This is a copy and paste from other group
Saturday, 6 January 2024
Home » » இலங்கை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். இது ஒரு பழைய பதிவு
இலங்கை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். இது ஒரு பழைய பதிவு
வெற்றிசெல்வன் Saturday, 6 January 2024
படித்ததில் இரசித்தது:=
இம்முறை தேர்தலில் வாக்களிக்க முன்னர்......
நன்றி - திரு.நல்லையா சிவதாஸ், வேதநாயகம் தபேந்திரன்
தேர்தல் சம்மந்தமாக, யாருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்ற எனது கருத்து என்ன என்பதை சொல்வதற்கு முன்பதாக பின்வரும் சில கசப்பான உண்மைகளை சொல்லலாம் என நினைகின்றேன்.
1) தமிழீழம் என்பது தமிழர்களை பொறுத்தவரை காலாவதியாகிப்போன ஒரு கனவு.
2) சர்வதேசம் தமிழர்களுக்கான எந்த ஒரு தீர்வையும் பெற்று தரப்போவதில்லை.
3) சமஸ்டி தீர்வு, வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமை,ஒருநாடு இருதேசம் என்ற எந்த ஒரு தீர்வுக்கும் எந்த ஒரு தென்னிலங்கை அரசாங்கமும், ஒருபோதும் ஒத்துகொள்ள போவதில்லை. தமிழர்களை பொறுத்தவரை அவர்கள் இவற்றை ஒருபோதும் அடையப்போவதுமில்லை.
4) மாகாண சபைக்கு ஒருசில அதிகாரங்களை பெறுவதைவிட தமிழர்கள் எதையும் சர்வதேசத்திடம் இருந்தும் தென்னிலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் பெறப்போவதில்லை. (கிடைத்தாலும் பயன்படுத்த மாட்டோம்)
5) போர்க்குற்ற விசாரணைகள் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எந்த ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
6) சர்வதேசம் ஒருபோதும் இலங்கை அரசாங்கத்தை குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்போவதில்லை
7) காணாமல்போனவர்கள் பிரச்சினைக்கு எந்த முடிவும் கிடைக்கப்போவதில்லை.
தமிழ் தேசியத்தையும் ஆயுத போராட்டத்தையும் ஆதரித்த எமக்கு இந்த கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்வதென்பது முடியாததாகும். ஏதாவது அதிசயங்கள் நிகழ்ந்தாலே ஒழிய மேலே சொன்னவற்றில் எந்த மாற்றங்களும் நிகழாது என்ற நடைமுறை உண்மையை நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
மேலே சொன்ன இந்த கசப்பான உண்மைகளை பெற்றுத்தருவோம் என எந்த கட்சி முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்கின்றதோ அது மக்களை ஏமாற்றுகின்றது என்றே அர்த்தம்.
மக்களின் உணர்வுகளைத்தூண்டி இன்பம் அனுபவிக்க நினைக்கும் கட்சிகள் எல்லம் வீதியோர விபச்சாரிகள் தான். பதவியைப்பெற்று சொத்துகளைப் பெருக்குவதே இந்த அரசியலுக்கு பின்னால் உள்ளது. இதைத்தவிர எதையும் தமிழ் கட்சிகளால் பெற முடியாது. இவற்றையும் மீறி தமிழர்களுக்கு அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தருவோம் எனக்கூறி அப்பாவி மக்களின் உணர்வுகளைதூண்டி அரசியல் லாபம் தேட நினைப்பது போரினால் பாதிக்கப்பட்டு நூறாண்டுகளுக்கு எழவே முடியாத படிக்கு வீழ்ந்து கிடக்கும் சொந்தங்ககளை மீண்டும் மீண்டும் சின்னாபின்னமாக்கி சீரழிக்கும் முயற்சியாகும். இது துரோகமாகும்.
இந்த தேர்தலில் வாக்களிக்க முன் உங்கள் பிரதேச அபிவிருத்தியை சிந்தியுங்கள்..
உங்கள் வட்டாரத்தில் அபிவிருத்தி செய்யக்கூடியவரை தெரிவுசெய்யுங்கள்.
நன்றி
Thanks for reading இலங்கை தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம். இது ஒரு பழைய பதிவு
Previous
« Prev Post
« Prev Post
Next
Next Post »
Next Post »
No comments:
Post a Comment