பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 6 January 2022

டெல்லியில் நடந்த சந்திப்புகள் சம்பந்தமான ஆதாரப்பூர்வ சில ஆவணங்கள்

  வெற்றிசெல்வன்       Thursday, 6 January 2022
பகுதி 111
டெல்லி நினைவுக் குறிப்புகள்

டில்லியில் கழக. சந்திப்புகள் சம்பந்தமான பதிவு குறிப்புகள்

பெயர் பொன்னுசாமி (பொன்னுசாமி)
தொழில்.   1st Secretary
 விலாசம்.   மொறிசியஸ் எம்பஸ்ஸி
காலம். 14/ 11/. 84 காலை 11.00
இடம்.   மொரிஷியஸ் எம்பஸ்ஸி
பங்கு பெற்றவர்கள். ராஜா நித்தியன், வெற்றிச்செல்வன்
விடயம்
இன்றைய நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை குறித்து விமர்சிக்கப்பட்டது இந்திய உப கண்டம் அதாவது தென்னாசிய அரசியல் நிலைமையில் ஏற்படுகின்ற பதட்ட நிலைமைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் இவ்வாறு இலங்கை போன்ற நாடுகளை கைக்கூலியாக பாவிக்கிறது என்பது பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டது.
மொரிசியஸ் அரசின் நிலைப்பாடு தெளிவானதாகவும், தாம் எமது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆயினும் தமது சிறிய நாட்டினால் பெரிய அளவில் உதவ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசும் தன்னைப் பலப்படுத்திக் கொள்கிறது. அது வேதனைக்குரியது. எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இலங்கை அரசு, இந்திய அரசியல் நிலவரம் குறித்தும், பஞ்சாப் பிரச்சினை குறித்தும் இலங்கை தமிழர்களின் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சீக்கியர்களின் வன்முறை செயற்பாடுகளுடன் ஒப்பிட்டு காட்டுவது அரசியலில் அநாகரிகமான செயல் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இவ் அறிக்கை தொடர்பாக ராஜா நித்தியம்.

2.

பெயர்.    சத்திய பிரதாப் போல் sathiyaprathab paul
தொழில் secretary for srilankan affairs
விலாசம் ministry of of external affairs
காலம். 12 /11 /84.   காலை 11.30
பங்கு பற்றியவர்கள். ராஜா நித்யன், வெற்றிச்செல்வன்
விடயம்
இன்றைய நிலைமை குறித்து பொதுவாக கருத்து தெரிவிக்கப்பட்டது. குழுக்களின் சமாதான முயற்சி பற்றி கேட்டபொழுது கழக நிலைப்பாடு தெளிவாக பட்டது. சமாதான பேச்சு வார்த்தைகளை நாம் வரவேற்கிறோம் ஆயினும் குழுக்களால் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ள முடியாது என விளக்கப் பட்டது.
கூட்டணி யினருக்கு பக்கபலமாக நாம் நின்றால் என்ன என கேட்ட பொழுதுஇயக்கங்களின் நிலை பற்றிய ஒற்றுமை பற்றி கருத்து தெரிவிக்கப்பட்டது. அதில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதிக கவனம் செலுத்துவதே நாம் வரவேற்கிறோம் எனவும் மாறாக சந்திரகாசன் போன்றவர்கள் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் உன் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா தற்போதைய நிலையில் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைக்கப் போவதில்லை என்றும், தமிழ் ஈழத்தை தவிர வேறு தீர்வுகள் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று கருத்து தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக தோழர் சித்தார்த்தரின் விசா சம்பந்தமாக உதவி கோரப்பட்டது.

பதிவு ராஜா நித்தியன்.

3
Zimbabwe
பெயர். Neibiot. Mukono
நிலை first secretary
விலாசம். Taj palace hotel , room number 172, sardar Patel Marg New Delhi.
இடம் first secretary room Taj palace hotel
பங்குபற்றியவர்கள் வெற்றிச்செல்வன். சித்தார்த்தன்

இளைஞர். மிகவும் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் எமது பிரச்சினை பற்றி கேட்டார். தாங்களும் அடக்குமுறைக்கு எதிராக அண்மையில் போரிட்டபடியால், எனக்கு எமது போராட்டம், உணர்ச்சிகளை புரிந்து கொள்ளக்கூடியதாக உள்ளதாக கூறினார். உமது தோழர் ஒருவர் சிம்பாவே போதை பற்றி கேட்டோம். தான் தனது ambassordar  கதைத்து விட்டு, தனது நாட்டுக்கு விரிவாக ரிப்போர்ட் அனுப்புவதாக கூறினார். எம்மை அடிக்கடி வந்து தன்னை சந்திக்க கூறினார். எமது நட்புறவை விரும்புவதாக கூறினார். Note சீனாவுடன் மிக நெருக்கமான நட்புறவு Zimbabwe கொண்டுள்ளதாம்.

South Yeman 

பெயர். Awad M.Obad
தொழில் counselor
விலாசம்.yeman peoples democratic republic
காலம் 15 /11 /84   11 a.m
இடம் yeman. எம்பசி
பங்கு பெற்றவர்கள் ராஜா நித்தியன், வெற்றிச்செல்வன்
விடயம் .
இன்றைய நிலைமை குறித்தும் இலங்கை அரசின் கொடுமைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. தூதுவர் சந்திக்க விரும்பினார் எனவும், அவர் இல்லாத நிலையில் தாம் அவருக்காக சந்திப்பதாகவும், இச்சந்திப்பு நடத்தப்பட்டது என கூறினார்.
இயக்கங்களுக்கு இடையேயான ஒற்றுமை பற்றி கேட்ட பொழுது கழகத்தின் நிலைப்பாடு பற்றியும், கலகத்தின் முயற்சிகளும் முன்மொழியப்பட்டது. சிங்கள மக்களுக்கான விடுதலை குறித்தும் தெற்கு சிங்கள மக்கள் எமது போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் என எமது வேண்டுகோள்களையும் முன்வைத்து கருத்துக்களை கூறினோம். செயலதிபர் உமா நமது நாட்டுக்கு விஜயம் செய்வதை தாம் விரும்புவதாகவும் அவர் அப்படி விஜயம் செய்யும் பொழுது அங்கே தலைவர்களை சந்திக்க கூடிய காலங்களை அறிந்து, பிரயாணம் பண்ணக்கூடிய காலங்களை இரண்டு வாரத்துக்கு முன் அறியத் தருமாறு கூறினார்.
தமது விடுதலை போராட்டத்திலும், இவ்வாறு பல அமைப்புக்கள் இருந்தன என்றும் கருத்தை முன்வைத்தார். தோழர் லாகிரி அவர்களும் நாம் கூறுவது போலவே PLOT தான் சிறந்தது எனவும் கருத்து தெரிவித்ததாகவும் தாமும் அதையே அறிந்து உள்ளதாகவும் கூறப்பட்டது.
எனது விடுதலைக்கான பூரண ஒத்துழைப்பு  என்றும் இருக்கும் எனவும் கூறப்பட்டது.
கருத்துக்களை பதிவு செய்தவர் ராஜா நித்தியன்

பயஸ் மாஸ்டர் (சுமதி) டெல்லி வருகை சந்திப்புகள் பற்றிய குறிப்பு

2) தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இணைந்து போராடியவர். திருகோணமலையில் இருபெரும் போராட்ட வீரர்களை உருவாக்கியவர் புளொட் சேர்ந்த பார்த்தன் என்ற ஜெயச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு மிக நெருங்கிய நண்பனாக விளங்கிய சார்லஸ் ஆண்டனி. இவரின் பெயர் பயஸ் மாஸ்டர். சந்ததியார் இன் நண்பர். கழகப் பெயராக சுமதி என்று அழைக்கப்பட்டவர். டெல்லி வந்து நடந்த சந்திப்புகள் பற்றி எழுதிய குறிப்பு.

புதுடெல்லியில் 30/03/84  தொடக்கம் 11/04/84 வரை நடைபெற்ற சந்திப்புகள் பற்றிய அறிக்கை.

 திருமதி சங்கர் (மீரா சங்கர் இந்திய வெளியுறவுத்துறை) 30/03/84
     என்னுடன் நண்பர் வெற்றியும் சமூகமளித்திருந்தார். தொடக்கத்தில் இந்தியா டுடேயில் வெளியிடப்பட்ட கட்டுரை குறித்து, அரசின் அபிப்பிராயத்தை திருமதி சங்கர் தெரிவித்தார் குறிப்பாக பத்திரிகை நிருபர்களுக்கு அளிக்கப்பட்டபேட்டிகளினால் தகவல்கள் வெளியானவை குறித்தும் இந்தியாவை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கியது குறித்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்ட பேட்டி களிள் நாம் (PLOT) இந்தியாவை குறிக்கவில்லை நான் கருத்து தெரிவித்தேன் பேச்சுவார்த்தைகளை பொறுத்தமட்டில் நிலைமை குறித்து நான் வினவிய பொழுது ஒன்றும் திட்டவட்டமாக கூற முடியாது என தெரிவித்தார் நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார் அத்துடன் ஒரு திட்டத்தில் கிழ் நாம் எல்லோரும் செயல்பட வேண்டும் என்றும் அவசரப்படக் கூடாது என்றும் கூறினார் ராணுவ நிலைமை, அரசுக்கு சாதகமாக இருப்பதால் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவது சந்தேகம் என்று கூறினேன். ராணுவ நிலைமையை மாற்றி அமைப்பதன் மூலமே பேச்சுவார்த்தை என்னால் யோஜனா உண்டு என நான் கருத்து தெரிவித்தேன்.
(மீரா சங்கர் பல வருடங்களின் பின் அமெரிக்காவின் இந்திய தூதுவராக பணியாற்றியவர்)

.2). திரு சின்னசாமி அதிமுக பாராளுமன்ற உறுப்பினர
பொதுவான தமிழர் பிரச்சினை சரித்திர கண்ணோட்டம் குறித்தும் இன்றைய சூழ்நிலை குறித்தும் பேசினோம். கூடுதலாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினேன். JNU வில் உள்ள தமிழ் மாணவர்களை சந்தித்து ஒழுங்கு செய்வதாக கூறினார்.

3) South Yemen embassy
தெற்கு யேமன் சோசலிஸ்ட் கட்சிக்கான கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கான பதிலை அனுப்பி வைப்பதாக கூறினார்.

4) CPI
 தொடர்புகள்குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன.
அதற்கான அறிக்கை மத்திய குழுவுக்கு தரப்பட்டது.

5) world peace council
இங்கு முகுந்தனும் நானும் சமூகமளித்து இருந்தோம். இதுதொடர்பான அறிக்கையும் மத்திய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
6) திரு ராமதாஸ் IB
இந்தியா டுடே ரிப்போர்ட் பற்றியம் பேச்சுவார்த்தை குறித்தும் பேசினோம்.

தொடரும்.
logoblog

Thanks for reading டெல்லியில் நடந்த சந்திப்புகள் சம்பந்தமான ஆதாரப்பூர்வ சில ஆவணங்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment