பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Thursday, 20 January 2022

பகுதி 115

  வெற்றிசெல்வன்       Thursday, 20 January 2022
பகுதி 115

புதுடெல்லியில் என்னிடம் இருந்த சில நினைவுக் குறிப்புகள்
1983 ஆண்டு கடைசியிலிருந்து பாலஸ்தீன விடுதலை இயக்கமான PFLP இடம் பயிற்சிக்கு போகும் கழகத் தோழர்களிடம், எப்படி போகவேண்டும் என்று யாரை சந்திக்க வேண்டும் என்று போகும் தோழர்களுக்கு வழிகாட்டியாக தன் கைப்பட, மறைந்த செயலதிபர் உமா மகேஸ்வரன் எழுதிய குறிப்புகள், சிலபல எழுத்துக்கள் அழிந்து தெரிய இல்லையாயினும், இருப்பவற்றை அப்படியே போடுகிறேன்.

போக வேண்டிய இடத்தை பற்றி விவரிக்கவும்.
Damascus ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து bus  அல்லது taxi இல் சென்ட்ரல் டமஸ்கஸ் இல் உள்ள KINXDA  hotel அடிக்கி போகவும். அந்த KINXDA  hotel லுக்கு  பக்கத்தில் ஒரு சிறிய hotel உள்ளது. அதன் வாடகை மூன்று பேர் தங்கக்கூடிய அறைக்கு  உருபா30 சிரியன் காசு. வேறு  இருந்தாலும்30 முதல் 45 குள் அறைஎடுக்கலாம்.  அதில் தங்கியிருந்து கொண்டு கீழ் உள்ளவர்களுக்கு போன் பண்ணி உமா அனுப்பியுள்ளார் கூறவும்.
PFLP ஆபீஸில் உள்ள. Jihad phone no 331664  அல்லது மற்றவர் பெயர் Lamis phone no. 379435

Maruvan (comrade) phone no. 815486. or 785462

Lamis. (lady)editor PFLP bulletin  815486  ,885462

உமா from srilanka or Mohamed அனுப்பியுள்ளார் என கூறினால் அவர்கள் வந்து கூட்டிச் செல்வார்கள் 

இவர்கள் யாரும் சந்திக்க முடியாத நிலையில் londan இல் N.S krishnan  உடன் தொடர்பு கொள்ளவும்.
Phone no. 01. 9426774. Surray UK

டமாஸ்கஸ் ஏர்போர்ட்டில் இறங்கி  transit வழியாகப் போகாமல் டமஸ்கஸில் தங்கும் (இமிக்ரேஷன்) வழியாக சென்று அங்குள்ள ஒரு படிவம் (foam) ஐ  நிரப்பி  அதனுள் 5 US $ டாலர் வைத்துகொடுத்தால்  விசா அடித்துகொடுப்பார்கள். பின் வெளியே சென்று சென்ட்ரல் டமஸ்கஸ் போக taxi பிடிக்கவும். நாலு பேர் போகலாம். இரண்டு taxi பிடிக்கவும்.
ஏர்போர்ட்டில் இருந்தும் மேட் கூறியவர்களுக்கு போன் பண்ணலாம். அல்லது ஓட்டலில் தங்கியிருந்து போன் பண்ணலாம். அவர்கள் வந்து கூட்டிச் சென்று பயிற்சி முகாமில் விடுவார்கள்.
யாராவது ஏதாவது கேட்டால் டமஸ்கஸில் PFLP தலைவர் டாக்டர் ஜார்ஜ் ஹப்பாஸ் அவர்களின் அழைப்பின் பேரில் வந்து போவதாக கூறவும். மாணவர்கள் என்றும் நிலைமையை படிக்க வந்ததாக கூறவும்.
போகும்போது அஞ்சு நாட்காட்டி 3 PLOT bullatin கொண்டு போய் அலுவலகத்தில் jehad அல்லது lamis இடம் கொடுக்கவும்.
இத்துடன் 350 US$ ,225 சிரியன் பவுன் உள்ளது.இவற்றை ஆளுக்கு டாலர்களும், prisin guard(எமது தோழர் மட்டக்களப்பு சிறை உடைப்பில் உதவி செய்த ஜெயில்0கார்டு) இடம் மீதிப் பணத்தையும் கொடுத்து எல்லாவற்றுக்கும் ஜெயில் கார்ட் கணக்கு வைக்கும்படி கூறவும். மேற்கு ஜெர்மனி ஆளிடம் நாட்கள் செல்ல எல்லாப் பொறுப்புக்களையும் கொடுக்கவும்.
அங்கு சென்றதும் கந்தசாமியும் மாணிக்கமும் பொறுப்பாக இருப்பார்கள்.

நினைவுப் பதிவுகள் தொடரலாம்.
logoblog

Thanks for reading பகுதி 115

Previous
« Prev Post

No comments:

Post a Comment