பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Saturday, 3 June 2023

கலைஞர் கருணாநிதி அவர்கள்

  வெற்றிசெல்வன்       Saturday, 3 June 2023

 

இன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் நூறாவது பிறந்தநாள். அவரை வணங்குகிறேன். இன்று பலர் குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கைதமிழர்கள் பலர் பல மாறுபட்ட கருத்துக்களை கூறி பலர் வாழ்த்துகிறார்கள். சிலர் துரோகி என்கிறார்கள்.

உண்மைதான் கலைஞர் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் தான் செய்துவிட்டார்.1982 ஆண்டு பாண்டி பஜார் துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்பு எம்ஜிஆர் அரசாங்கம் பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் மற்ற தோழர்களையும் இலங்கை அரசாங்கத்தின் போலீஸ்மா அதிபர் ருத்ரா ராஜ சிங்கத்திடம் பிடித்துக் கொடுப்பதற்காக தமிழ்நாட்டில் நடந்த முயற்சிகள் தெரியுமா. அதை ரகசியமாக பலவித முயற்சிகள் செய்து முறியடித்தவர் கலைஞர் அவர்கள். கலைஞர் அவர்களும் திமுக தொண்டர்களும் அன்று இல்லாவிட்டால் பிரபாகரன்உமா மகேஸ்வரன் மற்ற தோழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு தூக்கு தண்டனை கிடைத்திருக்கும். போராட்டமும் நடந்திருக்காது. முள்ளிவாய்க்கால் முடிவும் இருந்து இருக்காது. பொருளாதாரத்தை மேம்படுத்த அகதிகள் என்ற பெயரில் இலங்கை தமிழ் மக்களும் வெளிநாடுகளில் போய் வாழ முடிந்திருக்காது.

அன்று பிரபாகரன் உமா மகேஸ்வரன் மற்ற தோழர்களை எம்ஜிஆர் அரசு இலங்கைக்கு பிடித்து கொடுக்க இருந்ததை தடுத்ததால் தான் அவரை இலங்கைத் தமிழர்கள் துரோகி என்று கூறுகிறார்கள் என நினைக்கிறேன்.

கலைஞர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் 1983 ஆம் ஆண்டு L. கணேசன் அண்ணாவின் தலைமையில் புதுடெல்லியில் போராடியதை கூட இருந்து பார்த்தவன்.

அன்று எம்ஜிஆர் அரசு ஆளும் கட்சியாக இருந்ததால் கலைஞர் கருணாநிதி, மற்றும் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள்இலங்கை தமிழர்களுக்காக செய்த போராட்டங்கள் பத்திரிகைகளில் பெரிய அளவில் வெளி வராதபடி எம்ஜிஆர் செய்து விட்டார். அன்றைய காலகட்டம் இலங்கை தமிழ் விடுதலை இயக்கங்களுக்கு கலைஞர் கருணாநிதியின் திமுகவும் தான் பெரும் பக்கபலமாக இருந்தனர். அந்த நன்றியை மறக்கக்கூடாது. நான் நேரில் இருந்து பார்த்தவன். இதே மாதிரி பல ஆரம்ப கால விடுதலை இயக்கத் தலைவர்களுக்கும் இது தெரியும்.

இந்திய மத்திய அரசின் உதவிகளும் கலைஞரின் தமிழ்நாட்டின் வலிமையை கண்டு தான் உதவி செய்தனர். பல தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தாங்கள் தான் இந்திரா காந்தியோடு பேசினதுபோன்று பல கதைகளை கூறியதையும் நாங்கள் அறிவோம்.

இயக்கங்கள் வளர வளர இயக்கங்களின் துரோகத்தனங்களும் தான் இருக்க வேண்டும் என்ற கொலை வெறியும் பல தமிழ்நாட்டுத் தலைவர்களை எங்க தமிழர்களை போராட்டத்தை ஆதரிப்பது இருந்து ஒதுங்க செய்தன.

கலைஞர் இலங்கை தமிழர்களின் தலைவராக இருக்கவில்லை. அவர் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர். அவர் செய்த நல்லது கெட்டதுகளை விமர்சிக்க வேண்டியது தமிழ்நாட்டு மக்கள்.

இந்திய படையெடுப்பை எல்லா இயக்கங்களும் ஆரம்பித்திலேயே விரும்பவில்லை. 87 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இலங்கை அரசின் ஆப்பரேஷன் லிப்ரேஷன் தாக்குதலில் வடமகாணம் யாழ்ப்பாணம் சிங்கள அரசின் கைகளில் போய்விடும் என்று பாலசிங்கம் சென்னையிலும் டெல்லியிலும் பறந்து பறந்து போய் இந்தியா உடனடியாக இதில் தலையிட வேண்டும் கோரிக்கை வைத்ததையும் நான் நேரில் அறிவேன். பிற்காலத்தில்எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களும் பதவிப் போட்டியில் இலங்கை தமிழ் மக்களுக்கு துரோகங்கள் செய்து இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து மற்ற மற்ற தமிழ் இயக்கங்களை கொலை செய்யும் தமிழ் பொது மக்களை கொலை செய்தும் எங்கள் ஈழ தமிழ்  இனத்தையே நாங்கள் தான் அழித்து ஈழத் தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தோம்.

அதை நாங்கள் மறைத்து இன்று வரை கலைஞரை துரோகம் செய்தார் என்று குறிப்பிட்டு சந்தோசப் பட்டுக் கொள்கிறோம்.

கலைஞர் தமிழ்நாட்டு மக்களுக்கு பல நன்மைகள் செய்துள்ளார். கலைஞரையும் திமுகவையும் தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிறார்கள். இது இடையில் நாங்கள் புகுந்து விமர்சிக்க தேவையில்லை. இலங்கைத் தமிழர்கள் தற்போது இலங்கையில் தமிழ் பகுதியில் நடக்கும் நடக்கும் தமிழருக்கு எதிரான செயல்களை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் இது.


logoblog

Thanks for reading கலைஞர் கருணாநிதி அவர்கள்

Previous
« Prev Post

No comments:

Post a Comment