பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Wednesday, 5 January 2022

எனது இந்தியா அனுபவங்கள் 110

  வெற்றிசெல்வன்       Wednesday, 5 January 2022

பகுதி 110

உமாமகேஸ்வரன் அல்ஜீரிய நாட்டுஅரச ரகசிய பயணம் பற்றி தனது கைப்பட எழுதிய குறிப்புகள்



மறைந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் செயலதிபர் உமா மகேஸ்வரன் தனது அல்ஜீரிய நாட்டு பயணம் பற்றி எழுதிய குறிப்பு


அல்ஜீரியா சென்றது தொடர்பான அறிக்கை


அறிவன் 6 ஜூன்1984 மாலை 2 மணி அளவில், தோழர் மறுவான், சித்தார்த்தன் உடன் அல்ஜீரிய வானூர்தியில் டமஸ்கஸில் இருந்து ஒற்றுமைக்கும், உதவிக்கு மான பயணத்தை மேற்கொண்டோம்.

        அல்ஜீரியா வானூர்தி நிலையத்தில்  PLO உறுப்பினர்கள் ஆளும், அரச உறுப்பினர்கள் ஆளும் வரவேற்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சரின் கோடைகால ஓய்வு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வரும்வரை தங்குவதற்கு வசதி செய்து தரப்பட்டது.6/06/84 முதல் 12/06/84 வரை அரசு விருந்தினராக தங்கியிருந்தோம்.

ஏற்கனவே எம்முடனான பேச்சுவார்த்தைக்கு 16/05/84 இல் இருந்து மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்தது சரியான தகவல் நேரத்துக்கு கிடைக்காததாலும், பயணச் சீட்டில் தவறு ஏற்பட்டதாலும் 25/05/84இல் டமஸ்கஸ் போய் சேரும் வாய்ப்பு கிடைத்தது. எனவே வேண்டும் அல்ஜீரியா நாட்டுடன் தொடர்பு ஏற்படுத்தி 6/06/84இல் அங்கு போனோம். அக்காலகட்டத்தில் முஸ்லீம் மதத்தினரின் ரம்ஜான் பண்டிகை காலம். ஆகையினால் சனிக்கிழமை மாலை 2 மணியளவில் அரசுத் தரப்பின் படைத்துறை இரண்டாம் அதிகாரியாகிய கமோவையும், மூன்றாம் அதிகாரியாகிய இஸ்மாயில் ஐயும் சந்தித்தோம்.

முதலில் அவர்கள் எங்களை வரவேற்றும் எங்கள் வருகைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டும், எமது போராட்டத்தின் நிலைகளையும் நோக்கங்களையும் இலங்கை அரசின் அரசியல் நிலைப்பாடு பற்றியும் விபரம் அறிந்து கொள்ள விளக்கும்படி கேட்டுக் கொண்டனர். முதலில் எமது கழக நிலைப்பாட்டையும், இலங்கை அரசையும் அதன் அமெரிக்க சார்பு கொள்கையையும், எமக்கும்

PFLP உள்ள தொடர்புகளை பற்றியும் எமது தோழர்கள் மேலாதிக்கத்துக்கு எதிராகவும்  சியோனிச த்துக்கு எதிராகவும் பாலஸ்தீன மண்ணில் போராடிய உணர்வுகளையும், திறமைகளையும் பற்றி மேலோட்டமாக தோழர் மர்வான் PFLP விளக்கினார். அரேபிய மொழியில் கூறினார்.

அதைத் தொடர்ந்து நான் கழகத்தின் சார்பாக விபரமான முறையில் எமது சிக்கலை விளக்கினேன்.


  1.   சுதந்திரத்துக்கு முன் இலங்கையின் நிலையும், தமிழர்களின் நிலையும்

  2. சுதந்திரத்துக்குப் பின் எமது நிலை  படிப்படியாகஅடிப்படை உரிமைகள் பறிக்கப் பட்டு வந்தது தொடர்பான விளக்கம்

  3. உரிமைகளுக்கான எமது மக்கள் போராட்டம் போராட்டங்களின் தன்மையாலும, போராட்டங்களின் நசுக்களும், இலங்கை அரசின்  நசுக்களின்உச்சகட்டம்

  4. இலங்கையில் அமெரிக்க சார்பு கொள்கை, கூட்டுச் சேரா நாடுகளுக்கு எதிரான அமைப்பை உருவாக்குவதே நோக்கம், முதலாளித்துவ நாடுகளின் முதலீடுகளின் பாதிப்பு.

 திரிகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவம் அதில் அமெரிக்காவின் இருக்கும் ஆர்வம்.

  1. அமெரிக்காவின் ராணுவ ரீதியான உதவி. சியோனிஸ்டுகள் கொமாண்டோ களுக்கான பயிற்சி அமெரிக்க தூதுவர் ஒத்துழைப்பு

  2. எமது போராட்டம் தேசிய இனப் போராட்டமாக இருந்ததின் பின்பு மாறுதல் அடைந்து ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதும் உலகநாடுகளின் முற்போக்கு சக்திகளின் ஆதரவுடன் நடத்த வேண்டிய போராட்டமாக உருவெடுத்து உள்ள நிலையும் பேசப்பட்டது.

       

       அதன் பின் எமது தேவைகளை பற்றி விபரமாக கட்டுவதற்கு

  1. எமது கழகத்தையும் அது முன்னெடுக்கும் போராட்டத்தையும் அங்கீகரித்தல்

  2. நட்பை பலப்படுத்தலும், உலக முற்போக்கு இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஆதரவு கொடுக்கவும் ஓர் அலுவலகம் நடத்துவதற்கு இடம் தரவேண்டும்.

  3. டெல்லியிலும் , லண்டனிலும் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருக்க தூதரகத்துடன்  தொடர்பு ஏற்படுத்தித் தர வேண்டும்


இவைகளின் பின் 4.30 மாலை அளவில் பேச்சுவார்த்தை முடிவடைந்தது பங்குபற்றிய  தோழர்கள் காமக் , இசுமாயில், மறுவான், கமல், முகுந்தன், யலாட் ஆகியோர்.


தொடர்ந்து பேச்சு 13/6/84 மதியம் 12 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் தோழர் கமாக், கமல் மொழிபெயர்ப்பாளர், முகுந்தன், யளாட் ஆகியோர். இப்பேச்சுவார்த்தையில் 12/06/84இல் பேசப் பெற்ற செய்திகள் அரசுடனும் கட்சியுடனும் பேசப்பட்டது எனவும் அதனடிப்படையில், இரண்டாம் (2) மூன்றாம் (3) வேண்டுகோளுக்கு ஒப்புதல் தரப்பட்டது என்றும், முதலாவது வேண்டுதல் கட்சிக்கு நேரடியாக எழுதும் படியும், கட்சி முடிவெடுத்து அறிவிக்கும் என்றும் கூறப் பெற்றது.

அத்துடன் கூடுதலான விபரங்கள் கேக்க பெற்று விபரம் கொடுக்கப்பட்டது. அமெரிக்காவின் தலையீடு பற்றிய விபரங்கள் திரட்டி தரும்படி கேட்டுக் கொண்டனர்.


 PFLP உடன் தொடர்பு வைத்திருப்பதற்கும் அவர்களுடன் இணைந்து செயல்படுவதற்கும் நன்றி தெரிவித்து இதனடிப்படையில் எமது நாட்டிலும் நம்பிக்கையாக இணக்கமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பின்பு கட்சிக்கு எமது பதிலையும் தேவைகளையும் தெரிவிக்கும்படி வேறு உதவிகள் என்ன என்ன என்பதையும், ஃபிரான்ஸில் தொடர்பு ஏற்படுத்த (கழகத்துடன்) படிக்கும் ஃப்ரெஞ்ச் அல்லது அரேபிய மொழி தெரிந்த ஒருவரை அலுவலகத்தில் (அல்ஜீரிய நபர்) வைக்கும்படியும், அதனால் சிரமங்கள் தவிர்க்க முடியும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

கடைசியில் எமது போராட்டத்தின் உறுதியையும், அல்ஜீரிய மக்கள்லுடன் சேர்ந்து நாமும் ஏகாதிபத்தியத்தை என்றும் எதிர்ப்போம் என்றும், எம்மை அரசு சார்பில் விருந்தாளியாக ஏற்றுக் கொண்டதற்கும் எமது வேண்டுதலுக்கு ஊக்கமளித்து முன் வந்ததற்கும் கழக சார்பிலும், தமிழ் மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து நிறைவு செய்தோம். கலந்துரையாடல் ரெண்டு மணி பிற்பகல் முடிவடைந்தது.

14/06/84  மதியம் 2 மணி அளவில் எம்மிடம் இருந்து விடை பெறவும் கடல் அரசின் கடிதத்தை பெறவும் தோழர் கமோக் மொழிபெயர்ப்பாளர் கமலுடன் வந்து எம்மை சிறப்பித்தார்.

இன்று கழகத்தின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. பொதுவான செய்திகள் பற்றி கலந்துரையாடினோம் பின் கலந்துரையாடல் 2.45 மணியளவில் முடிவடைந்தது.

அன்று மாலை தோழர் இஸ்மாயில் அவர்கள் தமது பயண ஒழுங்குகளை பற்றி விசாரித்து பயணங்கள் செய்து தந்தார்.

இரவு PFLP தோழர்களை பார்த்து கலந்துரையாடி விடைபெற்றோம்.


பழைய குறிப்புகள் தொடரும்.



logoblog

Thanks for reading எனது இந்தியா அனுபவங்கள் 110

Previous
« Prev Post

No comments:

Post a Comment