பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 29 January 2022

விடுதலை இயக்கங்களின் குறிப்பாக புளொட் இயக்கத் சமூக விரோத செயல்கள்

  வெற்றிசெல்வன்       Saturday, 29 January 2022

ஆரம்ப காலத்தில் விடுதலை இயக்கங்களில் ஏற்பட்ட சமூக விரோத செயல்களில் புளொட் இயக்கத்தின் முக்கியமானவர்கள் இலங்கையில் செய்த சமூக விரோத பாலியல் சம்பவங்கள் பற்றி, எனது உள் பெட்டியில் வந்து வவுனியா யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்று பலவித செய்திகளை கூறுகிறார்கள். தயவுசெய்து இப்படியான விடயங்களை நீங்களே உங்கள் முகநூலில் பதிவு செய்து இயக்கங்களின் கடந்தகால தவறுகளை மக்களிடம் வெளிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் எமது மக்கள் விடுதலை இயக்கங்களில் பற்றிய உண்மை முகத்தை அறிய முடியும்.

 நான் எனது உண்மையான அனுபவங்களை எழுதியதால் இன்று இந்திய உளவுத்துறை RAW முகவர் என்றும், விடுதலை இயக்கம் உண்மைகளை பொதுவெளியில் எழுதிய துரோகி என்றும், பலவித குற்றச்சாட்டுகள், யார் இப்படி குற்றச்சாட்டுகள் கூறுகிறார்கள் என்றால், இயக்கத்தின் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பலனடைந்து, இன்று பெரும் தொகையான பணத்துடன், வசதியான வாழ்க்கையுடன் இருப்பவர்கள் தங்கள் பெயர் வந்து விடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதையாக என்னை அசிங்கப் படுத்துகின்றார்கள்.

அதோடு முக்கியமாக எனது முகநூலில் பல பதிவுகளை முடக்கி விட்டார்கள். இன்றும் முடக்கப்பட்டது. எனது முகநூலே முடக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள்.

நீங்கள் அனுப்பும் உண்மைச் சம்பவங்களை நான் எழுதினால், கட்டாயம் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து பதிவுகளை அகற்றுவார்கள். அதனால் தயவு செய்து நீங்களும் உங்கள் முகநூலில் பதிவு போடுங்கள்.

யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவங்கள், வவுனியாவில் நடந்த சம்பவங்கள் திருகோணமலை மட்டக்களப்பில் நடந்த சம்பவங்கள் எழுதுங்கள்

1989 ஆண்டு ஆரம்பத்தில் நான் கொழும்பில் இருந்த போது தராக்கி எனப்படும் மாமனிதர் சிவராம் சிரித்துக்கொண்டே தானும் மற்றும் சில முக்கிய புளொட் தலைவர்களும் மட்டக்களப்பில் செய்த பாலியல் பலாத்காரங்கள் பாலியல் கொலைகளைப் பற்றி சொல்லி அதை தங்களது வீர சாகசமாக கருதி சிரித்தார்.

கிராமப்புற அப்பாவிப் பெண்களை பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு எதிர்த்த பெண்களை கொலை செய்த புதைத்த கதையும், பல பெண்களுக்கு பணத்தை வாரி இறைத்த கதையும் தங்களது வீர சாகசமாக சொன்னார். அதோடு கழக மத்தியகுழு உறுப்பினர்  லீலா என்ற பெண்ணை கெடுத்து குழந்தையுடன் இருந்த பெண்ணை உதாசீனப்படுத்தி லீலா தற்கொலைக்கு காரணமானவர். அந்த மத்தியகுழு உறுப்பினர் என்றும் கூறினார்.

அவர் கூறிய விஷயங்கள் மிகவும் பாரதூரமானவை. மட்டக்கிளப்பு தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த விடயங்கள் தெரிந்திருக்கலாம். அதைப்பற்றிஅவர்களும் உண்மைகளை எழுத வேண்டும். இந்தப் பதிவும் முடக்கப்படலாம்.


logoblog

Thanks for reading விடுதலை இயக்கங்களின் குறிப்பாக புளொட் இயக்கத் சமூக விரோத செயல்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment