கொள்ளும்படியும் தான் அவரை நாங்கள் சந்திக்க வேறு சொல்வதாகவும் சொன்னார்.தென்னமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் தாங்கள் கூடிய கவனம் செலுத்துவதாகவும் எந்த அளவு இலங்கைக்கு உதவ தான் முயற்சிப்பதாகவும்சொன்னார். இயக்க நிலைமைகள் பற்றியம் கேட்டார்.

5)
V.N.Somu
நிலை. திமுக M.P
11/04/85  காலை 8.00மணி
பங்குபற்றியவர்கள். வெற்றிச்செல்வன், பரதன்

இயக்க நிலைமைகள் நாட்டு நிலைமைகள் தெரிந்தவராக இருந்தார். தான் தன்னால் முடிந்த அளவு பாராளுமன்றத்தில் தமிழர் படும் கஷ்டத்தை  எடுத்துரைப்பதாக கூறினார். நம்மிடம் திமுக எம்பிக்களை சந்திப்பதை விட்டு, ஏடிஎம்கே, இந்தியன் காங்கிரஸ் தெலுங்கு தேசம்  எம்பி களையும் சந்திக்கும்படி கூறினார்.
இயக்கங்கள் ஒற்றுமை பற்றி கேட்டார். கட்டாயம் ஒற்றுமை தேவைஎன்றும், இயக்கங்கள் அப்போதுதான் உதவிகளும் பெற முடியும் என்று சொன்னார். கலைஞர் போராட்டம் ஆரம்பிக்க போதும் பற்றியும் சொன்னார். தமிழ்நாட்டு அனைத்து கட்சியும் சேர்ந்து டெல்லி வந்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இது ஏதும் பலாபலனை கொடுக்கலாம் எனவும் சொன்னார்.

தொடரும்
logoblog

Thanks for reading பகுதி 112. டெல்லியில் நடந்த சந்திப்புகள் பற்றிய சில முக்கிய குறிப்புகள் ஆவணங்களாக

Previous
« Prev Post

No comments:

Post a Comment