பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 8 September 2026

பழைய பதிவு

  வெற்றிசெல்வன்       Tuesday, 8 September 2026
அன்பான நண்பர்களுக்கும் தோழர்களுக்கும்
1970 ஆம் ஆண்டுக்குப் பின்பு மாணவர் பேரவை இளைஞர் பேரவை போராட்டங்கள் காலகட்டங்களில்,ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ய கொழும்பில் நாலாம்  மாடி என்ற விசாரணை கட்டிடத்தையும், விசாரணை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை பற்றியும் பலவித பயங்கர செய்திகளும் வதந்திகளும் பரவி தமிழ் மக்களை பயமும் ஆத்திரமும் கொள்ள வைத்தன. அதன்பின் 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பழைய பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட மேஜர் வீரதுங்க தலைமையில்ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாத தடுப்பு முகாம் பற்றிய, சித்திரவதைக்கூடம் பற்றியசெய்திகள் தமிழ் மக்களிடம் பரவி சிங்கள அரசின் தமிழ் மக்கள் மீதான சித்திரவதைகள் பற்றி கதை கதையாக கதைக்க வைத்தனர்.
     1979ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம்நானும் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டு ஒரு மாதம் பயங்கரவாத தடுப்பு முகாமில் இருந்தேன்.அவர்கள் செய்த சித்திரவதைகளை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது கடுமையான சித்திரவதை என்பது தலைகீழாக கட்டி தொங்கவிட்டு மிளகாய் புகை போடுவதே படுக்கவைத்து குதிகாலில் தொடர்ந்து அடிப்பது. அதேநேரம்அவர்கள் சமைக்கும் சாப்பாடு தான்எமக்கும் கொடுத்தார்கள். தினசரி சோறு மாட்டு இறைச்சி இருக்கும்.அன்றைய காலகட்டங்களில் இது போன்றதமிழ்இளைஞருக்கு மிகக் கடுமையான சித்திரவதை என்று நாங்கள் எல்லோரும் கதைத்துக் கொள்வோம்.
இயக்கங்கள் வளர்ச்சி பெற்ற பிறகு இயக்கத் தலைமைகள் இயக்க புலனாய்வு பிரிவு ஒன்றை ஆரம்பித்துதமிழ் இளைஞர்கள் மீது (குறித்துக் கொள்ளுங்கள் சிங்களவர்கள் மீது அல்ல) சொந்தத் தமிழ் சகோதரர்கள் மீது  சந்தேகப்பட்டு பிடித்துசித்திரவதைகளும் பின்புகொலைகளும் செய்தார்கள்.
எல்லா இயக்கங்களையும் அழித்த தமிழீழ விடுதலைப் புலிகள் கடைசியில் துரோகி என்று பட்டம் சூட்டி மற்ற இயக்கங்களின் இருந்த முன்னாள் போராளிகளையும் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் பிடித்து ஆயிரக்கணக்கானவர்களை கொலையும் செய்து ஹிட்லர் கூடசெய்யாத சித்திரவதைகளையும் செய்து பல ஆயிரக்கணக்கான தமிழ்இளைஞர்களை கொலையும் செய்தார்கள்.அண்மையில் எனது நண்பரின் தம்பி சுமார் 40 மாதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்திரவதை முகாம்களில் தான் பட்ட சித்திரவதை அனுபவங்களை எழுத்தில் ஆவண படுத்திருந்தார். அதை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது ,அதை வாசிக்கும் போது இதற்காகவா நாங்கள் போராடபுறப்பட்டோம் என்ற கேள்விக்குறி தான் ஏற்பட்டது.
அந்தத் தம்பி தனக்கேற்பட்ட  சித்திரவதைபற்றி எழுதியவற்றை திரும்ப முகநூலில் பதிய வேண்டும் என்றுவிரும்புகிறேன், காரணம் எமது விடுதலை இயக்கங்கள் எவ்வளவு கொடூரமானவை என மக்களுக்கு தெரிய வேண்டும். இவர்கள் சித்திரவதை செய்தது எல்லாம், தமிழ் மக்களையும் ,தமிழ்இளைஞர்களையும் தான். நான் இப்பதிவை போடுவதற்கு காரணம் எல்லோரும் லைக் பண்ண வேண்டும் என்றோ, கருத்து சொல்ல வேண்டும் என்றோ இல்லை இவ்வளவு காலமும் இந்த இயக்கங்கள் எப்படி தமிழ் மக்களையும்தமிழ்இளைஞர்களையும் கொலை செய்து விட்டு, உலகம் முழுக்க ,தாங்கள்தான்தமிழீழதமிழ் மக்களுக்கு பாதுகாப்பு கவசம் எனவிளம்பரம் செய்வது மிகவும் கேவலமானது.இனிவரும் காலங்களில் போராடப் புறப்படும் தமிழ் இளைஞர்களுக்கு கடந்தகாலம் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் பொதுமக்களும் போராடும் இளைஞர்களையும் அமைப்புக்களையும் அவர்கள் சரியான வழியில் செல்கிறார்கள் என கண்காணிக்க வேண்டும்
விரைவில் சித்திரவதை பட்ட தம்பியின் பதிவுகளை போடுகிறேன்
logoblog

Thanks for reading பழைய பதிவு

Newest
You are reading the newest post

No comments:

Post a Comment