பகுதி 35
பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ரொமேஷ் பண்டாரி இலங்கைக்குப் போய்ஜெயவர்த்தனா உடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இந்திய அரசு வெளியுறவுத்துறை எல்லா முக்கியவிடுதலை இயக்கங்களுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்உத்தியோக பூர்வமாக முதல் அழைப்பை டெல்லி வரும்படி கூறியது. அக்டோபர் 6ஆம் தேதி 1985ஆம் ஆண்டு. ஒரு நாளைக்கு முன்பாகவேஎல்லோரும் டெல்லி வந்து விட்டார்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி .உட்பட ஒரே ஓட்டலில் தங்க வைக்கப்பட்டார்கள். எமது இயக்கம் சார்பாக அரசியல் துறை செயலர் வாசுதேவா, கனகராஜா, செயலதிபர் உமாமகேஸ்வரன் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். வழமைபோல் செயலதிபர் உமாமகேஸ்வரன் எமது டெல்லி அலுவலகத்திலேயே வந்து தங்கிவிட்டார்.
அதே நேரம் சென்னைக்கு தமிழ் விடுதலை இயக்கங்களை சந்திக்க வந்த விஜய குமாரதுங்க, சந்திரிக்கா அவர்கள் கட்சி செயலாளர் ஓசி அபயகுணவர்தன போன்றவர்கள். புதுடில்லி க்கும் வந்து ஜன்பத் ஓட்டலில் தங்கியிருந்தார்கள். அவர்கள் செயலதிபர் உமா மகேஸ்வரனை சந்திக்க விரும்புவதாக தகவல் கொடுத்தார்கள். 10:00 மணி போல்செயலதிபர் உமா மகேஸ்வரனும் ,கனகராஜ் வும், நானும் அவர்களைப் போய் சந்தித்தோம். எமது சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்தது.சொல்லி செயலதிபர் உமா மகேஸ்வரன் விடைபெற்றார்.
நானும் செயலதிபர் உமா மகேஸ்வரனும் நீண்ட நேரம் வாசுதேவா கனகராஜ் ஆகியோர் ஓட்டலில்தான் நேரம் செலவழிப்போம். இம் முறை எல்லா இயக்கங்களும் மிக மகிழ்ச்சியாக ஒருத்தருடன் ஒருத்தர் பேசிக்கொண்டோம்.நாங்கள் இருக்கும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி அமிர்தலிங்கம் அவர்கள் மட்டும் வரமாட்டார் கள். அந்த ஓட்டலில் நாங்கள் இருந்தஅறைகளுக்கு பக்கத்தில் ஒருவரவேற்பறை இருந்தது. அதில் தான் நாங்கள் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தோம். இதை இப்போது நான் எழுதும் போது கூட யாரும் நம்ப மாட்டார்கள். லண்டனிலிருந்து அப்போது ஈபிஆர்எல்எப் சேர்ந்த யோக சங்கரியும் வந்திருந்தார்.யோக சங்கரியும் அவருக்கு அடுத்ததாக நானும் அதில் நல்ல குண்டாக இருந்தோம். பிரபாகரன் பொத்தம் பொதுவாக சிரித்துக்கொண்டு இவர்கள் இருவரையும் பேச்சுவார்த்தைக்கு, இந்திய அதிகாரிகளிடம் ஓ காட்டக் கூடாது. ஏனெனில் நாங்கள் அவர்களிடம்இயக்கங்களிடம் பணக்கஷ்டம் சாப்பாடு கஷ்டம் என்று கூறி உதவி கேட்டால் அவர்கள் இவர்களை பார்த்து விட்டு நாங்கள் பொய் சொல்வதாக நினைப்பார்கள். உதவி செய்ய மாட்டார்கள் எனக்கூற எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. நானும் யோக சங்கரியும் உடனடியாக எங்களைப் பார்த்தால் தான் கட்டாயம் உதவி செய்வார்கள். காரணம் எங்களைப் பார்த்தால் மிக வசதியான செட்டியார் மாதிரி இருப்பதால் பணத்தை நாங்கள் சிக்கனமாக செலவு செய்வோம் என நம்புவார்கள் என கூற, ஒரே சிரிப்புதான்.
செயலதிபர் உமா மகேஸ்வரனும் ஈரோஸ் ரட்ணசபதியும் ஓரிடத்தில் இருந்து கதைக்க, வாசு தேவா,கனகராஜா மற்ற தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். நான் செயலதிபர் உமாவிடம் கேட்டுவிட்டு,பிரபாகரன் திலகர் இருந்த இடத்துக்குப் போய் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். பிரபாகரனும் , திலகரும் மிக நன்றாகப் பேசினார்கள். எம்ஜிஆர்பற்றியும் சண்டைக் காட்சிகளைப் பற்றியும். நாங்கள் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட ஈரோஸ் பாலகுமார் அமைதியாக வந்து இருந்து நாங்கள் என்ன பேசுகிறோம் என்று கண்காணித்தபடி இருந்ததார்.நாங்கள் உப்பு சப்பில்லாத எம்ஜிஆரை பற்றி கதைப்பதைஅறிந்து அவரும் எங்களுடன் கலந்து கொண்டார்.. உண்மையில் அந்த நேரம் யாரும் நல்ல முயற்சி எடுத்திருந்தார்கள் இயக்கங்கள் நல்ல ஒற்றுமை ஏற்பட்டு இருக்கும்.எல்லோரும் கலகலப்பாக பேச்சுவார்த்தையை பற்றி எந்த கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் திம்பு பேச்சு வார்த்தைக்கு முன்பு எல்லோரும் மிகத் தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு இருந்ததை பார்த்தவன் நான்.
இரவுச் சாப்பாடு எல்லோரும் ஒற்றுமையாகரெஸ்டாரன்ட் போய் சாப்பிடுவோம்.நாங்கள் சாப்பிட்டு போகும் வரை எத்தனை மணியாக இருந்தாலும் அமிர்தலிங்கம் குழுவினர் சாப்பிட வர மாட்டார்கள். நாங்கள் ரூமுக்கு வந்த பின்பு. செயலதிபர் உமா மகேஸ்வரன் எங்களிடம் இப்ப போய் ரெஸ்டாரண்ட்டில் அமிர்தலிங்கத்தை போய் பார்க்கச் சொல்லுவார். நான் கனகராஜா வாசுதேவா மூவரும் போய்தேடினால், அவர்கள் மூவரும் ஒரு மூலை டேபிளில் அமர்ந்தக் ரகசியமாக குடித்து கொண்டிருப்பார்கள். எங்களைப் பார்த்தவுடன் திகைத்து போய் வாசுதேவ் இரகசியமாக கூப்பிட்டு உமா மகேஸ்வரன் அல்லது மற்ற தலைவர்கள் யாரும் இங்கு நிற்கிறார்கள் என பயந்து போய் கேட்பார்கள். நாங்கள் இல்லை என்றதும், சந்தோசமாய் கூறினார் அவர்கள் பார்த்தார்கள் என்றால் போட்டோவும் எடுத்து தங்கள் இயக்க வெளியீடுகளில் போட்டு எங்களை ஒரே பாடாய் படுத்தி விடுவார்கள். நீங்கள் யாரும் போய் சொல்லி விடாதீர்கள். நாங்கள் போய் செயலதிபர் உமாவுடன் கூறினால், அவர் எங்களிடம் மற்றவர்களிடம் இதைக் கூற வேண்டாம் என கூறினார். அமிர்தலிங்கம் ஆட்கள்குளிர் தாங்க குடிக்கிறார்கள் என்றார்.
அடுத்தநாள் பகல் 2 மணி போல் இந்திய வெளியுறவு செயலக பேச்சுவார்த்தை கூட்ட அரங்கில்இந்திய வெளியுறவுச் செயலாளர் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.உடனடியாக டெல்லி தூர்தர்ஷன் டெலிவிஷனில் இருந்து வீடியோ எடுத்து படங்கள் எடுத்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை முதல்முறையாக வெளி உலகுக்கு தெரியப்படுத்தினார்கள். இது இலங்கை அரசுக்கு எச்சரிக்கை மணி போல் பட்டது.
அந்தப் பேச்சுவார்த்தையில் அமிர்தலிங்கம், செயலதிபர்உமா மகேஸ்வரன், ரத்ன சபாபதி ஆகியோர்தான் கூடுதலாக கருத்துக்கள் சொன்னார்கள். ரொமேஷ் பண்டாரி அதை திலகர் ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பார். சில வேளைகளில் நேர்எதிராக இருந்த செயலதிபர் உமா மகேஸ்வரன் பிரபாகரன் கூறுவதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறியதும் நடந்தது. பத்மநாபா வும் கேட்டதுக்கு பதில், ஆனால் ஸ்ரீ சபாரத்தினம் ஒரு புன் சிரிப்பு தான். அவருடன் வந்த சார்ல்ஸ் சில கருத்துக்களைக் கூறினார். சார்ல்ஸ் இப்ப லண்டனில் இருப்பதாக அறிகிறேன். ரொமேஷ் பண்டாரி எங்களுடன் பேசி விட்டு உடனடியாக நேரடி தொலைபேசி மூலம் இலங்கை அரசுடனும் பேசுவர். அவர்களின் கருத்தை எங்களிடம் கூறுவர்.இந்தக் கூட்டம் மிகவும் கலகலப்பாக சிரிப்புமாக முடிந்தது.ஒரு தீர்வும் கிடைக்கவில்லை ஆனால் இயக்கங்களின் கருத்துகள் கேட்கப்பட்டு இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆறு மணி போல் கூட்டம் முடிந்தது.கூட்டம் முடியும் நேரத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் பா .சிதம்பரம் எம்பி, ரங்கராஜன் குமாரமங்கலம் எம்பி ஆகியோர் வந்து தங்களைஅறிமுகப்படுத்திக் கொண்டு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.பா சிதம்பரமும் ரங்கராஜன் குமாரமங்கலம் எனக்கு முன்பே அறியும் அறிமுகமானவர்கள் என்பதால்என்னைச் சுகம்விசாரித்து பேசிக்கொண்டிருக்கும் போது சிதம்பரம் ரங்கராஜன் இடம் இவரைத் தெரியுமா என்று கேட்க, ரங்கராஜன் காலையில் எழும்பி கதவை திறந்தால் இவன் முகத்தில்தான் முழிக்கிறேன் என்று கூறி, தனதுஎதிர் வீட்டில் தான் நான் இருப்பதாக கூறினார். இம்முறை பேச்சுவார்த்தையில் எல்லோரும் மிக மகிழ்ச்சியாக இருந்தோம்.
அடுத்த நாள் காலையில் எல்லோருக்கும் சென்னைக்கு விமானம். செயலதிபர் உமாமகேஸ்வரன் மட்டும் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு டெல்லியில் 2 நாள் இருந்து சில சந்திப்புகளை நடத்தி விட்டு சென்னை சென்றார்.
போராளிகள் குழுக்களையும் , தமிழ் தலைவர்களையும் முதன் முறையாக இந்தியா அதிகாரப்பூர்வமாக உலகத்துக்குக் காட்டிஒன்றிணைத்த நேரம்.
இங்கே பேச்சுவார்த்தையில்உள்ளோர் பெயர்கள் : ரொமேஷ் பண்டாரி (forign secretary) - குர்தீப் சகாதேவ் (Asst.forign secretary) - சம்பந்தன் (TULF) சிவசிதம்பரம் (TULF) - அமிர்தலிங்கம் (TULF) - உமாமகேஸ்வரன் (PLOTE) - வாசுதேவா (PLOTE) - வெற்றிச்செல்வன் (PLOTE) - கனகராஜா (PLOTE) - யோகி (LTTE) - லோரன்ஸ் திலகர் (LTTE) - பிரபாகரன் (LTTE) - ரட்ணசபாபதி (EROS)- பாலகுமார் (EROS)- - றொபர்ட் (TELO) - சிறீ சபாரட்னம் (TELO) - ? - ? - பத்மநாபா (EPRLF) - கேதீசுவரன் (EPRLF) - சாந்தன் (EPRLF) ( இவர்களில் அநேகர் இன்று உயிரோடு இல்லை)
1985 ல் தமிழீழ விடுதலை இயக்கத் தலைமைகளும் தமிழ் அரசியல் தலைமையும் இணைந்து டில்லியில் ரொமேஷ் பண்டாரி அவர்களை சந்தித்த ஒரு பொன்னான நினைவு இது... Video Link
தொடரும்.
No comments:
Post a Comment