பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 3 August 2023

சந்ததியரின் கொலையும் பின்னணியும் பகுதி 3

  வெற்றிசெல்வன்       Thursday, 3 August 2023
#சந்ததியார் #கொலையும் #பின்னணியும்
சண்முகலிங்கம் செந்தூரன் 

   #தொடர்#3

இதேவேளை உமாவின் திருமணத்திற்காக பேபி பராராஜசேகரன் என்பவர் வருகின்றார். இவர் பல போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்.இவர் ஆரம்பத்தில் காந்தீயத்தில் வேலை செய்தவர் .பேபி காந்தீயத்தில் வேலை செய்தகாலத்தில் ஒருமுறை சந்ததியாரை கருத்து முரண்பாடு காரணமாக தாக்கியும் இருக்கிறார். இதன் பொழுது சந்ததியாரின் கண்ணாடியும் உடைந்தமை குறிப்பிடத்தக்கது பேபி 1982ல் உமாவினால் பிரான்ஸ் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர். பேபிபராராஜசேகரன் இந்தியா வருவதையும் போதை மருத்து வர்த்தகத்தில் ஈடுபடும் பேபி பராராஜசேகரனுடன் புளொட் அமைப்பு தொடர்புகளை ஏற்படுத்துவதை சந்ததியார் விரும்பவில்லை.அத்தோடு போதை பொருள் வர்த்தகத்தில் கிடைக்கும் பணத்தை பேபி பராராஜசேகரனிடம் இருந்து உமா பணம் பெறுவதையும் சந்ததியார் விரும்பவில்லை இதனால் சந்ததியார் உமா விரிசல் மேலும் அதிகரிக்கின்றது

.மேற்குறித்த விடயத்தை என்னிடம் தெரிவித்தவர் சறோயினி 

சந்ததியாரை பலரும் காந்தீயவாதி என்று கூறுகிறார்கள் இருப்பினும் காந்திய வழியில் சாதி ஒழிப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் மலையக மக்களை வடக்கு கிழக்கில் குடிறேற்றியமை போன்ற செயற்பாடுகளில் சந்ததியார் ஈடுபட்டாலும் காந்தியின்  அகிம்சை வழியை கடைப்பிடிக்க தவறிவிட்டார்.சந்ததியார்.சுபாஸ்சந்திரபோஸ்  வன்முறை மூலம் இந்தியாவிற்கு சுகந்திரத்தை பெற்றுக்கொடுக்க முயன்றபோது அதனை முற்றாக எதிர்தவர் அகிம்சா மூர்த்தி காந்தியடிகள் ஆனால் சந்ததியார் தனக்கு தேவைப்படும் போதெல்லாம் வன்முறையை கையில் எடுத்தவர் சந்ததியார் என்பதே நிதர்சனமான உண்மை.அதற்கான இரண்டு சம்பவங்கள் குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.

மாதவன் என்பவர் வவுனியாவை சேர்தவர் இவர் புளொட் அமைப்பின் முக்கிய செயற்பாட்டளரும் கிளிநொச்சி வங்கி கொள்ளையில் ஈடுபட்ட காத்தான் என்றழைக்கப்படும் கிருஷ்ணசாமி கிருஸ்ணகுமாரின்  நண்பர் .காத்தான் வவுனியாவில் விமானப்படையினருடனான மோதலில் இறப்பதற்கு முன்பு பொதி ஒன்றினை  மாதவனிடம் கொடுத்து வைத்திருந்தார் காத்தான் இறந்த பின்பு மாதவனிடம் காத்தான் வழங்கிய பொதி ஒன்று இருப்பதை அறிந்த சந்ததியார் கந்தசாமியுடன் மாதவனின் வீட்டிற்கு சென்று மாதவனின் சிறு குழந்தை மற்றும் மனைவியை துன்புறுத்தியதோடு கந்தசாமி மாதவனின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்ததோடு பத்து நாட்களில் பொதியை  ஒப்படைக்காவிடில் சுட்டுவிடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்  சந்ததியாரும் கந்தசாமியும்.

ஆனால் மாதவன் காத்தனுக்கு கொடுத்த வாக்கை காப்பற்ற இந்தியா சென்ற மாதவன் சிறையில் இருந்த உமாவை சந்தித்து அனைத்தையும் கூறுகிறார் மாதவன்.சந்ததியாரிடம் ஒப்படைக்க வேண்டாம் தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறுகிறார் உமா.சிறையில் இருந்து மீண்டும் உமாவிடம் குறித்த பொதியை ஒப்படைத்ததோடு புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறார் மாதவன்.

பின்னாளில் கந்தசாமி மாதவனிடம் தான் தவறாக  நடந்தது கொண்டமைக்கு மன்னிப்பு கேட்டதோடு மாதவன் குடும்பத்தில் உரிமையுடன் பழக கூடியவராகவும் மாறி விட்டார். மேற்குறித்த விடயத்தை கந்தசாமி வெற்றி செல்வனிடம் கூறி வருத்தப்பட்டார் கந்தசாமி.இதனை வெற்றி செல்வன் மாதவனிடம் கேட்க அதனை ஒப்புக் கொண்டுள்ளார் மாதவன். 

ஒருமுறை தஞ்சாவூரின் ஒரத்தநாடு என்னும் இடத்தில் அமைந்துள்ள  மொக்கு மூர்த்தியின் சித்திரவதை கூடத்திற்கு சென்ற சந்ததியார் விசாரணைக்கு தடுத்து வைக்கப்பட்ட  சில புளொட் உறுப்பினர்களை தாக்கியும் இருக்கிறார். இச்சம்பவத்தை கந்தசாமி வெற்றி செல்வனிடம் மணியத்தார் ஒரத்தநாட்டில் பெடியளை எலலாம் அடிக்கிறார் எனக் கூறி சிரித்துள்ளார்.இங்கு மணியத்தார் என்பது சந்ததியாரை புளொட் உறுப்பினர்கள் தங்களுக்குள்  குறிப்பிடும் ஒரு குழுவுக்குறி

இதேவேளை கிளிநொச்சி வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்டு உமாவிடம் இருந்த நகைகளை விற்பனை செய்ய பெசன்ட் நகரில் வசித்த ஒரு இலங்கை தமிழரிடம் கொடுத்திருந்தார் உமா.குறித்த இலங்கை தமிழர் நகையை விற்பனை செய்ததோடு குறித்த ஒரு தொகையை எடுத்து விட்டார் இதனை விசாரிக்க சென்ற உமா குறித்த இலங்கை தமிழனின மனைவியிடம் ஒரு விடுதலை இயக்கத் தலைவர் செய்யக்கூடாத தனிமனித ஒழுக்கத்திற்கு எதிரான விதமாக நடந்து கொள்கிறார் .இது மிகவும் அருவருக்கத்தக்க விடயம்.இந்த விடயத்தை கண்ணுற்ற ஈழப்போரட்டத்தில் முன்னேடிகளில் ஒருவரும் புளொட் அமைப்பில் முக்கியமானவருமாகிய காக்கா என்று அழைக்கப்பட்ட உடுவிலை சேர்ந்த சிவனேஸ்வரனுக்கும் உமாமகேஸ்வரனும் முரண்பாடாக மாறி இருந்து.இதுவே காக்கா கொலைக்கு காரணமாக அமைந்த மற்றுமொரு விடயம் 

சந்ததியார் சறோயினி குடும்பத்திடம் ஏமாந்தது போல் உமாவும் ஓர் குடும்பத்திடம் ஏமாந்தார்.அனால் அதனை உமா கையாண்ட விதம் வெறுப்புக்குரியது..கிளிநொச்சி வங்கியில் கொள்ளையடித்த நகைகளை சறோயினியின் உறவினர்கள் எடுத்ததாக முன்னைய தொடரில் குறிப்பிட்டு இருந்தேன்  அவர்களுக்கு மரணதண்டனை  வழங்குவதில் சந்ததியார் உறுதியாக இருந்தார்.சந்ததியாருக்கு சறோயினி குடும்பம் செய்த இத்துரோகமே சந்ததியாரின் போரட்ட வாழக்கையில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தியோடு இன்றுவரை சர்ச்சைக்குரிய பேசு பொருளாகவும் மாறியுள்ளது. 

மேலும் உமாவின் மேற்குறித்த செயலானது சந்ததியார் மட்டுமல்லாமல் பல புளொட் உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உமாவினால் சிறந்த போரளியான காக்கா போன்ற போரளிகளை படுகொலை செய்தமையானது இயக்கத்தின் வளர்ச்சி உகந்ததல்ல என உமாவை எதிர்க்க தொடங்குகின்றார்கள் புளொடின் முக்கிய போரளிகள்..

அக்காலப்பகுதியில் சார்லி கந்தப்பா என்பவர் புளொட் அமைப்பில் சேருகிறார் இவர் ஒரு தமிழ் தெரியாத தமிழர்.கந்தப்பா அன்றைய இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்துலத் முதலியின் ரகசிய முகவர் என நம்பப்படுகிறது. இவர் மூலமே உமாமகேஸ்வரன் அத்துலத் முதலி உடனான இரகசிய தொடர்பை தன்னிச்சையாக  ஏற்படுத்துகின்றார்  உமா இச்சம்பவமானது புளொட்டின் முன்னனி உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் விசனத்தை ஏற்படுத்துகின்றது.

மேலும் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் வலது சாரி அரசியலை எதிர்வந்தவர்களில் 
சந்ததியாரும் ஒருவர் அத்தோடு சந்ததியாரின் நண்பனும் புளொட் அமைப்பின் உருவாக்கத்திற்கு உழைத்த சுந்தரம் கொலை செய்யப்பட்டமையை முந்தைய தொடரில் குறிப்பிட்டிருந்தேன் சுந்தரம் கொலையால் பல தோழர்கள் அமிர்தலிங்கம் மீது கோபம் அடைந்திருந்தார்கள்.ஆனால் அமிர்தலிஙத்துடன் மீண்டும் உறவை உமா தன்னிச்சையான ஏற்படுத்த முன்னணி தோழர்களும் சந்ததியாரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இதேவேளை புளொட் உறுப்பினர்களின் பயிற்சி முகாமுக்கு சென்று அரசியல் வகுப்பு 
களை எடுக்கும் பொழுது உமாவை பெரியய்யா என அழைக்க கூடாது எனவும் கழகம் தனி ஒருவரை முதன்மை படுத்துவது பிழையானது என நல்ல விடயத்தை போதித்தோடு ,போரளிகளுக்கு அரசியலை முதன்படுத்தி இராணுவ ரீதியிலான செயற்பாட்டை வலுக்குறைக்கும் வகையிலும் போதிக்கிறார்.அன்றைய சூழலில் இராணுவ செயற்பாடுகள் வலுப்படுத்த வேண்டிய விடயமாக இருந்தது சந்ததியார்.இதுவே சந்ததியாருக்கு பெருமளவிலான போரளிகளின் ஆதரவு கிடைக்காமைக்கு காரணமாக அமைந்தது

இதனால்  முகாம் பொறுப்பாளர்கள் சந்ததியார் போரளிகளின் போரட்ட கனவை சிதைப்பதாக கருதி சந்ததியாரை தங்கள் முகாமில் வகுப்புகள் வைப்பதற்கு அனுமதிக்கவில்லை.

சந்ததியாரை முகாம் பொறுப்பாளர்கள் இவர்களின் தங்கள் முகாம்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க  விடாததால் அனைத்து முகாம் பொறுப்பாளர் சென்னையில் தங்கிய சமயத்தில்  சந்ததியாரின் மிக நெருங்கிய சிஷ்யர் தங்கராஜ் என்பவர் தஞ்சாவூரின்  ஓரத்தநாட்டில் sick camp என்ற  நோயாளிகள் சிகிச்சை பெறும் முகாமை அமைத்து சந்ததியாரின் கொள்கைகளை போதிக்கிறார் பின்னாளில் குறித்த விடயம் அனைத்து முகாம் பொறுப்பாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதால் குறித்த முகாம் மூடு விழாக்கண்டது.

இறுதியாக வாசுதேவாவின் முகாமிற்குள் சந்ததியார் செல்ல முற்ப்பட்பவேளை சந்ததியார் வாசுதேவாவால் அனுமதி இன்றி தனது முகாமிற்குள் நுழைய முடியாது எனத் தடைவிதிக்கிறார்.அத்தோடு சந்ததியார் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி கொள்கிறார்.

உமாவின் தவறுகள் மற்றும் கழக சில முக்கிய  தோழர்களின் அராஜகங்கள் அதிகரித்ததால் டேவிற் ஐயாவும் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி கொள்கின்றார்

இவ்வாறு வெளியேறியவர்களூடன் சந்ததியார் தீப்பொறி என்னும் அமைப்பு உருவாங்கப்படுகின்றது.1985ம் ஆண்டு மே மாதம் புதியதோர் உலகம் என்னும் புத்தகத்தை வெளியிட்டார்கள் தீப்பொறியினர் இதில் புளொடின் அராஜகம் பற்றி விபரித்திரிந்தது அந்த நூல் .இந்நூல் பல இயங்களின் உதவியுடன் தளத்திற்கு எடுத்து வந்து தளத்தில் விநியோகிக்கப்பட்டது.இப்பத்தகத்தில் பலரும் புனைபெயர்களில் எழுதியதால் இப்புத்தகம் வரவேற்ப்பு பெறவில்லை. உண்மையான பெயர்கள் பயன்படுத்தப்பட்டிருப்பின். இப்புத்தகம் பல மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும்.மேலும் இப்பத்தக ஆசிரியர் கூறி உள்ளார் தங்களது போரட்டம் வீரயத்துடன் முன்னேடுக்கப்படும் என்று இருப்பினும் அக்கூற்று பேச்சளவில் மட்டுமே இருந்தது.

தவறுகளை தட்டிக்கேட்டமைக்காக டேவிட் ஐயா 02.08.1985 ம் ஆண்டு இரவு 10.30 மணியளவில் அண்ணாநகர் பஸ்நிலையத்தின் பின்னால் வைத்து 4 இளைஞர்களால் அடித்து வீழ்த்தப்பட்டு வானில் கடத்தப்பட்ட பொழுது  வாகனச் சாரதி கூறுகிறார் நீங்கள் டேவிட் ஐயாவை மாறிக் கடத்தி விட்டீர்கள் என்று மற்றைய கடத்தல் காரர்களை பார்த்து கூற .ஆள்மாறி றிக் உணர்ந்த பின்னர் டேவிற் ஐயாவை கோயம்பேட்டில் தெருவோரத்தில் வீசிச்விட  டேவிட் ஐயா அவ்வழியால் வந்த சைக்கிளோட்டி ஒருவரால் மீண்டும் அண்ணா நகருக்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறார்

 இதேவேளை தீப்பெறி குழுவினர் பலரும் கந்தசாமியின் உளவு படைக்கு பயந்து   சந்ததியாரை வைவிட்டு தளம் சென்றுவிடுகின்றனர்.உண்மையில் டேவிட் ஐயா கடத்தப்பட்ட பின்  சந்ததியாரை பாதுகாக்க நடவேடிக்கைதீப்பொறியினர் எடுத்திருக்கவேண்டும.புத்திஜுவிகளால் நிரம்பி இருந்த தீப்பொறியினரின் தங்களது உயிர்களில் காட்டிய அக்கறையை சந்ததியாரில் காட்டவில்லை.ஆனால் இன்று சந்ததியாரை கந்தியவாதி எனப்புலம்பும் தீப்பொறி குழுவை சேர்தவர்கள் ஏன் அன்று சந்ததியாரை காப்பற்ற தவறிவிட்டனர்.

இவ்வாறு தீப்பொறியை நம்பி வந்த பலர் தளம் திரும்பமுடியாதவர்கள்  கந்தசாமி தலமையிலான புலனாய்வு குழுவினரால் நர வேட்டையாடப்பட்டதாக அறிய முடிகின்றது அவர்களையும் பாதுகாக்க தவறிவிட்டது தீப்பொறி அமைப்பு.

மேலும் அரசியலிலும் இராணுவத்திலும் மிளிந்த காந்தன் என்று அழைக்கப்பட்ட ரகுமான் ஜான் போன்றவர்கள் தீப்பொறி அமைப்பில் இருந்த பொழுதும்1989 ல் தளத்தில் வைத்து 40 உறுப்பின்களால் தலமை மாற்றம் செய்யப்பட்டது போல இந்தியாவில் வைத்து ஏன் தலமை மாற்றம் செய்ய முடியவில்லை. நான் எண்ணுகிறேன் தீப்பொறி கருத்தளவில் செயற்பட்டதே ஒழிய செயல் வடிவம் கொடுக்க தவறிவிட்டனர்.மேலும் அன்று ஒரு தலமை மாற்றம் இடம் பெற்றிருந்தால் இன்றைய அவப்பெயரை புளொட் சந்தித்திருக்காது.அதேவேளை புளொட் தமிழ் மக்களின் உரிமைக்கு உழைத்த வரலாற்றை பெற்றிருக்கலாம்.

மேலும் சில தீப்பொறி உறுப்பினர்களுடன் தளமத்தில் சந்ததியார் சென்று இயங்க நடவேடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாலும் புதியதோர் உலகம் என்ற புத்தகம் வெளியீடு என்பவதற்கால் ஆத்திரம் அடைந்த உமா சந்ததியாரை தீர்த்து கட்டுவதல் மேலும் தீவரமாகிறார் உமா

இதேவேளை சந்ததியார் சுழிபுரத்தை சேர்ந்தவரும் கோடம்பாக்கத்தில் வசித்து வந்தவருமான தேவி ஆண்டியப்பன் என்பவரது வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் இதேவேளை சுழிபுரத்தை  சேர்ந்த சபாநாதன் குமார் இவர் கந்தசாமியின் உளவு அமைப்பை சேந்தவர் .சபா சந்ததியார் செல்லும் இடங்களை அவதானிக்க தொடங்குகிறார்
சபாநாதன் குமாரின்  உளவுத்தகவலுக்கு அமைய சந்ததியார் அமைய சந்ததியார் 18/09/1985 அன்று புளொட் அமைப்பை சேர்ந்த தடியன் ரவி,வெங்கட் என்ற கண்ணதாசன், வள்ளுவன்  போன்றவர்களால் கடத்தப்பட்து கொடூரமான முறையில் வாமதேவாவால் கொலை செய்து உடலை எரிந்து விடுகிறார்கள். 

இதைவேளை சந்ததியாரை காணத சறோயினி தேவி ஆண்டியப்பன் வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி சந்ததியார் தங்களது வீட்டிற்கு வந்ததா என கேட்கிறார் சறோயினி மறுமுனையில் வரவில்லை என தகவல் கிடைக்கிறது சறோயினிக்கு. அத்தோடு நேரம் கடந்து கொண்டு சென்றதால் சறோயினி டேவிட் ஐயா மூலம் சென்னையில் பொலிசில் எட்டு புளொட் உறுப்பினர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது.விசாரணையின் பின் எட்டு புளொட் உறுப்பினர்களை விடுதலை செய்யப்பட்டனர்

இதேவேளை உமாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறார் சறோயினி அந்த வேளை உமாவின் அலுவலகத்தில் இருந்த இன்றைய பாரளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பில் தலைவருமான சித்தார்த்தன் மற்றும் ஆனந்தி ஆகியோர்  உமா டெல்லி சென்றதாக கூறுகிறார்கள்.

அப்பொழுது சென்னையில் சந்ததியார் கொலை பரபரப்பாகப் பேசப்பட்டது. டெல்லியிலிருந்து உளவுத்துறைகள் IB,Raw இது சம்பந்தமாக என்ன நடக்கிறது என டெல்லியில் இருந்தும் வெற்றிச்செல்வனை தொடர்பு கொண்டு கேட்க வெற்றி செல்வன்  உமா மகேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டுவருகிறார் வெற்றிச்செல்வன்

உடனடியாக டெல்லி சென்ற உமா  இந்தியா RAw மற்றும் IB அதிகாரிகளைச் சந்தித்ததோடு சந்ததியார்  இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவதாகவும் வங்கம் தந்தபாடம் மொழிபெயர்ப்பு புத்தகத்தை இயக்க முகாம்களில் விநியோகித்தது மாத்திரமின்றி இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டார் எனக்கூறியதோடு வேறு சில காரணங்களுக்காகவும் சந்ததியாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகளைசமாளித்திருக்கிறார் உமா  இருப்பினும்  அந்த அதிகாரிகள் உமா கூறியதை  ஏற்றுக்கொள்ளவில்லை அத்தோடு உங்கள் பிரச்சினைகளைத் உங்கள் நாட்டில் வைத்து  தீர்த்துக் கொள்ளுவதோடு இந்தியாவின் சட்டம் மற்றும் ஒழுங்கை குலைக்க கூடாது  என கடுமையாகவே  உமாவை எச்சரிக்கை செய்தார்கள் அந்த அதிகாரிகள்

இத்தோடு நின்றுவிடாது சந்ததியாரின் கொலையை மறைக்க இன்னொரு கீழ்தரமான காரியத்தை செய்தார் உமா. தனி மனித ஒழுக்கத்தில் சிறந்து விழங்கியவரும் போதைப்பொருளுக்கு எதிரான போரளி சந்ததியாரை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ராதா என்ற பெண்ணூடன் ஓடிவிட்டதாக பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பினார் உமா. இவ்விடயமானது பின்தள மாநாட்டில் உமாவிற்கு எதிராக  வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இதுவும்  ஒன்று.

மேலும் பின்தள மாநாட்டில்  சந்ததியார் கொலை  விடயத்தில் மற்றுமொரு குற்றச்சாட்டு  உமாவிற்கு எதிராக வைக்கப்பட்டது

அதாவது செயற்குழுவுக்கு தெரியாமல் சந்ததியாரை கொலை செய்ததோடு சந்ததியார் சீனாவின் இடதுசாரி கொள்கை கொண்டவர் சந்ததியார் என்றும் J R ஜெவர்த்தனவுடன் இந்திய அரசு ஏற்படுத்திய திம்பு பேச்சு வார்த்தைகளை குழப்ப சந்ததியார் முயற்ச்சித்தார்  என இந்தியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்  ரொமேஷ் பண்டாரிக்கு உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியமை.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உமாமகேஸ்வரனும் மற்றவர்களோ தகுந்த பதில் அளிக்கவில்லை. அவ்வேளை ஏற்கனவே பல புளொட் உறுப்பினர்கள் புளொட் அமைப்பில் இருந்து ஒதுங்கி இருந்தமையாலும் புளொட் அமைப்பானது இவ்விடயத்தில் மேலும் பலவீனப்படும் என்பதாலும் இயக்கம் மேலும் உடையக் கூடிய சந்தர்ப்பம் இருந்தாலும் உமா மகேஸ்வரனின் தலைமையின் கீழ் இயங்கிய புளொட் அமைப்பின்  தலைவர்களும் போராளிகளும் இவ்விடயத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை

மேலும் பின்தள மாநாட்டில் மாநாட்டில் வெற்றி செல்வனுடன் சில தோழர்கள் தனிப்பட்ட முறையில் பின்வரும் கருத்தை பரிமாறி இருக்கிறார்கள்

" சறோயினியின் குடும்ப உறுப்பினர்கள்  சந்ததியாருக்கு செய்த நம்பிக்கை துரோகத்தால் மறைமுக தலைமை போட்டியில் இருந்த சந்ததியாருக்கு எதிராக செயற்பட்ட  உமா  இலகுவாக சந்ததியாருக்கு எதிராக சறோயினியின் உறவினர்கள் நகையை எடுத்தமையை தனக்கு சாதகமாக உமா பயன்படுத்தி சந்ததியாருக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிந்தது. அதோபோல்  சந்ததியாரின் உழைப்பை யாரும் மறுக்க முடியாது ."

மேலும்  சந்ததியார் அன்றே தீர்கதரிசனமாக கூறிவிட்டார் தமிழ் மககளை அரசியல் ரீதியில் வலுவான நிலைக்கு இட்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார்.அத்தோடு அதற்காகவும் உழைத்தார்.ஆனால் அவருடைய கொள்கையை பின்பற்றி புளொட்டில் இருந்து பிரிந்த தீப்பொறிக் குழுவினர் புத்தகங்களிலும் தீப்பொறி பத்திரிகைகளிலும் நாங்கள் உத்வேகத்துடன் போரடுவோம் கூறியது போல மக்களை திரட்டி அவர்களுடன் இணைந்து  அரசியல் முன்னேட்ப்புகளை முன்னேடடுக்கவில்லை மாறக புளொடடை விமர்சிப்பதிலே அவர்களுடைய காலம் கழித்து விட்டது

EPRLF ல் இருந்து பிரிந்த டக்ளஸ் தேவனாந்தா பத்து போரளிகளுடன் தளம் வந்து விமர்சனங்களுக்கு அப்பால் இன்றுவரை தனது அரசியலை தனது தனி வழியில் முன்னேடுக்கிறார்.ஆனால் பல போரளிகளுடன் பிரிந்த தீப்பொறிக் குழுவினர் ஏன் இவ்வாறு சாதிக்கமுடியவில்லை? டக்கிளஸ் போல் தளத்தில் நிற்காது ஏன் ஓடி ஒளிந்தார்கள் இந்த தீப்பொறியினர் .? இன்று தமிழரகள் அரசியல் அனாதைகளாக இருப்பது போல இலங்கையிலும் இந்தியாவிலும் தம்மை நம்பி வந்த தோழர்களை கைவிட்டு விட்டு வசதி படைத்த தீப்பொறிகள் புலம்பெயர் நாடுகளில் குடியேறி விட்டார்கள்.சந்ததியாரின் கனவையும் மண்ணேடு மண்ணாக புதைத்து விட்டனர் தீப்பொறியினர்

#முற்றும்
logoblog

Thanks for reading சந்ததியரின் கொலையும் பின்னணியும் பகுதி 3

Previous
« Prev Post

No comments:

Post a Comment