பகுதி 116
நினைவுக்குறிப்புகள் கடிதங்கள் தொடர்கின்றன
டெல்லியில் கவிஞரும் அரசியல் ஆய்வாளரும், தற்போது நடிகருமான தோழர் ஜெயபாலனுக்கு, PLOTE செயலதிபர் எழுதிய கடிதங்கள்.
சென்னை
21/09/84
சகோதரர் ஜெயபாலன் அவர்களுக்கு
அன்புடையீர்
தங்கள் தேதி இடப் பெற மடல் பெற்றேன். தங்களின்வேலை தொடர்பாக வெற்றியின் தகவல்களும், தங்கள் மடலும் நம்பிக்கை தருகின்றது. தங்களைப் எமது பிரதிநிதியாக அறிஞர்களையும் அரசியல் தலைவர்களையும் சந்திக்க அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் நீர் பேச்சுக்களில் சில சிக்கல்களை கழகத்தக்கு உருவாக்கி விடுவீர் என்ற கருத்துக்கள் மத்தியிலும் கழகம் தங்களின் தகுதியையும் ஆர்வத்தையும் மதிக்கும் வகையில் தங்களை டெல்லிக்கு அனுப்ப முடிவு எடுத்தது. அந்த வகையில் தாங்கள் இன்று வரை ஆற்றிவரும் பணிகள் கழகம் வைத்த நம்பிக்கையை உயர்த்த உதவியுள்ளது.
தங்கள் வேலைகளை தொடர்வது உடன் கொள்கைகளை வெற்றி பிடிக்கின்ற வகையில் நிதானத்துடன் செல்லவும் வேண்டப்படுகின்றீர்கள்.
தேசிய இனப் பிரச்சினையை முகாமை கொண்டு சமூக உடமை கொள்கைகளை கட்சி அமைப்பின் பின் பலமாக கொண்டு ஒரு மக்கள் சனநாயக குடியரசை அமைப்பதன் மூலம் சமூக வுடமை நோக்கி நடை போட முடியும் என்று நடைமுறையை ஏற்று கொண்டுள்ளோம். விடுதலைப் போராட்டத்தில் சோவியத்தும் அந்த நாட்டுச் சார்பு நாடுகளின் துணையும் முகாமையானது என்பதனை ஏற்றுக் கொள்ளும் அதேவேளையில் சீனாவின் புரட்சியையும் மாவோவின் தத்துவங்களையும் நிராகரித்துவிட முடியாது. எனவே தாங்கள் சீனாவுக்கு எதிரான அதிதீவிர பிரச்சாரங்களை செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
உலக நாடுகளிலும் இனங்களுக்கு உள்ளாகவும் இன்றைய காலகட்டத்தில் நடக்கக்கூடிய நடத்த வேண்டிய போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டமாக வோ, ஏகாதிபத்திய எதிர்ப்புடன் இணைந்த போராட்டமாகவோ மட்டும் இருக்க முடியும் எனவே எமது பிரச்சாரம் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாக இருக்கட்டும். (சீனா ஏகாதிபத்திய நாடல்ல) தனித்துப் பார்க்கும்பொழுது பெரும் வட்டத்தில் grate circle அந்த நாடுகளுடன் இணைகின்றது தான். எனினும் அதன் தனித்தன்மை நாம் மதித்தல் வேண்டும்.
அடுத்து GP, Raw department உள்ள உயர் அதிகாரிகளை சந்திப்பதை தாங்கள் தற்போதைக்கு தவிர்க்கவும். ஏனெனில் ஏற்கனவே கழக சார்பாக மூவர் சந்தித்துள்ளார்கள். பலர் சந்திப்பதை கழக சார்பாக அவர்கள் கட்டுப்பாடு உள்ளதாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நிலைமைகளையும் தேவைகளையும் ஒட்டி அறிவிக்கின்றேன்.
ஒரு வெளியே திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு நிதி முகாமையானதாகும். எனவே நிதியில் கட்டுப்பாடும் கணக்கும் அவசியமாகின்றது. ஏற்க
இப்படிக்கு
க.முகுந்தன்
21/9/84
நினைவு மடல் 2
13/10/84
தோழர் ஜெயபாலன்
டில்லி.
அன்புடையீர்
டெல்லி கிளை பொறுப்பாளர் தோழர் வெற்றிச்செல்வன் தங்கள் வேலை தொடர்பாக ஒரு அறிக்கை அனுப்பி வைத்திருந்தார் அதன் அடிப்படையில் கழகத்திற்காக தங்கள் முன் நின்று செய்யும் வேலைகளையும் தங்கள் கடும் உழைப்பையும் பாராட்டுகிறோம் அதேவேளையில் கழகத்தின் விதிகள் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்தில் கொள்ளவும்.
அரசியல்வாதிகள் தூதரகங்கள் அறிஞர்கள் ஆகியோரை சந்திப்பதை பற்றி குறைந்தபட்ச அறிக்கை ஆவது விலை கொடுக்க வேண்டும்
தோழர் ராஜனை தங்கள் சிபார்சின் நிமித்தம் தான் வெளிநாடு அனுப்பியதாக தப்பான அபிப்பிராயங்கள் தோன்றக்கூடிய விதமான பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளுங்கள் கழக நடைமுறைச் சிக்கல்களை தவிர்த்துக்கொள்ள இவ்வாறான தவறுகள் மேலும் தொடர்வதை வன்மையாக கண்டிக்கிறேன்
அனைத்து தோழமை இயக்கங்களுடனும் கருத்து ரீதியாக ஆய்வுகள் விமர்சனங்கள் செய்யலாம் அதே நேரத்தில் தனிப்பட்ட முறையில் சண்டை போடவும் அளவுக்கு மேலாக அவர்களுடன் வாக்குவாதம் செய்வதும் கழக நலன்களைப் பாதிக்கும் தாங்கள் தனியாள் அல்ல. கழகத்தின் அங்கம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.
உங்கள் தொடர்பாக ஒரு வரையறை இருப்பதுடன் கணக்குகளை பொறுப்பாளர்களும் கொடுத்து உதவவும்.
கழகத்தின் நன்மை கருதி தாங்கள் ஆற்றும் பணி தொடர்பாக டெல்லி கிளையின் மூலம் அனைத்து உதவிகளையும் செய்ய பொறுப்பாளர் பணிக்கபட்டு உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வண்ணம்
க. முகுந்தன்
படி. தோழர் வெற்றிச்செல்வன் டெல்லி பொறுப்பாளர் தங்கள்
அறிதலுக்கு ம், நடவடிக்கைக்கும்.
கடிதம் 3
28/9/84
தோழர் ஜெயபாலன் அவர்களுக்கு
தங்கள் 25/9/84 நாளிட்ட மடல் கிடைக்கப் பெற்றேன். ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதில் முன்னைய விட கூடுதலாக கவனம் எடுத்து ஆர்வம் காட்டி வருகிறோம். கடந்த சில நாட்களின் முன் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழீழ விடுதலை இயக்கம் ஈழப்புரட்சி அமைப்பு ஆகியவற்றுடன் பேச்சு நடந்தது அதில் அவர்கள் தமிழில விடுதலை இராணுவத்தை இயக்கமாக அங்கீகரிக்க முடியாது என கூறியுள்ளனர். ஆம் ரெலா ஓர் இயக்கம் என்றும் அதனை அங்கீகரிக்க வேண்டிய தேவைகளையும் வலியுறுத்தியுள்ளோம் .ரெலவை அங்கீகரிக்காத நிலையில் நாம் பேசுவது சாத்தியமில்லை. இருப்பினும் ஈழப்புரட்சி அமைப்பு ஒத்து வந்துள்ளது.
விடுதலைப்புலிகளுடமும் ஆரம்பநிலையில் ஒரு பேச்சு உண்டு. அவர்களின் அணுகுமுறைகளில் நல்ல நிலைகள் காணப்படுகின்றது ரெல வுடன் இணைப்பு தொடர்பாக சந்தேகத்தை எழுப்பலாம்.
தமிழ் தகவல் நிலையம் தொடர்பான வெளியீடுகளை நாம் அனுப்பி வைக்கிறோம் அதனை பயன்படுத்தவும்.
அரபு நாடுகள் தொடர்புகளை மிக தீவிர படுத்துவது நல்லது ஏற்கனவே நாம் சிரியா ஏடன் உடன் நேரடியான தொடர்பு வைத்திருக்கின்றோம். அல்ஜீரியா வுடன் லண்டன் கிளை ஊடாக தொடர்பு வைத்திருக்கிறோம். எனவே இம்மூன்று நாடுகளிடனும் தொடர்புகளை முன் பேசிய அடிப்படையில்தான் வைத்தல் வேண்டும்.
ஏடன், சிரியாவுடன் தாங்கள் தொடர்பு வைப்பதை தாமதிக்க வும். நான் அவற்றைப் பற்றி அறிவிக்கிறேன். அல்ஜீரியா வுடன் வைக்கும் தொடர்பு சித்தார்த்தர் வந்ததும் வைப்பது நல்லது. அவர் இரு வாரங்களுக்குள் வருவார். இருவரும் சென்று சந்திக்கலாம்.
அமிர்தலிங்கம் அவர்கள் சந்திரகாசனுடன்சேர்ந்து ஒரு நகல் அரசு அமைக்க பேச்சுவார்த்தைகள் மேற் கொண்டதாலும், இந்திய அரசின் நிலையை சீர் குலைக்கும் வகையில் சந்திரகாசனும், பின்னர் அமிர்தலிங்கமும் இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புமாறு கோரிக்கை விடுத்தாலும், பின்னர் உலகத் தமிழ் மன்றம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி அதில் தமிழ்நாட்டு தமிழர்களையும் சேர்த்துள்ளதால், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக நாம் அவ்வாறு அறிக்கை விட நேர்ந்தது
அவர்களது நடவடிக்கைகளால் இந்திய அரசு எம்முடன் முரண்பட காரணம் உண்டு. அத்துடன் ராணுவத்தை அனுப்பும் படி கேட்கும்போது இலங்கை அரசு பாதுகாப்பு கூட்டுவதோடு இளைஞர்களை கண்டபடி சுட்டு தீர்க்க வழி வகுத்தது மாகும். இதனால் வரும் ஆபத்து தலைமறைவு இயக்கங்களுக்கு அன்றி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அன்றி சந்திரகாசன் அவர்களுக்கோ அல்ல.
இன்றைய நிலையில் நாம் இயக்கங்களையும் இளைஞர்களின் காப்பாற்றுவதுஉடன், அரசாங்கத்தினதும் இவர்களைப் போன்றவர்கள் இனதும் தந்திரவேலைக்கு பலியாகி விடக்கூடாது.
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி ஏன் தமிழர் கூட்டணியை சந்தித்தது என்றால் ஏற்கனவே சந்திரகாசன் தொடர்பினால் இந்திய அரசின் உதவியை எடுக்க முடியாத நிலையில் இருந்ததாலும், தொடர்ந்து சந்திரகாசன் ஏ தலைவராக்க சந்திக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருந்ததாலேயும் ஆகும்.
தாங்கள் தொடர்ந்து அறிஞர்களையும் செய்தியாளர்களை சந்தித்து எமது சிக்கல்களையும் கழக நிலைமையையும் விபரமாக எடுத்துக் கூறவும் உண்மையான எமைப் பெற்ற எந்த இயக்கமும் ராஜதந்திர ரீதியில் இயங்குவதால் மட்டும் வெற்றி பெற முடியாது. அதிதீவிர பயங்கரவாதம் ஒரு காலகட்டத்திற்கு மேல் எடுபட முடியாது. ஆகவே இத்தகைய போலிகளை பற்றி நாம் பயப்படத் தேவையில்லை.
கடித தலைப்புகள் தேவைக்கேற்ப பயன்படுத்துவதற்கு அனுப்பி வைக்கிறோம். கில்லி கிளை பொறுப்பாளருக்கு செய்திகளை அவ்வப்போது விளக்குவதுடன் தங்கள் வேலைகள் தொடர்பாக முன்கூட்டியே அவருக்கு தெரிவிக்கவும்.
இவ்வண்ணம்
க. முகுந்தன்
செயலதிபர்.
Copy to வெற்றிச்செல்வன்.
நினைவு வரலாற்று கடிதங்கள் தொடரும்.
No comments:
Post a Comment