பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 2 October 2026

பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Friday, 2 October 2026
இப்பொழுது 1000 வருடத்துக்கு முந்திய சோழ சாம்ராஜ்ய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும்பொழுது,, ஈழத்தில் நடந்த தமிழ் விடுதலை போராட்டத்தைப் பற்றி சில தம்பிமார் ஆராய்ந்து எழுத விரும்புகிறார்கள். அந்தத் தம்பி மாரில் சிலர் என்னை தொடர்பு கொண்டு, சிறு கலந்துரையாடல் செய்துவிட்டு, சில பதில் சொல்ல முடியாத நிலையில் கேள்வி கேட்டு விட்டார் கள்.

அந்தக் கேள்விகளுக்கு இப்போது அந்தந்த இயக்கத்தில் இருக்கும் அங்கத்தவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

அவர்கள் கேட்ட கேள்வி. விடுதலைப் புலிகள் இயக்கம் டெலோ ,புளொட் ,ஈபிஆர்எல் லைப், மற்றும் சிறு இயக்கங்களை எல்லாம் சமூகவிரோதிகள் துரோகிகள் என்று கொலை செய்து, போராட்ட களத்தில் இருந்து அடித்து துரத்தி விட்டார்கள். பின்பு பெரிய மூன்று இயக்கங்களான டெலோ ,பிளாட், இ பி ஆர் எல் லேப் மூன்றும் இலங்கைராணுவத்துடன் சேர்ந்து விடுதலைப்புலி இயக்கத்தையும், பெருமளவு அதன் ஆதரவாளர்களையும் கொன்றொழித்தார்கள். அதுக்கு பொதுப்படையாக கூறப்பட்ட காரணம் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு கொலைகார இயக்கம் அப்பாவி தமிழ் மக்களையும் மற்ற இயக்கங்களையும் தடை செய்து கொலை செய்து தாங்கள் மட்டுமே ஒரு இயக்கம் மட்டுமே இருக்க வேண்டும் என்று சர்வாதிகபோக்குடன் நடக்கிறார்கள் என்று காரணம் கூறினார்கள். இது நடந்து முடிந்த நிகழ்வு.

இப்போது இந்த மூன்று இயக்கங்களும் தங்கள் தங்கள் இயக்கத்தை சேர்ந்த பல தோழர்களை தலைவர்களை கொலை செய்த திலீபனுக்கு போட்டி போட்டுக் கொண்டு அஞ்சலி செலுத்துகிறார்கள். அப்படியானால் திலீபனும் விடுதலை புலிகளும் தடை செய்து கொலை செய்த மற்ற இயக்கங்கள் உண்மையில் சமூக விரோத இயக்கங்கள் தானா? இப்பொழுது அஞ்சலி செய்யும் 3 இயக்க தலைவர்களும் முக்கிய அங்கத்தவர்களும் திலீபன் மற்றும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தங்கள் முன்னாள் தலைவர்களும் தங்கள்  முன்னால் சகோதடர்களும் சமூக விரோதிகள் தான் என்று பகிரங்கமாக ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தானே அர்த்தம்.
இது இந்த இயக்கங்களை வளர்த்த ஆரம்ப கால மறைந்த தோழர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா. திலீபனின் அண்ணாவே புளொட்இயக்கத்தில் சேர்ந்து தனது சொந்த தம்பி திலீபனின் நடவடிக்கையில் கடுமையாக விமர்சித்தவர்.
இந்தக் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் இப்போதும் telo,  plote,eprlf இயக்கங்களில் இருக்கும் தோழர்கள் சரியான பதில்களைகூறினால், எங்கள் போராட்டத்தை ஆய்வு செய்யும் இளைஞர்களுக்கு உண்மைகளே உணர உதவி செய்யும் நன்றி
logoblog

Thanks for reading பழைய பதிவு

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment