டெல்லியில் கழக சந்திப்புகள் பற்றிய சில ஆவணக் குறிப்புகள்
பழைய நினைவுக்குறிப்புகள் தொடர்கிறது
Indian Red cross
பெயர் Ajit bhowmick
நிலை secretary general
விலாசம். 1, redcross road New Delhi
பங்குபற்றியவர்கள் சித்தார்த்தன், பரதன்
இலங்கையில் 83 கலவரத்தின் போது இருந்தவர் ஆகையால் நிலமை ஓரளவு அறிந்தவராக இருந்தார். இப்போதைய நிலைமைகளை விளக்கி, அகதிகளுக்கும், இயக்கத் தோழர்களுக்கும் உதவும்படி கேட்டோம். தன்னால் முடிந்த அளவு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும், எங்களது தேவைகளை விபரமாக சொல்லும்படியும் சொன்னார். முதல் படியாக 100 முதலுதவி பற்றிய புத்தகங்கள் உடனே தந்தார். இன்னமும் 2000 புத்தகங்கள் தருவதாகவும்., கழகத்திலிருந்து கடிதம் தேவை எனவும் கேட்டுக் கொண்டார். மருத்துவ உதவிகள் எவ்வாறு செய்யலாம், மருந்து வகைகள் பெயர்கள் தந்தால் தருவதாகவும், தொடர்பு தொடர்ந்து வந்தால் தங்களால் இயன்ற உதவிகள் செய்ய முடியும் என்றார்.
2)
Red cross
பெயர் Mr. Nicolas De Rougemont
நிலை. Regional delicate international committee
விலாசம்1, red cross road New Delhi
காலம். 02/04/85
பங்குபற்றியவர்கள். சித்தார்த்தன் பரதன்
ஏற்கனவே அவர்களுடன் தொடர்புகள் இருந்தமையால் இப்போதைய நிலைமைகளை பற்றி கதைத்தார். இந்தியா இலங்கையில் அகதிகளின் நிலை பற்றியும் அவர்களுக்கு ரெட் கிராஸ் செய்யக்கூடிய உதவிகள் பற்றியும் எடுத்துரைத்தோம். என்னென்ன மருந்துகள் தேவை என்பதையும், உணவு உடை பற்றிய தேவையும் குறித்துக் கொண்டார். தான் ஜெனிவா செல்வதாகவும் அங்கு இதுபற்றி கதைப்பதாகவும் சொன்னார். இலங்கைக்கு red cross போக முடியுமா எனவும், இயக்கங்களால் தங்களுக்கு எதுவும் ஆபத்து ஏற்படுமா என்றும் கேட்டார். பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இயக்கங்களால் தரமுடியும் என்றோம். நாடு திரும்பியதும் மண்டபம் ராமேஸ்வரம் சென்று முடிந்த உதவிகள் செய்வதாக கூறினார்.
3)
GK Reddy
நிலை the Hindu reporter
காலம் 11/04/85
பங்குபற்றியவர்கள் சித்தார்த்தன் பரதன்
பண்டாரி இன் இலங்கை விஜியத்தால்இந்திய-இலங்கை உறவுகள் சிறிது சீரடைந்து உள்ளதுபோல் உள்ளதாகவும், இலங்கை இப்போது தற்காலிகமாக குழப்பமில்லாத வாறு அவரின் விஜயம் காரணம் என சொன்னார். (பண்டாரி யில் இவருக்கு நம்பிக்கை இல்லை) படகு, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதும் இவரின் விஜயத்தின் எதிரொலியே என்றார். மார்கரட் தட்சர் இன் வருகைக்காக அரசாங்கம் வேடம் போடுவதாக நாங்கள் கூறினோம்.ENLF, LTTE இணைந்து விட்டதாகவும், ஏன் நாங்கள் ஒற்றுமைக்கு போக இல்லை என்றார். அவருக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறினோம் ஒற்றுமைக்கு நாங்கள் என்றும் தயார் என்று சொன்னோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிலும் இலங்கைபிரச்சனை முன்னெடுத்தால் தான் அரசாங்கத்தின் முழு கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று சொன்னார்.
4)
Britain
பெயர். Michal Stark
நிலை first secretary
விலாசம் Chanakyapuri New Delhi 21
காலம் 17/04/85
பங்குபற்றியோர் கள் சித்தார்த்தன் பரதன்
மார்க்ரெட் தச்சர் விஜியம் குறித்து அதாவது இலங்கையில் இந்தியாவில் ஆற்றிய உரைபற்றி கதைத்தோம். பயங்கரவாதத்தில் நம்பிக்கை இல்லை என்று தச்சர் கூறினாலும், மக்கள்வாக்குச்சீட்டில் நம்பிக்கையற்று போனதால் மக்கள் வேட்டில் நம்பிக்கை வைத்தார்கள் என அவர் கூறினார். பாராட்டினோம். இலங்கை அரசுக்கு தச்சரின் பேச்சு திருப்தி இல்லை என்றும் Kஆனால் JR பிரிட்டிஷ் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்ப கூறியதையும் அவர் மறுத்தார். தச்சர் நீலன் திருச்செல்வத்தை சந்தித்தது நல்ல காரியம் என்றார். பிரிட்டிஷ் MP இரண்டு பேர் இலங்கை சென்று தமிழ் இளைஞர்கள் சித்திரவதை குட் படுவதைப் பற்றி அறிக்கை விட்டது பற்றியும் கூறினோம். எங்களை தான் சந்திக்க மீண்டும் ஆவலுடன் உள்ளதாக கூறினார்.
5)
Telugu Desam MP
பெயர் venkatachalam
நிலை. MP Telugu Desam Andhra Pradesh
விலாசம் Andhra bhavan India gate
காலம். 18/04/85
பங்குபற்றியவர்கள் சித்தார்த்தன். பரதன்
தெலுங்கு தேசம் எம்பி களையும், ஆந்திரா முதலமைச்சரையும் சந்திக்கச் சொன்னார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுத்தாள் தான் இந்திய அரசாங்கத்தை விழிப்படைய செய்யலாம் என்றார்.N.T.R,HEGDE ஓரளவு ஆதரவு காட்டுவார்கள் என்றும், எம் ஜி ஆர் ஏ பிரச்சனையே முன்னெடுக்க வேண்டும் என்றும், எங்களை இதுபற்றி எம்ஜிஆருடன் கதைக்கவும் சொன்னார். பேச்சுவார்த்தையில் தான் பிரச்சினையை தீர்க்கலாம் என்றார். நாள் JR ஐ கீழே கொண்டு வந்தால்தான் பேச்சுவார்த்தையை வெற்றி அளிக் கலாம் என்றார்.(எமது தாக்குதல்கள் மூலம் கீழே கொண்டு வரலாம் என்றார்) ஆந்திரா சென்று என் டி ஆர் ஐ சந்திக்கும் படியும் நானும் முடிந்த உதவி செய்வதாகவுமசொன்னார்
நினைவுக்குறிப்புகள் தொடரும்
No comments:
Post a Comment