1970 ஆம் ஆண்டுகளில் இருந்து வெளிநாடுகளில் வசித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் இன்ஜினியர்கள் மற்றும் பல படித்த மேலும் பல பெரிய வேலைகளில் பல நாடுகளில்இருந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் வருடக் கடைசி களில் தங்கள் பொழுதுபோக்குக்காக தமிழ்நாட்டுக்கு வந்து பாட்டுக் கச்சேரிகள், பல நாட்டிய கச்சேரிகள் எல்லாம் பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு பணத்தை வாரி இறைத்து விட்டு போய்விடுவார்கள்.
அவர்கள் இலங்கைக்கும் போய் அங்கு செல்வாக்காக இருக்கும் சிங்கள அரசியல் தலைவர்களுடன் நன்கு உறவாடி பெரிய பெரிய விருந்துகள் எல்லாம் வைத்து நட்பை வளர்த்துக் கொள்வார்கள். அதேநேரம் அப்போது செல்வாக்காக இருந்த தமிழரசு கட்சி பின்பு தமிழர் விடுதலை கூட்டணி அதன் தலைவர்களுடன் நெருக்கமாக உறவை வளர்த்துக் கொண்டு அவர்களுக்கும் அவர்கள் கட்சிக்கும் வேண்டிய பண உதவிகள் மற்றும் பல வெளிநாட்டு பயண உதவிகள் செய்து கொடுத்து இவர்குலராக நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டு போய் தங்கள் தங்கள் நாடுகளில் அங்குள்ள தமிழர்களிடம் தங்கள் செல்வாக்கே காட்டி பெருமை பட்டுக் கொள்வார்கள்.
இதில் முக்கியமானவார் டாக்டர் பஞ்சாட்சரம் மற்ற பெயர்கள் இப்போது ஞாபகத்தில் இல்லை. இவர்கள் வருடா வருடம் அமெரிக்கா லண்டன் மற்றும் பிற நாடுகளில் ஈழத் தமிழர் விடுதலை மாநாடு என்று போட்டு படம் காட்டுவார்கள். அதற்கு தமிழர் தலைவர்களையும் குறிப்பாக தமிழர் கட்சி தலைவர்களையும் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்து தங்களுக்கு வேண்டிய தங்களுக்கு சேவகம் செய்யக்கூடிய தமிழ் தலைவர்களையும் அழைத்து மாநாட்டில் கலந்து கொள்ள செய்து அவர்களே மிக நன்றாக உபசரித்து அனுப்புவார்கள். அவர்களும் தங்கள் நாட்டுக்கு திரும்பி வந்து அவர்கள் புகழ் பாடுவார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் தங்கள் செல்வாக்கு பெற தலைவர்களை சந்திக்க பயன்படுத்தும் ஒரே ஆள் இரா ஜனார்த்தன். இரா ஜனார்த்தனன் அவர்கள் கொடுக்கும் காசுக்காகவும் வெளிநாட்டு பயணத்திற்காகவும் அவர்களுக்கு அடிமை போல் வேலை செய்தார். 1983 ஆம் ஆண்டு இந்தியாவில் இயக்கங்கள் வளர வளர இந்திய அரசு உதவிகளும் இயக்கங்களுக்கு கிடைக்க இந்த வெளிநாட்டு வாழ் தமிழர்களின் பார்வை இந்தியாவில் இயக்கங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இயக்கத் தலைவர்களை தங்கள் சொற்படி கேட்க செய்யலாம் என நினைத்து தமிழ்நாட்டுக்கு வந்து இறங்கினார்கள்.
தமிழ்நாட்டின் பெரிய பெரிய ஹோட்டலில் தங்கி இருந்து கொண்டு தமிழ் விடுதலை இயக்க தலைவர்களை சந்திப்பதற்கு அழைப்பு கொடுத்திருந்தார்கள்.
மற்ற இயக்கங்களில் யார் யார் போய் சந்தித்தார்கள் என்று தெரியாது. எங்கள் இயக்கத்தின் புளொட் செயல் அதிபர் உமா மகேஸ்வரன் இவர்களின் செயல்பாடுகள் தெரிந்தபடியால் அவர்களை சந்திக்க விரும்பவில்லை. ஆனால் அவர்களே பேச்சில் சமாளிக்கக்கூடிய எமது அரசியல் செயலர் சந்ததியாரை போய் சந்திக்க சொன்னார். சந்ததியர் விரும்பாவிட்டாலும் இவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறி, சென்னையின் புகழ்பெற்ற கன்னிமாரா ஹோட்டலில் தங்கி இருந்தவர்களை போய் சந்தித்துள்ளார்.
அவர்களும் விடுதலைப் போராட்டம் தமிழ் ஈழம் போராட்டம் பற்றிய விபரங்கள் போராளிகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் எல்லாம் கேட்டுவிட்டு உங்கள் இயக்கத்துக்கு நாங்கள் கட்டாயம் உதவி செய்வோம் என்று கூறி தெரியாத்தனமாக சந்ததி யாரிடம் முட்டாள் தனமானகதைகளும் கதைத்து வாங்கி கட்டிக் கொண்டார்கள்.
அவர்கள் சந்ததி யாரிடம் தங்களால் எம்ஜிஆர் இடம் மற்றும் இந்திய மத்திய அரசிடம் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாகவும் இந்திரா காந்தி அம்மையாரிடம் சொல்லி உங்களுக்கு தேவையான உதவிகளை செய்யச் சொல்கிறோம் என்று கூறியதை கேட்டு கோபப்பட்ட சந்ததியர் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டார். சந்ததியர் விடைபெறும்போது இயக்க வளர்ச்சிக்காக என்று வெறும்இந்திய ரூபாய் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்கள். கொடுத்தது மட்டுமல்ல இன்னும் கொடுக்க ஆசை தான் தங்களுக்கென்று சொல்லிவிட்டு தங்கள் ஓட்டல் ஒரு நாள் வாடகையே 5000 ரூபாய் முடிகிறது என்று சொல்லி கவலைப்பட்டு உள்ளார்கள். உடனடியாக சந்ததியர் ,அவர்கள் கொடுத்த ஆயிரம் ரூபாய் திரும்பகொடுத்து உங்கள் செலவுக்கு தேவைப்படும் வைத்திருங்கள் என்று கூறி விட்டாராம்? அவர்களும் அதை வாங்கி இருக்கிறார்கள் தாங்கள் தங்கள் நாட்டுக்கு போய் பணம் அனுப்புவதாக கூறியுள்ளார்கள்.
இந்தக் கதை எல்லாம் சந்ததியர் எங்களிடம் வந்து கூற, உமா மாமேஸ்வரன் இதை கேட்டு சிரித்து விட்டு வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தங்கள் செல்வாக்கை காட்ட இப்படியான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார்.
பின்பு எல்லா விடுதலை இயக்கத் தலைவர்களும் தங்கள் இயக்கத்தின் கொள்கைகளை பரப்ப என்றும் தங்களுக்கு ஆங்கில மொழியில் உதவி செய்ய வேண்டும் வெளிநாட்டு ஆங்கிலம் தெரிந்த தமிழர்களை அழைத்து வைத்துக் கொண்டார்கள். இதில் முக்கியம் ஆங்கிலம் தெரிந்தவர்கள் என்று கூறி இருக்கிறேன் தவிர அவர்கள் நன்றாக மிகப் படித்தவர்கள் என்று கூறவில்லை. பாலசிங்கம் மட்டும் படித்தவர் என நினைக்கிறேன்.
எங்கள் புளொட் இயக்கத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் சித்தார்த்தனும், லண்டன் கிருஷ்ணனும் மிக முக்கியமானவர்கள் அது போல் இலங்கையிலிருந்து வந்த லலித் அதுலத்முதிலியின் ஆள் செவிலி கந்தப்பாவும் கூட. சந்ததியார் பலமுறை இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் இவர்கள் இயக்கத்துக்கு நன்மை செய்ய மாட்டார்கள், என்று பலமுறை கூறி சண்டை பிடித்துள்ளார். ஆனால் சந்ததியர் கூறியபடியே நடந்தது. இவர்களால் உமாவும் கடைசியில் பார்த்தால் பதவிக்காக கொலை செய்யப்பட்டார்.
அதுபோல் இப்போது வெளிநாடுகளில் இருந்து அறிவு ஜீவிகள் என்று கூறிக்கொண்டு படித்த மேதாவிகள் பலர் தமிழர் பிரச்சினையை தீர்ப்பதாக கூறிக்கொண்டு தங்களை பிரபலியப் படுத்திக் கொண்டு ஹிமாலயா ஒப்பந்தம் சிங்கள அரசியல் தலைவர்களுடன் சந்திப்பு பௌத்த குருமார்களுடன் சந்திப்பு என்று படம் காட்டி வருகிறார்கள். இவர்களே சிங்களத் தலைவர்களும் ராஜதந்திரமாக அழைத்துப் பேசுகிறார்கள் பிரச்சனையை தீர்ப்பதாக கூறுகிறார்கள். பொது இவர்களும் இலங்கையில் தமிழருக்கு பிரச்சனைகள் இருப்பதாக நினைப்பதாக தெரியவில்லை. அதோடு இன்று வடக்கு கிழக்கு மலையங்கங்கள் மற்றும் இலங்கை பூராவும் வாழும் தமிழர்களை பற்றி யோசிக்காமல் அவர்களின் கருத்தை அறியாமல் தங்கள் தான் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க வந்த தலைவர்கள் போல் பேட்டிகள் கொடுப்பதாக தெரிகிறது உண்மை , பொய் தெரியவில்லை. இனிமேல் இலங்கை அரசாங்கம் யுத்த குற்றங்கள் பற்றி கவலைப்படாது காரணம் இவர்களே யுத்த குற்றம் ஒன்றுமில்லை என்று கூறி விடுவார்கள்.
சரித்திரம் திரும்புகிறது வெளிநாட்டுத் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தாங்கள் தான் வழிகாட்டி இல்லை தலைவர்கள் என்று கூறி சிங்கள தலைவர்களுடன் நட்பு பாராட்டி இலங்கை அப்பாவி தமிழர்களை விற்று விடுவார்கள். சந்ததியார் அன்று கூறியது தீர்க்கதரிசனமாக இன்று தெரிகிறது.
No comments:
Post a Comment