பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 3 February 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Tuesday, 3 February 2026
இலங்கை தீவு சுதந்திரம் அடைந்தபோது, பிரிட்டிஷ் அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களிடமே உரிமைகளை கொடுத்து சென்றது. அப்போது இலங்கையில் சிங்களர்களை விட மிகவும் அதிகம் படித்த தமிழ் தலைவர்கள் யாரும் தமிழர்கள் அடிமைப்பட போவதை பற்றி யோசிக்கவுமில்லை கவலைப்படவும் இல்லை. சுதந்திர இலங்கையில் எப்படி தங்கள் பதவிகளை பெறுவது என்பது பற்றிய கவனமாக இருந்தார்கள்.
அதன் பின் ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரையும் தமிழ் அரசியல் தலைவர்கள், தமிழர் உரிமை பெறுவதாக ஆயுதமேந்திய இயக்கத் தலைவர்கள் எல்லாம் சொந்தத் தமிழர்களையே அடிமைப்படுத்தி சொந்த தமிழின இளைஞர்களே அழித்து தங்கள் தங்கள் பதவியையும் பணத்தையும் பெற முயற்சி செய்தார்கள். சொந்த தமிழ் இனத்தை அழிப்பதற்காகவே காலத்துக்கு காலம் எல்லா இயக்கங்களும் சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து ஏங்கினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் முதல் ஐக்கிய நாடுகள் சபை வரை ஆர்ப்பாட்டங்களும் பிரச்சாரங்களும் இலங்கை தமிழர்களால் செய்யப்படுகின்றன. இந்த தமிழர் அடிமைப்பட்டு போக பிரிட்டிஷ் அரசாங்கம் தான் காரணம் என்று ஏன் இதுவரை யாரும் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக போராடவில்லை..
பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுத்து இருக்கலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் இலங்கைத் தமிழர்கள் இருந்து தாங்கள் பிடித்து வைத்திருந்த பல உலக நாடுகளுக்கு செய்த துரோகங்கள் அம்பலப்படுத்தி இருக்கலாம்.
எமது தமிழர் பிரச்சினைக்காக கடந்த காலத்தில் யாராவது பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக போராடி இருக்கிறார்களா வழக்கு பதிவு செய்திருக்கிறார்களா என்பதை உலக அறிவில் சிறந்த எமது தமிழர்கள் அறியத் தருவார்களா.
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment