அண்மையில் சில இளம் நண்பர்கள் 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றியும், அதன் பின்பு ஏற்பட்ட முதல் வட கிழக்கு மாகாண அரசும், அதற்குப் பாதுகாப்பு கொடுத்த இந்திய அமைதிப்படை பற்றியும் பல கேள்விகள் கேட்டார்கள். அவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. பல சம்பவங்கள் மறந்து விட்டன.
குறிப்பிட வேண்டிய விடயம் இந்த இளம் நண்பர்கள் அந்த காலகட்டத்தில் பிறந்திருக்கவில்லை. அவர்கள் முகநூல் வழியாகவும், பத்திரிகைகள், புத்தகங்கள் மூலமாகவும் அறிந்த செய்திகளை வைத்து தான், கேள்விகள் கேட்டார்கள். அவர்கள் நினைவு எனக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று, அவர்களுக்கு தெரியாது அவர்கள் கேட்ட பலகேள்விகளுக்கு எனக்கும் பதில் தெரியாது என்று.
இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் இலங்கையில் வாழ்ந்து அரசியல் அறிவு பெற்ற முகநூல் நண்பர்கள் விளக்கங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
இந்தியா அமைதிகாக்கும் படை இலங்கை வட கிழக்குக்கு வந்த போது முதலில் அவர்களுக்கு பெரும் வரவேற்பு கொடுத்தது தமிழ் ஈழ விடுதலை புலிகள்மட்டுமே. பின்பு என்ன உண்மையான காரணம் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இந்தியாவுடன் அரசியல் ரீதியில் மோதாமல், ஆயுத ரீதியில் மோதி தமிழ் மக்களுக்கு பெருமளவு உயிர் பொருள்சேதம் ஏற்பட இவர்கள் காரணமானார்கள். இதற்குப் பின்னணியில் பிரேமதாசா உட்பட சில சிங்கள தலைவர்கள் இருந்தார்கள் என்பது உண்மையா.
பின்பு பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் கூட்டு சேர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு போக வேண்டும் என்று கூறிய போது, நாங்கள் இருவரும் ஒரே நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் எங்கள் பிரச்சினையை நாங்களே தீர்த்துக் கொள்வோம் என்று அறிக்கை விட்டது உண்மையா. அப்படி என்றால் ஏன் விடுதலைப் புலிகள் உட்பட எல்லா விடுதலை இயக்கங்களும் இந்தியாவில் போய் பயிற்சிகளும் ஆயுதங்களும் பெற்ற காரணம்.
புளொட் இயக்கம் தங்கள் புத்தகங்களில் அறிக்கைகளில் இந்திய வல்லரசு எதிர்க்க வேண்டும் கூறி வந்தார்கள். இந்திய அமைதிப்படையையும் எதிர்த்தார்கள். இப்படிப்பட்ட பெரிய அறிவு ஜீவிகள் ஏன் இந்தியாவில் முகாம் அமைத்து இந்திய அரசின் பயிற்சி ஆயுதங்கள் பெற்றார்கள். அதோடு தங்கள் இயக்கத்துக்கு பயிற்சிக்கு வந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை தமிழ்நாட்டில் கொன்று புதைத்ததாக தகவல் உள்ளது உண்மையா. அதோடு பம்பாயில் மிகப்பெரிய போதை பொருள் வியாபாரம் செய்தது உண்மையா.
அமைதிப்படை காலத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டஇயக்கங்கள் பெருமளவு கள்ள நோட்டுகளையும், கள்ள அமெரிக்க டாலர்களையும் இலங்கைக்கு கொண்டு போய் நல்ல நோட்டுகளாக மாற்றியது உண்மையா. அவர்கள் பெருமளவுபோதைப் பொருளும் கடத்தினார்கள் என்பது உண்மையா.
கோடிக்கணக்கான பணம் தனது இயக்கத்தை சேர்ந்த முக்கிய தலைவர்களால் களவாடபட்டதை அறிந்து விசாரிக்க ரகசியமாக வந்த ஈ பி ஆர் எல் தலைவர்பத்மநாப அவர்கள் விடுதலை புலிகளால் கொல்லப்பட்டதற்கு பணத்தை களவாடியவர்கள் உடந்தையாக இருந்தார்கள் என்பது உண்மையா
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி ஏற்பட்ட முதல் மாகாண அரசு தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன.
மாகாண அரசு விடுதலை புலிகளை யும், அவர்களதுஆதரவாளர்களையும், குடும்பங்களையும் அழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள் என்பது உண்மையா.
மகாண அரசு த்ரீ ஸ்டார் என்ற பெரும்படையை உருவாக்கி யாருக்கு எதிராக போரிட்டார்கள்.
விடுதலைப்புலிகள் மக்களை கேடயங்களாக பாவித்து இந்திய படையை தாக்கி பல இந்திய அமைதிப்படை வீரர்களை கொன்ற போது, இந்திய அமைதிப்படை திரும்ப திரும்ப தமிழ்பொது மக்களை தாக்கி கொன்றார்கள். இப்படியான சம்பவங்கள் பலஇடங்களில் நடந்து நூற்று க்கணக்கான தமிழ் பொதுமக்கள் இறந்துள்ளார்கள். இப்படி மக்களைக் பயன்படுத்தி தாக்குதல் நடக்கும் பொது தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்பது விடுதலை புலிகளுக்கு தெரிந்திருந்தும் ஏன் அப்படி செய்தார்கள்.
இப்படி இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்று பொதுமக்களை கொல்லும் போது, வடகிழக்கு மாகாண சபை ஏன் தங்களுக்கு இருந்த இந்திய நட்பை வைத்து இதை தடுக்க முயற்சி செய்யவில்லை.
மகாண அரசில் இருந்த விடுதலை இயக்கங்கள் இந்திய படைகளையும் கூட்டிக்கொண்டு, போய், விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் விடுதலைப் புலிகளைதவிர, அப்பாவி பொதுமக்களை கொலை செய்து, நகை போன்ற பெருருமதியான பொருட்களை கொள்ளையடித்து, பலபெண்களை கற்பழித்து, கொலை செய்துள்ளார்கள் என்பது உண்மையா.
வரதராஜன் பெருமாள் தலைமையிலான முதல் மாகாண அரசு அப்படியான கொலை கொள்ளை கற்பழிப்பு போன்றவற்றை தடுக்க என்ன முயற்சி எடுத்தன
மாகாண அரசு கடைசியில் தனி தமிழ் ஈழம்பிரகடனம் செய்துவிட்டு, முக்கிய தலைவர்கள் மட்டும் இந்திய அமைதிப்படை பாதுகாப்பு கொடுக்க இந்தியா வந்து சொகுசு வாழ்க்கை வாழ, தெரிந்தோ தெரியாமலோ மாகாண அரசை ஆதரித்த மக்களையும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட அமைத்த த்ரி ஸ்டார் இளைஞர்களை இலங்கை படையிடம், விடுதலை புலி படைகளிடம் கைவிட்டு தப்பி ஓடியது சரியா. அந்த அப்பாவிகள் நூற்றுக்கணக்கான அவர்கள் கொல்லப்பட்டது பாவமில்லையா.
அந்தப் பாவங்களை செய்த அவர்கள் இன்று இலங்கையில் சுதந்திரமாக மிகவும் வசதியாக அரசியல் செய்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் பதில்.
சிறந்த அறிவாளி, கொள்கை பிடிப்புள்ள தலைவர் என்று கூறப்பட்ட உமா மகேஸ்வர ன் எப்படி தமிழர்களுக்கு எதிரியாக இருந்த இலங்கை பாதுகாப்பு மந்திரி லலித் அதுலத்முதலியோடு கூட்டு சேர்ந்து செயல்பட்டார்.
கடைசியில் இலங்கை சிங்கள அரசு சிங்களப் படைகள் இடமிருந்து தமிழர்களை காப்பாற்ற உரிமைகளை பெற என்று புறப்பட்ட இயக்கங்கள் விடுதலைப் புலிகள் உட்பட ஒவ்வொரு காலகட்டங்களில் இலங்கை ராணுவத்துடன் இலங்கை அரசுடன் சேர்ந்து இருந்து, தமிழ் மக்களையும் தமிழ் இளைஞர்களையும்கொன்றார்கள். இதற்கு என்ன விளக்கம்.
இப்படி அப்படி ஒரு கட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இருந்தவர்கள், இன்றும் அரசியல்வாதி வேடம்போட்டு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோடு இன்று தமிழ் மக்களை அவர்கள் உரிமைகளை காப்பாற்ற போவதாக கூறி வலம் வருகிறார்கள், அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லையா.
கடைசியாக இவ்வளவு அனுபவம் பெற்ற தமிழ் மக்கள் திரும்பத் திரும்ப இவர்களை ஆதரிக்க என்ன காரணம். இலங்கை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எப்போது தங்களுக்கு ஒரு நல்ல தலைவனை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
இப்படி இளம் நண்பர்கள் கேட்ட கேள்விகள் சிந்திக்க வேண்டியவை. எனது முகநூலில் இருக்கும் அறிவு ஜீவிகள், இதைப் பற்றிய உண்மைகளை நல்ல கருத்துகளை கூறினால் வருங்கால இளைஞர்கள் கடந்த கால நிகழ்ச்சிகளில் இருந்துதெளிவு பெறக்கூடிய வாய்ப்பு கிட்டும்
No comments:
Post a Comment