இவர்களை என்னவென்று கூறுவது.
ஒரே நிலப்பரப்பில் கீழ் இருக்கும் இந்திய உப கண்டத்தில் சில பல நூற்றாண்டுகளாக பல்வேறு மொழி பேசும் மக்கள் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப வேற்று மொழி பேசும் மக்கள் இருக்கும் இடங்களுக்கு குடி பெயர்வது சர்வ சாதாரணம்மாக இருந்தது. அப்படியே தமிழ்நாட்டில் இருந்தும் மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மக்கள் குடி பெயர்ந்து பம்பாயில் குடியேறினார்கள்.
அதுபோல் இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் முன் சென்னை ராஜதானியில் ஆந்திரா கர்நாடகா கேரளா தமிழ்நாடு ஒன்றாக இருந்த காலத்தில் மக்கள் பல ஊர்களில் குடி பெயர்ந்து வாழ்ந்தார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பும் தமிழர்கள் உட்பட வேறு மொழி பேசுபவர்களும் தங்கள் தங்கள் வசதிக்கேற்ப பிற மாநிலங்களில் வசிக்கத் தொடங்கினார்கள்.
இப்பொழுது மட்டும் தமிழ்நாட்டில் காலம் காலமாக தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு மக்களை குறிவைத்து வந்தேறு குடிகள் வடுகர்கள் என்று பலவித பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதே பிரச்சாரங்கள் வேறு மாநிலங்களில் பலகாலமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கே எதிராக அந்தந்த மாநிலங்களில் பிரச்சாரங்கள் போராட்டங்கள் தொடங்கினால் விளைவுகள் என்னவாகும்.
இதைவிட சிரிப்புக்கிடமானது. தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் சம்பந்தமில்லாமல் இலங்கை தமிழ் மக்கள் கூட தமிழ்நாட்டில் பரம்பரையாக வசிக்கும் பிறமொழி மக்களை வந்தேரு குடிகள் வடுகர்கள் என நா கூச்சம் இல்லாமல் முகநூலில் பதிவு செய்கிறார்கள். அதுவும் பதிவு செய்பவர்களை பார்த்தால் சொந்தத் தாய் நாட்டை விட்டு, பெரும் பணக்கார வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய இலங்கை தமிழர்கள் தான். இவர்களும் அந்த வெளிநாடுகளுக்கு வந்தேறு குடிகள் தானே.
அதைவிட வடகிழக்கில் இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் சிங்கள பகுதிகளில் பல ஆண்டுகளாக குடி பெயர்ந்துவாழ்ந்து வருகிறார்கள். அதுவும் யுத்த காலத்தில் பெருமளவு தமிழர்கள் சிங்கள பகுதிகளில் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கருதி குடி பெயர்ந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்களும் வந்தேறி குடிகள் தானே.
இவற்றையெல்லாம் மறந்து வெளிநாடுகளில் வந்தேறி குடிகளாக உள்ள தமிழர்கள் தங்கள் நிலை மறந்து, தமிழ்நாட்டில் தான் வாழ அரசியல் செய்யும் நேரத்துக்கு ஒரு பேச்சு பேசும் நாம் தமிழர் சீமானை பின்பற்றி தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி மக்களை பற்றி வந்தேறு குடிகள் என்று எழுதுவது மிகவும் தவறான செயலாகும்.
இப்பொழுது அமெரிக்காவில் சட்டவிரோத வந்தேறி குடிகளை கைவிலங்கு போட்டு நாடு கடத்துவது போல், அதைப் பின்பற்றி மற்ற நாடுகளும் தங்கள் நாட்டில் வசிக்கும் வந்தேறி குடிகளே நாடு கடத்தினால், அங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன.
தமிழ்நாட்டில் அகதியாக வசிக்கும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களின் நலன் கருதி, வெளிநாட்டில் வந்தேறு குடிகளாகஉள்ள இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டு தலைவர்களையும் தமிழ்நாட்டு அரசிலையைப் பற்றியும் தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது.
தமிழ்நாட்டு அரசியலையும் தலைவர்கள் பற்றிய குறை நிறைகளையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
No comments:
Post a Comment