பகுதி 109
பழைய நினைவு கடிதங்கள்
பழைய நினைவு கடிதங்கள். டெல்லியிலிருந்து 6/06/1987 ஆண்டு எழுதியது.
புதுடில்லி கிளை அலுவலகம்
புதுடில்லி
6/06/1987.
செயலதிபர்
தமிழிலமக்கள் விடுதலைக் கழகம்
சென்னை
அன்புடையீர்
தலைமையகத்தில் இருந்து தோழர் சைமனை டெல்லிக்கு அனுப்புவதாக 4/05/87 திகதியிட்ட கடிதம் கிடைத்தது. பின்பு தோழர் சைமன் 26/05/87 டெல்லிக்கு வந்தார்.
கடந்த பல மாதங்களாக டெல்லி அலுவலகம் செயல்பட தேவையான பணம் தலைமையகதால் தரப்படவில்லை. தலைமையகத்தில் ஏற்பட்ட பணப்பற்றாக்குறையையும் நான் அறிவேன். அதனால் நான் இங்கு டெல்லியில் வெளிநாட்டுக்குப் போக வந்து பிடிபட்டு சிறையில் இருக்கும் இலங்கை தமிழருக்கு உதவி செய்வதன் மூலம் 500/=ரசீது கொடுத்து நன்கொடை பெற்றும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியும் (இன்றுவரை 7000/=மேல் திருப்பி கொடுக்க வேண்டிய கடமை உள்ளது) டெல்லி நிர்வாகத்தை நடத்தி வருகிறேன்.
நாங்கள் (PLOT) தளத்தில் இயங்காமல் இங்கு ஒருவரிடமும் நன்கொடை பெற முடியாது. அதோடு PLOT விட்டு வெளியேறியவர்களால் செய்யப்படும் கீழ்த்தரமான பிரச்சாரங்களால்(டெல்லி உட்பட) சில பேரிடம் போய் கடன் கூட கேக்க முடியவில்லை.
மேலும் மேலும் நான் கடந்த காலத்தில் சந்தித்த பத்திரிகையாளர்கள் தூதுவராலயங்களை தொடர்ந்தும் சந்தித்து வருகின்றேன். ஆனால் இன்று நாம் தளத்தில் செயல்படும் நிலையில் இல்லாததால், அவ்வளவாக அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இன்றைய முக்கிய காலகட்டத்தில் நாம் தொடர்ந்தும் LTTE யை விமர்சிக்கும்போது அவர்கள் எம்மை நம்பத் தயாராக இல்லை. ஏனெனில் இன்று சகல பேப்பர் சஞ்சிகைகளிலும் LTTE, EROS தான் தளத்தில் நன்று போராடி வருகிறார்கள் என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளன. இதை நாம் களத்தில் இறங்கி எமது ராணுவ நடவடிக்கையைப் தொடங்கிய பின்புதான் முறியடிக்கலாம்.
இன்று இந்திய அரசு (RAW) எமக்கும் ஆதரவளிக்க தொடங்கியுள்ள நிலையில் நான் பல பேரை சந்திக்கும்போது அதிக மகிழ்ச்சியில் சில ரகசிய தகவல்களையும் நாய் தடுமாறி கூறலாம். இதுவும் பின்பு RAW பிரச்சனையாகிவிடும். அதோடு நாம் பல பத்திரிகையாளர்களையும், தூதுவராலயங்களையும் சந்திப்பது இந்திய புலனாய்வுத் துறைக்கு பிடிக்கவில்லை.
கடந்த இரண்டு மாதமாக டெல்லியில் ஒருவரும் பிடிபடவில்லை. அதான் எனக்கு காசும் கிடைக்கவில்லை. இன்று நான் கடன் வாங்கி செலவழிக்கும் பணத்தில் முக்கியமாக
(1) லண்டன் கிளைக்கு தொடர்ந்து கட்டிங்ஸ் அனுப்பி வருகிறேன். அதற்கே மாதம் கிட்டத்தட்ட 225/=வருகின்றது.
(2)phone காசு கட்டவேண்டும். தற்சமயம் சில அவசர தொடர்புகளுக்கு demant அல்லது urgent call எடுக்க வேண்டியுள்ளது.
(3) முக்கிய பத்திரிகை செய்திகளை தொடர்ந்து குறிப்பிட்ட தூதுவர் ஆலயங்களுக்கு அனுப்பி வருகின்றேன்.
(4). M.P இக்கு கடந்த ஒன்றரை வருட கரண்ட்பில் கிட்டத்தட்ட 1000/=நான் கட்ட வேண்டி உள்ளது.
மேற்கூறிய வேலைகளுக்கு நான் பணத்தை செலவழித்து வரும்போது தொடர்ந்து தோழர் சைமனுக்கும் செலவழிப்பது இயலாமல் உள்ளது.
நாம் தளத்தில் எம்மை பலப்படுத்தி ராணுவ ரீதியில் பழம்பெரும் வரை இங்கு எமது பிரச்சாரத்தை இனிமேலும் தொடர முடியாது. ஏனெனில் கடந்த நான்கு வருடமாக கூறி வந்ததையே கூறி வருகின்றோம். செயலில் காட்ட வில்லை எமக்கு ஆதரவு கொடுத்த IIT மாணவர்கள் உட்பட பலபேர் இப்ப எம்மை நம்பத் தயாராக இல்லை.
மேற்கூறிய பல காரணங்களால் இங்கு இன்றைய நிலையில் ஒருவரை மிக சிரமமான நிலையில் டெல்லி அலுவலக வேலையை கவனிக்க போதுமானதால், தோழர் சைமனை திரும்பவும் சென்னை அனுப்புகிறேன்.
கழகம் நல்ல நிலைமைக்கு வரும்வரையில் எப்படியும் டெல்லி அலுவலகத்தை என்னால் இயன்ற அளவு நடத்திச் செல்வேன். கழகம் பணத்தாலும் ராணுவ ரீதியிலும் பலம் பெற்ற பின்பு தோழர் சைமன் இங்கு அனுப்பி வைத்தால் நலம்..
இவ்வண்ணம்
த. வெற்றிச்செல்வன்
பொறுப்பாளர்
டெல்லி அலுவலகம்.
படி
தோழர் ஆனந்தி
பின்தள அமைப்புச் செயலாளர்.
No comments:
Post a Comment