#சந்ததியார் #கொலையும் #பின்னணியும
தர்மலிங்கம் செந்தூரன்
#தொடர்2
இறைகுமாரன் உமைகுமாரன் படுகொலைக்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என மாகவலி ராஜன் தனது முகநூலில் தெரிவித்திருந்தாளும் பலரும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக வில்லை. இதைவேளை மாகவலி ராஜன் மறுப்பறிக்கையை இன்னொரு கட்டுரையில் அலசி ஆராய்வோம்.
19..05.1982 அன்று சென்னை பாண்டி பஜாரில் உள்ள உணவகத்துக்கு உமாமகேஸ்வரனும், அவரது இயக்கத்தை சேர்ந்த கண்ணன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தனர்.
சாப்பிட்டு விட்டு வெளியே வந்த இருவரும் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை நெருங்கினர். புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அங்கு நிற்கின்றமையை கவனித்து விட்டார் உமாமகேஸ்வரன்.
பிரபாகரன் அவர்களுடன் அவரது இயக்கத்தை சேர்ந்த ராகவன் என்பவரும் நின்று இருந்தார்.ராகவன் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர். பின்னாளில் அந்த இயக்கத்தை விட்டு விலகி லண்டனில் வசித்து வருகிறார்
பாண்டி பஜாரில் பிரபாகரன் அவர்களை கண்டமையுடன் உஷார் அடைந்தார் உமா மகேஸ்வரன். சூடு நடத்து கின்றமைக்கு பிரபாகரன் அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்க கூடாது என தீர்மானித்துச் சொந்தத் துப்பாக்கியை உருவினார் உமா மகேஸ்வரன். கிட்டத்தட்ட அதே எண்ண ஓட்டத்துடன் அதே கணத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களும் துப்பாக்கியை உருவினார்.
கைத்துப்பாக்கியால் சுட்டார் பிரபாகரன் அவர்கள். ஆனால் உமா மகேஸ்வரன் காயம் எதுவும் இன்றி தப்பித்துக் கொண்டார். உமா மகேஸ்வரனுடன் வந்திருந்த கண்ணன் மீது துப்பாக்கி சூடு பட்டு இரத்தம் வழிந்தது.
சம்பவ இடத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விரைவில் தப்பிச் சென்று விட்டார். துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சி அடைந்து இருந்த மக்களின் கவனம் பிரபாகரன் அவர்கள் மீதும் ராகவன் மீதும் படிந்தது. மக்கள் இவர்களை பிடிக்க வர பிரபாகரன் அவர்களும், ராகவனும் பாண்டி பஜாரில் இருந்து வேகமாக மறையத் தொடங்கினார்கள்.
பொதுமக்கள் துரத்திச் செல்ல பாண்டிபஜார் வீதியில் ஓடிய பிரபாகரன் அவர்களை எதிரே வந்த ஒருவர் மடக்கிப் பிடித்தார். தமிழக காவல்துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அவர். பெயர் மாணிக்கம். மாம்பலம் பொலிஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர்.
சம்பவ நேரம் பர்மா பஜாரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த மாணிக்கம் பொதுமக்களின் துணையுடன் தலைவர் பிரபாகரனன் அவர்களையும் ராகவனையும் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தகண்ணனைமாம்பலம் பொலிஸ் கைது செய்தது.
இதைவேளை கண்ணன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் சிவனேஸ்வரன் சைதாப்பேட்டையில் கைது செய்யப்பட்டார்.உமாமகேஸ்வரன் தப்பி ஒடி கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நிற்கும் பொழுது தன்னை நோக்கி வந்த பொதுமகனை பொலிஸ் என எண்ணி சுட்டுவிடுகின்றார்.சுடு பட்டநபர் படுகாயமடைந்து விட உமாமகேஸ்வரன் கும்மிடிப்பூண்டி பொலிசாரல் கைது செய்யப்பட்டார்
இதேவேளை நீதிமன்றம் பிரபாகரன் மதுரையிலும் ராகவன் புதுக்கோட்டை உள்ள பொலிஸ் நிலையத்திலும். கண்ணன் ஈரோடு மாவட்டத்தில் பவானியில் உள்ள பொலிஸ் நிலையத்திலும் சிவனேஸ்வரன் திருச்சியிலும் பொலிஸ் நிலையத்திலும் கையெழுத்திடவேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்
இதே வேளை நீதிமன்றத்தால் பிணைநிபந்தனை தளர்த்ப்பட
பிரபாகரன் தப்பி செல்ல இருப்பது என்ற தகவலை அன்றைய மாநில அமைச்சர் காளி முத்து ஊடாக உமாவிற்கு தெரிவிக்கப்பட இவ்யோசனைக்கு குறித்த வழக்கை கையாண்ட N T வானமாமலை மற்றும் கலைஞர் கருணாநிதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிக்க திட்டத்தை Plote கைவிட பிரபாகரன் தப்பித்துக் ஈழம் திரும்புகிறார்
இதனால் பிணை இரத்து செய்யப்பட்டு உமாமகேஸ்வரன்,கண்ணன்மற்றும் சிவனேஸ்வரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர் .
மேலும் ஒரு முறை ஜெயிலில் இருந்த உற்ப்பினர்களை சந்ததியார் மாறன் மற்றும் வெற்றி செல்வன் ஆகியோர் பார்ப்பதற்கு செல்லும் பொழுதுஅங்கு சந்ததியாருக்கும் உமாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
நீங்கள் இறைகுமாரன் உமைகுமாரன் சுட்ட கட்டளை இட்டதனால் எமக்கு அரசியல் ரீதியாகவும்,வவுனியாவில் விமானப்படை வீரர்களை வவுனியாவில் காந்தியத்திற்கு முன்னால் வைத்து சுட்டதால் ராணுவ ரீதியாகவும் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டீர்கள் என்று சந்ததியாரை பார்த்து கூறுகிறார் உமா.இங்கு தான் உமா சந்ததியார் விரிசல் ஆரம்பிக்கின்றது.
இதே காலப்பகுதியில் சந்ததியார் புளொட்டின் ரகசிய அலுவலகத்துக்கு செல்கிறார் அங்கு.மாதவன்,மற்றும் வெற்றி செல்வனிடம் அவர்கள் செய்யும் வேலைகள் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்து சில ஆலோசனைகள் கூறினார்.
இதேவேளை மாறன் கந்தசாமி பெரிய செந்தில் போன்றவர்கள் வேறு ரகசிய வேலைகளை செய்வதால் அவர்களை வழி நடத்த முடியவில்லை என வெற்றி செல்வன் மற்றும் , மாதவனிடம் இவர்கள் செய்யும் வேலைகளைப் பற்றி தெரியுமா என்று கேட்கிறார் அவர்கள் தெரிந்தாலும் சொல்லுவதில்லை தெரியாது என்று கூறி விடுவார்கள் இந்த விடயம் கூட உமா சந்ததியார் முரண்பாட்டிற்கு காரணமாக இருந்தது
இதனால் வெற்றி செல்வனும் மாதவனுக்கும் புது அனுபவம் ஒன்றை கொடுத்தார் சந்தாதியார்
சாப்பாட்டுக்கு காசு மாதம் 300 ரூபாய் தான். ஒரு நாளைக்கு பத்து ரூபாய் அதற்கு மேற்குறித்த இருவரும் கணக்கு கொடுக்க வேண்டும் எபகாலை மாலை இரவு என முன்று வேளைக்கும் உணவு விலை விபரங்களுடன் முப்பது நாள் கணக்கு கொடுக்க வேண்டும் இருவரும் அந்த 300 ரூபாயில் மிச்சம் பிடித்து இருந்தால் அவர்களை பாராட்டுவதோடு அடுத்த மாத கடைசியில் மிச்சம் பிடித்த காசை குறைத்துவிடுவர். சில நேரங்களில் வெற்றி செல்வன் மற்றும் மாதவன் ஆகிய இருவரும் சமையல் செய்து சாப்பிடுவார்கள். பருப்பும் சோறும் தான் அவர்களின் சமையல் சிலவேளைகளில் சந்ததியார் வந்து சாப்பிட்டுவிட்டு இவர்களை பாராட்டி விட்டு செல்வார் .சந்ததியாருக்கு பருப்பு பிடிக்கும் என நினைக்கிறேன்.
சந்ததியார் உமாவும் முரண்பட்ட காரணங்களில் இதுவும் ஒன்று Charleyகந்தப்பா என்ற தமிழ் தெரியாத தமிழனை இயக்கத்தில் இணைத்து அவருக்கு சில முக்கிய பொறுப்புகளை கொடுத்தார் இது சந்ததியாருக்கு பிடிக்கவில்லை. உமா அத்துலக் முதலியுடன் இரகசிய தொடர்பை ஏற்படுத்துவதற்கு இந்த கந்தப்பா தான் காரணம் இவர் அத்துலத் முதலியுடன் நெருங்கிய உறவில் இருந்தவர் .இந்த விடயம் என்னால் வெற்றி செல்வன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது
மேலும் திவாகரன் இவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர் 1983 ஜுலைக் கலவரத்தின் பொழுது இலங்கை வானொலியில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது சென்னை வந்தார்
இவ்வேளையில் எம்எல்ஏ ஹாஸ்டலில் சுற்றித் திரிந்தார் பொழுது வெற்றி செல்வனும் மாதவனும் திவாகரன் பற்றி விசாரித்து புளொட் அமைம்பில் உள்வாங்க முற்பட்டவேளை சந்ததியார் புதியவர்களை உள்வாங்க வேண்டாம் கடுமையாகக் கூறினார்.பின்னாளில் இந்த திவாகரனே பல புளொட் உறுப்பினர்களுக்கு எதிராக பல போட்டு கொடுப்புகளை செய்த செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் உமா மகேஸ்வரன் திவாகரனை பிரச்சாரம் போன்ற வெளி வேலைகளுக்கு பாவிக்குமாறு வெற்றி செல்வன் மற்றும் மாதவன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார் பின்பு புளொட் அமைப்பு வானொலி ஆரம்பித்தபோது அதற்குப் பொறுப்பாக திவாகரனை நியமித்தார் உமா ஆனால் சந்ததியார் இதனை மிகக் கடுமையாக சந்ததியார் எதிர்தார் இதானல் உமா சந்ததியார் விரிசல் மேலும் அதிகரிக்க வாய்பாக அமைந்தது
கிளிநொச்சி வங்கி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை சந்தியாருக்கு மிக நெருங்கிய தோழியான சரோஜினி வீட்டில் மறைத்து வைத்ததாகவும், அதில் பெரும்பான்மை நகைகள் களவு போய் விட்டதாகவும் அந்த அந்த நகைகளை சரோஜினியின் அக்கா கணவரும் சகோதரர்களும் எடுத்தது தெரிந்தும் சரோஜினி கலவரத்தின் பின் இந்தியா சென்ற பின்பு அவரின் அக்கா கணவரை விசாரித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட அதேவேளை 84 ஆம் ஆண்டு சரோஜினியின் சகோதரர்களையும் பிடித்து வந்து சென்னையில் விசாரித்ததாகவும் சென்னையில் ஒருவருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது.இந்த விடயம் சந்ததியாருக்கு மனக்கசப்பு ஏற்படுத்தியது..இது உமா சந்ததியார் பிரிவில் முக்கியமான விடயம் ஆகும்
அண்ணா நகரில் வீடு எடுத்து சந்ததியாரும் சரோஜினியும் தங்கியிருந்தார்கள். சரோஜினி இயக்கத்தின் மேல் கடும் கோபத்தில் இருந்ததாகவும் உசுப்பேத்தி சந்ததியாரை இயக்கத்துக்கு எதிராக செயல்பட வைத்து இயக்கத்தை கைப்பற்ற யோசனையில் கூறியிருந்ததாகவும் இதில்தான் சந்ததியார் தடுமாறிவிட்டதாகவும் சந்தேகப்பட்டார் உமா
மேலும் சந்ததியார் சறோயினி இந்தியா வரும் வரை சந்ததியார் இயக்கத்தில் நல்ல முறையில் இருந்ததாகவும் சரோஜினியின் பேச்சைக் கேட்டு இயக்கத்தை உடைக்கப் முற்பட்டது தவறு எனவும் எண்ணியிருக்கிறார் உமா
.மேலும் சரோஜினியின் வீட்டுக்கு சாப்பிட வரும் டேவிட்ஐவையும் பலகதைகள் சொல்லி சந்ததியாருக்கு ஆதரவாக திருப்பி டேவிட் ஐயாவை இயக்கத்துக்கு எதிராக மாற்றிவிட்டதாக கருதினார் உமா.
மேற்குறித்த விடயம் தொடர்பாக சந்ததியார் கொலை செய்யப்பட்ட பின்னாளில் புளொடின் படைதுறை தலைவர் சோதிஸ்வரன் என்ற கண்ணணும் அரசியல் துறை பொறுப்பாளர் வாசுதேவாவும் வெற்றி செல்வனிடம் வெற்றி செல்வன் புளொட்டில் முக்கிய பொறுப்பில் இருந்த காரணத்தால் தெரிவித்தவையாகும்
இதேவேளை சந்ததியாரல் “வங்கம் தந்த பாடம்”என்றொரு புத்தகமும் வெளியிடப்பட்டது.இப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்கபட்டபுத்தகம். இந்திய இராணுவம் பங்களாதேஷில் நடந்துகொண்ட முறைகளைப் பற்றி அதில் விபரிக்கப்பட்டிருந்தது.பெண்களை பலாத்காரப்படுத்தியமை, பங்களாதேசில் இருந்து முற்போக்கு சக்திகளை கொன்று குவித்தமை போன்ற சம்பவங்களை அவற்றில’ முக்கியமாக குறிப்பிட்டிருந்தன.
இந்திய இராணுவம் தொடர்பாக கடும் விமர்சனத்தை முன்வைத்த ஒரேயொரு ஈழப்போராளி சந்ததியாரே .ஆனால் சந்ததியார் புத்தகத்தை வெளியிடும் பொழுது அறியவில்லை இப்புத்தகம் தன்னுடைய கொலையுடன் தொடர்புபடும் என்பதே
#தொடரும்
No comments:
Post a Comment