தமிழ்நாட்டுச் சிக்கலையும், தமிழீழ சிக்கலையும் தமிழர் என்கிற ஒரே கண்ணோட்டத்தில் இருந்து மதிப்பிட்டுவிட முடியாது.
தமிழ்த்தேசிய அரசியல் என்பது வேறு, தமிழீழத் தேசிய அரசியல் என்பது வேறு.
இரண்டு தேசங்களின் மக்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களாக இருக்கலாம், ஆனால் தமிழீழத்தின் அரசியல், பொருளியல், வாழ்வியல், பண்பாட்டியல், வரலாற்றியல் கூறுகளும்; தமிழ்நாட்டின் அரசியல், பொருளியல், வாழ்வியல், பண்பாட்டியல், வரலாற்றில் கூறுகளும் தனித்தனியானவை.
ஒன்றைவைத்து மற்றொன்றை மதிப்பிட முடியாது.
தமிழ்நாட்டின் இசுடெர்லைட்டை எதிர்த்து, ஐட்ரோ கார்பனை எதிர்த்து, கூடங்குளத்தை எதிர்த்து, நியூட்ரினோவை எதிர்த்து எப்படி காசுமீரிகளும் அசாமிகளும் போராட மாட்டார்களோ, அப்படித் தமிழீழ மக்களும் போராட மாட்டார்கள்..
அது போல் தான் தமிழீழத் தேசிய விடுதலை அரசியலுக்குத் தமிழ்நாட்டினர் ஆதரவு தெரிவிக்க முடியுமே அல்லாமல், தாங்களே முன் நின்று போராடிட முடியாது..
சிலர், தமிழீழ அரசியலையே தமிழ்நாட்டின் அரசியல் போல் கருதிப் பேசுவதும், அதை வைத்தே தமிழ்நாட்டு அரசியலை, அரசியல் கட்சிகளை, இயக்கங்களை மதிப்பீடு செய்வதும் சரியான அரசியல் பார்வையுடையதாக இருக்க முடியாது..
தமிழ்நாட்டின் மக்கள் விடுதலை அரசியலுக்கு எவரெவர் எதிரிகள், எவரெவர் நண்பர்கள் என்று அளவிடுவதே அடிப்படையானது..
No comments:
Post a Comment