இன்று இலங்கை தமிழர்களின் யார் மானமுள்ளவன். இன்று மானமுள்ள தமிழ் தலைவன் யார்.
நேற்றைய எனது கடைசி ஒரு பதிவுக்கு ஒரு மானமுள்ள இலங்கை தமிழ் தம்பி ஒரு கருத்து சொல்லி இருந்தார். அதாவது மானமுள்ள தமிழன் தமிழீழம் தான் கேட்பான் என்று.
தமிழ் ஈழம் என்பது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளாகும். இன்று வடக்கு கிழக்கு என்பது தனித்தனியாக பிரிந்து போய் இருக்கிறது. கடந்த எழுபதுகளில் தமிழீழம் கேட்ட அரசியல் தலைவர்களும், ஆயுதப் போராட்டத் தலைவர்களும் பாதுகாப்பாக இந்தியாவில் வந்து இருந்து கொண்டு போராட்டத்தை நடத்தினார்கள். ஆனால் அப்பாவி பொதுமக்களும் இளைஞர்களும் இவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொண்டு தங்கள் தாய் நிலத்திலிருந்து அதாவது இலங்கை வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து போராட்டத்தை நடத்தி இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு சிறைபிடிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
கொல்லப்பட்ட தமிழர் படங்களை காட்டி ,இந்தியாவில் உயிர் பயம் இல்லாமல் வசதியாக இருந்த விடுதலை இயக்கத் தலைவர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இலங்கை அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்.
அதே நேரம் மக்களோடு மக்களாக சிறு சிறு இயக்கங்களைக் கட்டி வளர்ந்து வந்த சிறு இயக்க தலைவர்களை, இவர்கள் வளர்ந்து விடுவார்களோ என்ற பயத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக இருந்த தலைவர்களின் உத்தரவின் பெயரில் கொல்லப்பட்டார்கள். அதுபோல் வெளிநாடுகளுக்கு தப்பியோடாமல்மக்களோடு மக்களாக இருந்து செயல்பட்டு வந்த அரசியல் தலைவர்கள் இந்த விடுதலை இயக்கத் தலைவர்களால் கொல்லப்பட்டார்கள். அதுபோல் தங்கள் உயிரே பாதுகாத்துக் கொள்ள வெளிநாட்டுக்கு தப்பி போகாமல், தமிழ் மக்களுக்காக வாழ்ந்த அறிஞர்கள் கல்லூரி அதிபர்கள், சமூக சேகவர்கள் இந்தியாவில் பாதுகாப்பு ஆக இருந்த இலங்கை தமிழ் ஆயுத தலைவர்களால் உத்திரவிடப்பட்டு கொல்லப்பட்டார்கள். மக்களோடு மக்களாக வாழ்ந்த இவர்களை இந்த இயக்கதலைவர்கள் கொல்ல உத்தரவிட்டது ஏன்.
மக்கள் இந்தியாவின் மடியில் தவழ்ந்து பாதுகாப்பாக இருக்கும் இந்த ஆயுத போராட்டத் தலைவர்கள் பற்றிய உண்மைகள் அறிந்து விடுவார்கள் என்ற பயம் தான் காரணம்
இன்று ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு பிரதிபலன் பாராமல் உதவி செய்வது மிகவும் அபூர்வம். ஒரு நாடு இன்னொரு நாட்டில் பிரச்சனைகள் இருக்கும்போது, அந்த நாட்டை தனது கைக்குள் கொண்டு வர பிரச்சனையே ஒரு பக்கம் சார்பாக ஊதி பெரிதாக்கி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள். அதுதான் இந்தியா எங்களை வைத்து செய்தது. அதை வைத்து நாங்கள் சரியான அரசியல் தீர்வை பெற முயற்சி செய்யாமல், தான் மட்டும் இருக்க வேண்டும் என்ற சுயநலத்தால் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் தங்களுக்குள் அடிப்பட்டு ஒருத்தரை ஒருத்தர் அழித்து, கடைசியில் உலக நாடுகள் ஆதரவின்றி ஈழத் தமிழினம் முள்ளிவாய்க்காலில் சமாதி ஆக்கப்பட்டது.
இன்று இலங்கையில் தனித்தமிழ் ஈழம் தான் வேண்டும் என்று குரல் கொடுக்கக் கூடியவர்கள் யார். முகநூலில் மட்டும் தனி தமிழ் ஈழம்குரல் கொடுப்பவர்கள் பகிரங்கமாக இலங்கையில் வடகிழக்கில் போய் மக்களை திரட்ட முடியுமா. தமிழ் ஈழம் என்பது வெளிநாடுகளுக்கு தப்பியோடாமல், எல்லா கஷ்டங்களுக்கும் இடையில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எடுக்க வேண்டிய முடிவு.
ஆனால் அங்கு வாழ்ந்து வரும் மக்கள் தமிழ் ஈழம் கேட்டு போராடுகிறார்களா இல்லை அவர்களது மக்கள் பிரதிநிதிகள் யாரும் தமிழ் ஈழத்தை பற்றி பேசுகிறார்களா. சிங்கள பாராளுமன்றத்தில் போய் சத்திய பிரமாணம் எடுத்து தமிழ் மக்கள் உரிமைகளை பற்றி பேசுவதை விட, சக மாற்றுக் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி கேவலமாக பேசி சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களின் கைதட்டளை பெறுகிறார்கள்.
இன்று தமிழீழம் பற்றி பேசுபவர்கள் வெளிநாட்டில் கோடி கோடியாக பணத்தை வைத்துக்கொண்டு, என்றும் ஈழபோராட்டத்தை வைத்து பணம் சம்பாதிப்பவர்களும், வெளிநாட்டில்பணம் வைத்திருப்பவர்கள் கொடுக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு சில நபர்களும் ,ஒரு சில தலைவர்களும் மட்டும்தான்.
இன்று இலங்கையில் திரும்ப ஒரு தமிழில போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றால், அதை தலைமை தாங்க கூடியவர் யார். அப்படி ஒரு சிறந்த தலைவரை அடையாளம் காட்ட முடியுமா. தான்தான் பெரியவன் என்று காட்டுவதை விட, இந்தப் போராட்டத்தால் உயிரிழப்புகளும் தமிழர் பூமியும் பாதுகாக்கப்படவேண்டுமென்று நிற்பவனே உண்மையான தலைவன்.
கிட்டத்தட்ட கடந்த காலத்தில் இருந்த ஒரு தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள். எப்படி என்றால் தமிழர் உரிமைக்காக வடக்கு கிழக்கு தமிழ் தலைவர்களுடன் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்து, அந்தத் தமிழர் விடுதலைக் கூட்டணி தனித் தமிழீழம் என்று வந்தபோது, தனது மலையகத் தமிழரை காப்பாற்றுவதற்காக அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர் தனது இலங்கை தொழிலாளர் கட்சி மூலம் மலையக தமிழருக்கு பெரிய அளவில் நன்மைகள் செய்ய விட்டாலும், ஆளும் அரசாங்கக் கட்சிகளை அனுசரித்து பதவி பெற்று, ஓரளவு சிங்களவர்கள் சுற்றி வாழ்ந்து வர நடுவில் மலையகத் தமிழர்கள் வாழ்ந்தார்கள். அதனால் வடகிழக்கில் போராட்டங்கள் பெருமளவு வெடித்த போதும், மலையக தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்டார்கள்.
அந்த காலத்தில் தொண்டைமானை பற்றி எமது தமிழ் தலைவர்கள் வடக்கத்தியான நம்பக்கூடாது. என்று மட்டமாக கேவலமாக பேசுவார்கள்.
இதே போல் தான் என்றும் ஏதோ ஓரளவு சரி தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பாலமாக இருந்து இருந்து செயல்படுபவர் நண்பர் தேவானந்தா. இவரை எதிர்ப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் யார் மூலமாகவோ அவரை அணுகி வேலை ,மட்டும் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்து விட்டு, தங்கள் வேலை முடிந்தவுடன் துரோகி என்று கூறுவார்கள். மற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு என்ன உதவிகள் செய்துள்ளார்கள். கேட்டால் தங்களுக்கு தமிழருக்கு உரிமை பெற்று தர தான் மக்கள் ஆணையிட்ட உள்ளதாக கூறுகிறார்கள். இன்று தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டால், தமிழ் இளைஞர்கள் யாரிடம் போய் வேலை மட்டும் உதவிகளே கேட்க முடியும்.
வெளிநாடுகளில் வசிக்கும் தீவிர விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கூட, இலங்கைபோகும்போது தங்களுக்குரிய பிரச்சினைகளை தீர்க்க நண்பர் தோழர் தேவானந்தாவை சந்தித்து வருவது உண்மை.
இது நான் தேவானந்தாவை உயர்த்திப் பிடிக்க எழுதவில்லை. இன்று உள்ள வடக்கு தமிழ் தலைவர்களில், தமிழ் மக்களுக்கு தனது பதவியை வைத்துக்கொண்டுஉதவிகள் செய்யக்கூடிய நிலையில் இருப்பவர் என்ற காரணம் தான். உதவிகளும் செய்கிறார்.
இந்தப் பதிவு நான் எழுத ஆரம்பித்தது மானமுள்ள தமிழன் என்றும் தமிழ் ஈழம் தான் கேட்பார் என்று நண்பர் கூறிய கருத்துக்கள். யார் என்று மானமுள்ள தமிழன். எங்களுக்கு மானமுள்ள தமிழன் வேண்டுமா. இன்று உயிருடன் இருக்கும் தமிழர்களையும் நிலத்தையும் திரும்ப ஒரு போராட்டத்தால் அழித்து, வழி காட்டக்கூடிய தலைவர் வேண்டுமா. இருக்கும் தமிழர்களை ஓரளவு சரி பாதுகாக்க கூடிய தலைவர்கள் தேவையா என்று, இலங்கையில் மிஞ்சி இருக்கும் தமிழர்கள் முடிவு செய்ய வேண்டிய விடயம் இது.
வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வாழும் தமிழர்களும், இந்தியாவில் வெளிநாட்டு தமிழர்களின்பணத்துக்கு ஆசைப்பட்டு அறிக்கை விடும் தமிழ்நாட்டு தலைவர்களும் இலங்கையில் இன்று எஞ்சி இருக்கும் தமிழர்களின் தலைவிதியை முடிவு செய்யக்கூடாது.
மற்றும் ஒரு முக்கிய விடயம் கூற வேண்டும். கலந்த கால ஆயுதப் போராட்ட காலங்களில் வடக்கு இளைஞர்கள் பெருமளவு வெளிநாடுகளுக்கு போய், இருப்பவர்கள் படிப்பதற்காகவும் இருந்தபடியால், ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்களை தமிழ் இயக்கங்கள் மூளை சலவை செய்து போராட்டத்தில் இணைத்து, பலி கொடுத்து விட்டார்கள். நாள் இன்று வரை பெரிய அளவில் போராட்டத்தில் பலி கொடுக்கப்பட்ட மலையாக இளைஞர்கள் பற்றிய விபரங்கள் வருவதில்லை. வடக்கு இளைஞர்கள் பற்றிய தகவல்கள் தான் கூடுதலாக உள்ளன.
வடக்கு, கிழக்கு, மலையக தமிழர் தங்கள் எதிர்காலத்தை அவர்களே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் மேல் மக்களுக்கு சம்பந்தம் இல்லாத தலைவர் என்றுகூறிவரும் நபர்களைப் பற்றி கவனமாக இருங்கள். திரும்ப ஒரு முள்ளிவாய்க்கால் வேண்டாம்.
No comments:
Post a Comment