பழைய நினைவு கடிதங்கள்
08/09/1984
திரு. வெற்றிச்செல்வன் அவர்கள்
டெல்லி பொறுப்பாளர்
அன்புடையீர்
கழகத்தின் கொள்கைகளையும் நிலைப்பாடும் டெல்லியில் உயர்மட்ட மத்தியில் முழுமையாக தெளிவுபடுத்தப்படவில்லை. இதனை காலத்துக்கு காலம் தெளிவுபடுத்துவதற்கு கழகத் தோழர் ஒருவரை உம்மிடம் அனுப்பி வைக்கும்படி பலதடவைகள் கேட்டிருந்தீர்கள். தங்கள் வேண்டுதலை பூர்த்தி செய்யும் வகையிலும், கழகத்தின் கொள்கைகளையும் அரசியல் நிலைப்பாட்டையும் டெல்லியில் உள்ள உயர்மட்ட அரசியல் தலைவர்கள் செயலாளர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் அறிஞர்கள் மத்தியில் விளக்குவதற்கும் என தோழர் ஜெயபாலன் அவர்களே அங்கு அனுப்பி வைக்கிறோம்.
தோழர் ஜெயபாலன் தகுந்த முறையில் உங்களிடத்தில்நீங்கள் பயன்படுத்தவும். நமக்குத் தேவையான தரவுகளை உடனுக்குடன் அரசுக்கு கொடுத்ததற்காக ஒரு நூல் நிலையத்தை ஜெயபாலனின்துணையுடன் அமைக்கவும். அங்கு உடனுக்குடன் செய்திகளை கொடுக்கவும் தூதரகங்களுக்கு அறிக்கை கொடுக்கவும் சில தயாரிப்புகளை கோப்புகளில் உருவாக்குதல் வேண்டும். கழகத் தோழர்கள் வெளிநாட்டுக்குப் போகும் போதும் உயர் அதிகாரிகளை சந்திக்க போகும்போதும் அவருடன் பேசுவதற்கு வேண்டிய அறிக்கைகளை தயாரிக்க தோழர் ஜெயபாலன் அவர்களே துணையாக கொள்ளவும்.
தில்லியில் பணிகள் கூடி கொண்டிருப்பதினால் அங்குள்ள அழுகை அலுவலகத்துக்கான தகுதியான ஒரு தோழரை(மாணவர்) வெகு விரைவில் அனுப்பி வைக்கிறோம்.
இவ்வண்ணம்
க. முகுந்தன்
செயலதிபர்.
நினைவு கடிதம் 2
செயலகம்
சென்னை
4/05/87
தோழர் வெற்றிச்செல்வன்
டெல்லி கிளை அலுவலக பொறுப்பாளர்
அன்புடையீர்
வெளிநாட்டு தூதரகங்களிலும் முற்போக்கு விடுதலை இயக்கங்களுக்கும், கழகத்தின் இன்றைய அரசியல் நிலைப்பாட்டையும், ஈழத் தமிழர்களின் நிலையையும் எடுத்து கூறுவதற்காக தோழர் சைமனைஅனுப்பி வைக்கிறோம். கீழே குறிப்பிடப்பட்ட வேலை செய்து முடிப்பதற்கு தாங்கள் அனைத்து உதவிகளையும் தோழர் சைமன் கொடுத்து உதவுமாறு வேண்டப்படுகின்றிர்கள்.
1. அனைத்து தூதரகங்களுக்கும் சென்று எமது நிலையை எடுத்துக்கூறி தொடர்புகளை ஏற்படுத்துதல், பலப்படுத்துதல்
2. வெளிநாட்டு முற்போக்கு இயக்கங்களுடன் (விடுதலை இயக்கங்கள்) தொடர்புகளை ஏற்படுத்தல், பலப்படுத்தல்.
3. டில்லியில் உள்ள அனைத்து செய்தித் தாள்கள் உடன் தொடர்புகளை ஏற்படுத்தல், ஈழப்பிரச்சினையை எடுத்துக் கூறல்
4. மேற்குறிப்பிட்ட தொடர்புகளை புதிதாக ஏற்படுத்துவதற்கு டெல்லியில் இருக்கும் புத்திஜீவிகளையும் அரசியல்வாதிகளையும் பயன்படுத்தல்.
மேற்குறிப்பிட்ட அனைத்து வேலைகளையும் இவர் செய்வதற்கு அனுமதிக்கப் படுவதுடன் ஒவ்வொரு தொடர்மாத 5ஆம் தேதிக்கு முன் தலைமைச் செயலகத்துக்கு இவர் வேலைகள் தொடர்பான அறிக்கையை அனுப்பி வைத்தல் வேண்டும்.
தோழர் சைமனின் அறிக்கையுடன் தங்கள் வேலைகள் தொடர்பான அறிக்கைகள் அலுவலக அறிக்கைகள் முதலியவற்றை தொடர் மாதம் 5ஆம் தேதிக்கு முன்னர் அனுப்பும்படி கேட்க படுகின்றீர்கள்.
இவ்வண்ணம்
க. முகுந்தன்
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
படி. தோழர் சைமன் உடனடியாக மேற்குறிப்பிட்ட வேலைகளை டெல்லியில் பொறுப்பு எடுக்குமாறு கேட்க படுகின்றார்கள். டெல்லி நிர்வாகம், நிதி அனைத்துக்கும் தோழர் வெற்றிச்செல்வன் பொறுப்பாக இருப்பார். மேற்குறிப்பிட்ட வேலைகள் தொடர்பாக திங்கள் அறிக்கை அனுப்பி வைக்கவும்.
தோழர் ஆனந்தி பின்தள அமைப்புச் செயலாளர்.
நினைவு கடிதம் 3
13/10/84
தோழர் வெற்றிச்செல்வன்.
டெல்லி கிளை பொறுப்பாளர்
அன்புடையீர்
தங்கள் 9/10/84. நாளிட்ட மடல் கிடைத்தது ஏற்கனவே தீர்மானித்த படி வீட்டு விடயமாக L. கணேசன் எம் பி ஐ பயன்படுத்தவும். லண்டன் கூட்டத்துக்கு அனுப்புவதற்கு திரு வலம்புரிஜான் அவர்களே அதிமுக நிர்வாகம் அனுமதித்துள்ளது ஆகவே அவருடன் மேற்கொண்டு பேசி விபரம் அனுப்பி வைக்கிறோம். உடன் தொடர்பு கொண்டு ஆவன செய்யவும்.
சித்தார்த்தர் இவ்விடம் வந்தாலும் ஜெயபாலன் தொடர்ந்து பணியாற்றவும் தொடர்புகள் எடுக்கவும் அனுமதிக்கவும் ஆனால் அவரது வேலைகளையும் பணச் செலவுகளையும் கட்டுப்படுத்தி வைக்கவும்
அவர் என்ன வேலையாக வழிகள் தங்குகிறார் என்ற விபரத்தையும் இவ்விடத்தில் தங்கம் முடியாததற்கான காரணத்தையும் அறிந்து தகுந்த காரணம் இருப்பின் அனுமதிக்கவும். அவருடைய பாஸ்போர்ட் வாங்கி உமது பாதுகாப்பில் வைத்துக் கொள்ளவும்.
ஆங்கிலத்தில் நாம் வெளியிட்ட தமிழீழத்தின் குரல் வெளியீடு அனுப்பி வைத்திருந்தோம். தற்போது ஸ்பார்க் என்னும் சஞ்சிகை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளோம். கூடிய விரைவில் நீர் கேட்ட தொகை அளவுக்கு அனுப்பி வைக்கிறோம்
இவ்வண்ணம்
க. முகுந்தன்
நினைவுகள் தொடரும்.
No comments:
Post a Comment