பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Monday, 8 June 2026

இது ஒரு பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Monday, 8 June 2026
கடந்த காலங்களில் தென் ஆசிய நாடுகளில் அரசாங்கங்கள் தங்களுக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் குரலே அடக்க, எதிர்க்கட்சிகளை விட அரசாங்கத்தை கடுமையாக இருக்கும் படி ஒரு குழுவை இயக்கத்தை உருவாக்கி விடுவார்கள். அந்தக் குழு தாங்கள் தான் அரசாங்களுக்கு முதல் எதிரி என்று காட்டி பல போராட்டங்கள் செய்வார்கள். அரசாங்கமும் அவர்களை கடுமையாக எதிர்ப்பது போல் பாசாங்கு செய்து மக்களிடம் அவர்களுக்கு ஒரு அனுதாபத்தை பெற்றுக் கொடுக்கும்.
கொஞ்சம் கொஞ்சமா அந்த குழுவின் தலைவரை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தி கடைசி யில் மத்திய அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை பின் தள்ளி தங்களுக்கு ஆதரவான தலைவரை மக்கள் மத்தியில் முன் கொண்டு வந்து விடுவார்கள்.
அந்த தலைவரும் அரசாங்கத்திற்கு எதிராக உப்புசப்பு இல்லாத போராட்டங்கள் எல்லாம் நடத்தி மக்கள் மத்தியில் தலைவராக உயர்ந்து விடுவார்
பொதுவெளியில் அரசாங்கத்துக்கு எதிரானவர் உள்ளுக்குள் அரசாங்கத்தின் செல்ல பிள்ளை. இப்படித்தான் பல மட்டமான தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இக்காலத்தில் இலங்கையில் இதுதான் நடந்து வருகிறது
logoblog

Thanks for reading இது ஒரு பழைய பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment