#சின்னமென்டிஸ் #கொலை
அரியரட்ணம் விஜயபாலன் என்னும் இயற்பெயர் கொண்ட சின்னமென்டிஸ் அழகிய விபசாய கிராமமான உடுவில் மல்வம் என்னும் இடத்தில் பிறந்தார். தனது ஆரம்ப கல்வியை உடுவில் முருக மூர்த்தி வித்திசாலையிலும் உயர் கல்வியை மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் கற்றவர்
தந்தை ஒரு கட்டட ஒப்பந்தகாரர் அழகிய குடும்பம் என்பன இருந்தும் விஐயபாலனை ஈழக் கனவு வாட்ட தன்னை plote அமைப்பில் இணைத்து கொண்டார் சின்ன மென்டிஸ் தன்னுடைய காலத்தில் உடுவில் கிராமத்தில் ஏசியன் விளையாட்டு கழகம் ஏசியன் வாசிக சாலை என்பவற்றை அமைத்து இளைஞர்களையும் நல்வழிப்படுத்தியவர்
Plote ல் இணைந்து பயிற்சி முடித்த பின் யாழ் மாவட்ட தளப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் சின்ன மெண்டிஸ்
சின்னமெண்டிசின் முகாம்கள் உடுவில் முருக மூர்த்தி வித்தியசாலைக்கு பக்கத்திலும், சங்குவேலியிலும் அமைந்திருந்து. சின்னமெண்டிஸ யாழ்பாணத்தில் சிறந்த போரளியாக செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அது
இவேவேளை plote அமைப்புக்கு சொந்தமான ஒலிப்பதிவு நிலையம் ஒன்று மருதனார் மடத்தில் இயங்கிவந்தது இங்கு புலிகள் அமைப்பு சேர்ந்த கிட்டு வந்த plote உறுப்பினர்களுடன் உரையாடுவது வழக்கம்
இதனால் கிட்டுவிற்கு நன்கு பழக்கமானவர் மென்டிஸ்.
மென்டிஸ் மதிய உணவிற்கு உடுவிலில் உள்ள தனது வீட்டிற்கும், மணித் என்பவரது வீட்டிற்கும் வருவது வழக்கம்
ஒருநாள் மணித் வீட்டில் உணவு அருந்திக்கொண்டிருந்த வேளை புலிகள் அமைப்பை சேர்ந்த இருவர் தாங்கள் இருவரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் தங்களை plote அமைப்பை சேர்தவர்கள் எனக்கூறுகிறார்கள் எனவே நீங்கள் வந்து உறுதிப்படுத்த வேண்டும் என கிட்டண்ணா கூறுகின்றார் எனவை நீங்கள் வாருங்கள் என்று வந்தவர்கள் கூறினார்கள்
வந்தவர்களுடன் சென்ற சின்ன மென்டிஸ் யாழ்ப்பாணத்தில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டார் அங்கு மெனடிஸ்ன் நகங்கள் பிடுங்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் இதே வேளை மென்டிசின் அக்கா பார்க்க சென்றபொழுது ஒற்றை கதவினுடாக காட்டப்பட்டார்
1987ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு முதல் நாள் சின்ன மென்டிஸ் சித்திரை வதை தாங்காது இறந்துவிட்டார். இறந்த பின்னர் அவருடைய மோதிரம் ஒன்றை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தது புலிகள் அமைப்பு
மென்டிஸ் இறந்த அடுத்த நாள் உடுவில் மல்வம் பகுதியில் அந்த வீரன் இறந்த சோகத்தில் தைத்திருநாள் ஒருவரும் கொண்டாடவில்லை.
மென்டிஸ் இறந்த பின்னாளில் எங்கள் ஊரில் இருந்த பல இளைஞர்கள் புலம் பெயர்ந்து வேறு நாடுகளுக்கு செல்லத்தொடங்கிவிட்டார்கள். அநத வீரன் நேசித்த ஏசியன் விளையாட்டு கழகமும் இன்றில்லை அந்த வீரனாலும் ஊரின் இளைஞர்களாலும் ஆரம்பிக்கப்பட்ட ஏசியன் வாசிகசாலை இன்று கறையான் புற்று எடுத்து காணப்படுகிறது.புத்துயிர் கொடுக்க மென்டிஸ் வருவான் என காத்து கிடக்கிறது போலும்
No comments:
Post a Comment