நான் கழக பொறுப்பில் சென்னையில்இருந்தபோது, கொடுத்த பத்திரிக்கை அறிக்கைகள் சில.
1))
11 தேசிகர் வீதி, வடபழனி, சென்னை 26
Date. 23/05/89
சென்னை
பத்திரிகை செய்தி
விடுதலைப்புலிகளின் கொலைவெறித் தாக்குதல்
மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதியில் முகாமிட்டிருந்த எமது தோழர்களை 20/05/89 சனிக்கிழமை கொலைவெறி கும்பலான விடுதலைப்புலிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் எம் பல தோழர்கள் வீரமரணம் அடைந்தனர். எமது புளொட் தோழர்களுடன் நட்புறவுடன் இயங்கி வந்த பல அப்பாவி கிராம மக்களையும் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
இன துரோகிகளின் கொலைவெறி செயலுக்கு பலியான எம் இளம் வீரர் தோழர்களுக்கும் கிராம மக்களுக்கும் எமது வீர அஞ்சலிய செலுத்துகின்றோம்.
மன்னார் மாவட்டத்தில் இனப்பிரச்சினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது இயக்கத் தோழர்கள் பல வழிகளில் புணர்நிர்மான வேலைகளில் உதவி புரிந்து வருகின்றனர். இதைக் கண்டு பொறுக்காத புலி கும்பல் பலமுறை எமது தோழர்களை கொலைகள் செய்துள்ளனர்.
இக்கொலைவெறி தாக்குதல்களை சர்வாதிகார ரத்தவெறி பிடித்த புலிகள் இயக்கம் உடனடியாக நிறுத்தாவிட்டால் நாம் எமது தோழர்களையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற பிற சக்திகளுடன் சேர்ந்து போராடுவோம் என தெரிவிக்கின்றோம்.
த. வெற்றிச்செல்வன்
பிரதிநிதி, PLOT.
பத்திரிகை செய்தி 2
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
11, தேசிகர் வீதி, வடபழனி, சென்னை.600026
13/09/88
பத்திரிகை செய்தி
கடந்த வருடம் 13/09/87இல் மட்டக்களப்பு நகரில் வைத்து எமது அரசியல் செயலர். இரா. வாசுதேவன், ராணுவச் செயலர் கண்ணன் உட்பட பல கழகத் தோழர்களை பாசிச வெறி கொண்ட தமிழீழ விடுதலைப் புலியினர்(LTTE). இயக்கங்களுக்கான ஒற்றுமை பற்றி பேச அழைப்பு விடுத்து, அவர்கள் வரும் வழியில் வைத்து அவர்களை நயவஞ்சகமாக கொன்றார்கள்.
இவர் கொல்லப்பட்ட முதலாவது ஆண்டு நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தும் முகமாக தமிழில மக்கள் விடுதலைக் கழகம் 13/09/88இல் தமிழர் தாயகமான வட கிழக்கில் ஹர்த்தால் நடத்துமாறு அழைப்பு விடுத்துள்ளது.
தோழர் வாசுதேவா 17 வருட காலமாக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஆரம்ப காலங்களில் அகிம்சைபோராட்டங்களிலும், பின்பு ஆயுதப் போராட்டத்திலும் நம்பிக்கை கொண்டு போராடி வந்தவர். தோழர் கண்ணனும் தோழர் வாசுதேவனை போல நீண்ட காலம் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலியின(LTTE). தமது ஆரம்ப காலம் தொட்டு தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்ற வெறியில் பல விடுதலை இயக்கத் தலைவர்களையும் தோழர்களையும் நயவஞ்சகமாக கொன்று உள்ளார்கள்.
அந்த தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலியினர் தமது கடந்த கால தவறுகளை களைந்து தமிழ் ஈழ மக்களின் அமைதிக்காகவும் , இறைமைக்காகவும், சக விடுதலை இயக்கங்களோடு புரிந்துணர்வோடும், நட்புறவுவோடும் செயல்படும்படி கேட்டுக் கொள்கிறோம்
த. வெற்றிச்செல்வன்
பிரதிநிதி, சென்னை.
கடிதம் 3
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
11, தேசிகர் வீதி, வடபழனி, சென்னை 26
20/10/88
பத்திரிகை செய்தி
கடந்த வாரம் எமது இயக்கத்துக்கு எதிராக ஒரு திட்டமிட்ட விஷமத்தனமான ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது எமது பிளாட் இயக்கம் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கிழக்கு மாகாண தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக சில தீய சக்திகள் இப்படிப்பட்ட விஷமத்தனமான பிரச்சாரங்கள் மூலம் எம் தமிழ் மக்களிடமிருந்து எம்மை பிரிக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
சுயமான சிந்தனை யும் , சுதந்திரமான கருத்துக்களையும், தெளிவான கொள்கையும் உடைய தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வேறு கட்சிகளின் பெயரில், போர்வையில் எம் மக்களை சந்திக்க தேவையில்லை என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறோம்.
இம் மாகாண தேர்தலில் நாம் பங்கு பெறாத காரணம் ஒரு சுதந்திரமான அமைதியான முறையில் எல்லா இயக்கங்களும் கட்சிகளும் போட்டியிட கூடிய சூழ்நிலை இல்லை. இந்திய-இலங்கை அரசுகள் தங்களது ஒப்பந்தம் வெற்றிஎன்று உலகுக்கு ஓர் மாயையை காட்டவே தேர்தல் இத் நடக்கிறது.
தமிழ் மக்களுக்கு இன்று அமைதி தேவை படுகிறது, என்பதில் நாம் மாற்றுக் கருத்து உடையவர்கள் அல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வு ஆயுதமல்ல, அரசியல் தான் எனக் கூறிக்கொள்ளும் இந்திய அமைதிப்படை வவுனியா ,மன்னார் மாவட்டங்களில் எமது இயக்கத்தின் அரசியல் பணிகளையும், மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் மக்களுக்கு உதவி செய்த நமது தோழர்களையும் சுட்டுக் கொன்றும் கைது செய்து சிறையில் அடைத்தும், எமது இயக்கம் அரசியல் ரீதியில் வளரவிடாமல் செய்து வருகிறது. இந்தியப் படையினர் தம்மை ஆதரிக்கும் இயக்கங்களுக்கு அரசியல் வாய்ப்பளிக்க வசதியாக மாற்று இயக்கங்களை அழித்தொழித்து வருகின்றது.
வடக்கு கிழக்கில் அமைதி நிலவி ஒரு சுதந்திரமான தேர்தல் நடக்க வேண்டுமாயின் உடன் ஒரு உறுதியான யுத்த நிறுத்தம் தேவைப்படுகிறது. அதோடு இந்திய படையும் யுத்த நிறுத்தத்தை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். கடந்த யுத்த நிறுத்தத்தின் போது 16/9/88 பறையன் ஆலங்குளம், மடுரோட் ஆகிய இது அமைதிப்படை முகாங்களில் இருந்தும் வீரர்கள் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். அதையடுத்து குஞ்சுக்குளம் கிராம மக்களையும் தாக்கியுள்ளனர்.
இந்தியப் படையினர் யுத்த நிறுத்தத்தை உறுதியாக கடைப்பிடிக்க மாட்டார்கள் என்று கருதியே பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் யுத்த நிறுத்தம் அமைய வேண்டும் என கோரிக்கை விட்டிருந்தோம். அவையாவன இந்தியப் படையினர் முகாமிலேயே தங்கியிருக்க வேண்டும். அவர்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் செல்லும்போது அந்தந்த பகுதியில் அரசு நிர்வாகத்துக்கு பொறுப்பாக உள்ள அரசாங்க அதிபரின் அனுமதியுடன் செல்ல வேண்டும்.
இந்திய படையினர் தயவில் தங்கியிருக்கும் இயக்கங்களினால் ஏனைய இயக்கங்களில் உள்ளவர்களும் எதிரான அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அழிக்கப்படுவதும், கொள்ளைகள் நடைபெறுவதும் தடுக்கப்படும் ,வகையில் அவர்களிடமிருந்து ஆயுதங்கள் மீள பெறப்பட வேண்டும். இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் வேலைகள் செய்வதற்கும் அரசியல் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவதற்கு இயக்கங்களுக்கு எவ்வித தடையும் இருக்க கூடாது. அரசு நிர்வாகத்தில் இந்தியப் படையினர் தலையிடக் கூடாது.
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் யுத்த நிறுத்தம் அமைந்தால் மட்டுமே, வடக்கு கிழக்கில் அமைதி நிலவி சுதந்திரமான தேர்தல் நடக்க வழி ஏற்படும் என எமது கழகம் (புளொட்) கருதுகிறது.
த. வெற்றிச்செல்வன்
பழைய நினைவுக்குறிப்புகள் தொடரும்.
No comments:
Post a Comment