எனது அனைத்து முகநூல் நண்பர்களுக்கும் வணக்கம். கடந்த வாரங்களில் உடல் நலம் குறைவால், முகநூல் பக்கம் வர முடியவில்லை. எனது உடல் நலம் குறித்து அன்போடு கேட்டவர்களுக்கும், சுகம் பெற வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த பல வருடங்களாக உடல் நலத்தை கவனிக்காமல் விட்டதும், பொருளாதாரப், மற்றும் பல பிரச்சினைகளும் காரணமாக முறையாக மருத்துவ சிகிச்சை எடுக்காதாலும் எதிர்பாராத வகையில் திடீரென எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு நானே அதிர்ச்சியாகி விட்டேன்.
அப்போது எதிர்பாரா வகையில் எனது உடல் நலத்தில் அக்கறை கொண்டுள்ள மாணவர் பேரவை காலத்தில் இருந்து இன்று வரை ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த போராளி தலைவர் என்னை வற்புறுத்தி, நான் தயங்கினாலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி எனது மருத்துவத்துக்கு ஒரு சிறந்த மருத்துவமனையையும் அடையாளம் காட்டி நான் நலம் பெற உதவி செய்ததையும் மறக்க முடியாது.
அதோடு எனது உடல் நிலை பற்றி கேள்விப்பட்ட எனது சிறு வயது முதல் இன்று வரை நண்பனாக இருக்கும் நண்பர் எனது பொருளாதார நிலை அறிந்து நான் மருத்துவம் பார்க்க உடனடியாக பண உதவியும் செய்தார். இந்த நண்பர் செய்த பண உதவியாள், எந்தவித மன,பண கஷ்டமும் பயமும் இன்றி மருத்துவம் பார்க்க முடிந்தது. இந்த பொருளாதாரப் பிரச்சினை அதனால் தான் நான் பல வருடங்களாக முறையான மருத்துவ சிகிச்சை பெறவில்லை. இந்த நண்பருக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்
ஆனால் விடுதலைப் போராட்டத்தில் என்னோடு இருந்து இப்போது தொடர்பில் உள்ளவர்களும், நான் இயக்கத்தில் இருந்தபோது வெளிநாடு போக நான் உதவி செய்த பல இயக்க நண்பர்களும்,, எந்த இயக்க நண்பர்களுக்காக உண்மைகளே வெளிக் கொண்டு வர புளொட் இயக்க தலைமையோடு முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி நடந்த உண்மைகளை பதிவுகளாக போட்டு விட்டேனோ அந்த நண்பர்கள் கூட என்னை சுகம்விசாரிக்கவில்லை என்பது கவலை அளிக்கிறது.
எப்பவும் சுயநலமாக இருப்பது தான் வாழ்க்கைக்கு உதவும் என நினைக்கிறேன்
No comments:
Post a Comment