இன்று முகநூலை திறந்து பார்த்தால் ஈழத் தமிழர் அழிவுக்கு காரணமானவர்கள் என்று மஹிந்த ராஜபக்ஷ கலைஞர் கருணாநிதி ராஜீவ் காந்தி அதைத் தொடர்ந்து இன்று ஸ்டாலின் ராகுல் காந்தி வரிசைப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் எங்கள் அழிவுக்கு மூல காரணம் நாங்களே அதாவது தமிழ் விடுதலை இயக்கங்களே என்று யாரும் உண்மையை உணர முயற்சிக்கவில்லை உண்மை தெரிந்தாலும் அதை மறந்து விட்டு மற்றவர்கள் மேல் குற்றம் சாட்டி விட்டு நாங்கள் உத்தமர் போல் நடிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் துரோகிகள் என்று கூறி மாற்றுக் கருத்துள்ள தலைவர்களை கொன்றோம். மக்கள் ஆதரித்தார்கள். பின்பு இயக்கங்களில் இருந்த திறமையானவர்களே போட்டிக்கு வந்து விடுவார்கள் என்று கொலை செய்தோம். அதையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
சுழிபுரம் எங்கள் கோட்டை என்று புளொட் இயக்கம் உமா மகேஸ்வரன் இலங்கை வந்திருக்கும்போது ஆறு சிறுவர்களை சித்திரவதை செய்து கொலை செய்து புதைத்தார்கள். மக்கள் தட்டிக் கேட்கவில்லை.
விடுதலைப்புலிகள் சிறு சிறு விடுதலை இயக்கங்களின் தலைவர்களை சுட்டுக்கொலை செய்தார்கள் மக்கள் கேட்கவில்லை.
புளொட் இயக்கம் விடுதலைப் போராட்டத்திற்கு பயிற்சி எடுக்க வந்த அப்பாவி தமிழ் இளைஞர்களை சந்தேகக் கண் கண்டு பார்த்து அறுபதுக்கு மேற்பட்ட இளைஞர்களை கொலை செய்து தமிழ்நாட்டு முகாம்களில் புதைத்தார்கள். மக்கள் போராடவில்லை.
எல்லா இயக்கங்களும் வசதி கிடைக்கும் போது ஆங்காங்கே மற்ற இயக்க தமிழ் இளைஞர்களை கொலை செய்தார்கள் தமிழ் மக்கள் கேட்கவில்லை.
அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எம் ஜி ராமச்சந்திரன் telo இயக்கத்தின் மேல் இருந்த தனிப்பட்ட கோபம் காரணமாக telo இயக்கத்தை அழிக்க புளொட் இயக்கத்தை பயன்படுத்த நினைத்தார் ஆனால் உமா மகேஸ்வரன் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பிரபாகரன் ஏற்றுக் கொண்டு, telo இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை உயிருடன் எரித்து கொன்றார்கள் கொலை செய்தார்கள். மக்கள் போராடவில்லை. இதற்காக எம்ஜிஆர் கோடிக்கணக்கான பணமும் பல உதவிகளும் செய்தார். அதை தொடர்ந்து களத்தில் நின்று சிங்களர் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து போராடிய மற்ற இயக்கங்களையும் தாங்கள் மட்டுமே ஒரே பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மற்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன. களத்தில் நின்ற பல மற்ற இயக்க தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களும் அதையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
சிங்கள ராணுவம் செய்ய வேண்டிய வேலையை, பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் செயல்பட்டு தமிழர்களின் ஆட்பலத்தையும் தாக்குதல் திறனையும் குறைத்தார்கள்.. பல இயக்கங்கள் இருந்த காலத்தில் முகாம்களில் இருந்த சிங்கள ராணுவம் வெளியில் வர முடியாத படி ஒவ்வொரு இயக்கமும் தங்கள் தங்கள் தாக்குதல்களை நடத்தி சிங்கள ராணுவத்தை முடக்கி வைத்திருந்தார்கள். இது எல்லோருக்கும் தெரியும்.
மற்ற இயக்கங்கள் எல்லோரும் தடை செய்து அழிக்கப்பட்ட பின், சிங்கள ராணுவம் முகாம்களை விட்டு முன்னேறி வந்து விடுதலைப்புலி இய க்கத்தை தாக்கத் தொடங்கினார்கள். தாக்குதல் பெயர் ஆபரேஷன் லிப்ரேஷன் சிங்கள ராணுவம் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் இந்திய அரசாங்கத்தின் கதவுகளை தட்ட தொடங்கினார். டெல்லிக்கும் தமிழ் நாட்டுக்கும் பறந்து சென்றார். இந்திய அதிகாரிகளை டெல்லியின் முக்கிய சீனியர் பத்திரிகை ஆசிரியர்களே சந்தித்து, யாழ்ப்பாணம் சிங்கள ராணுவத்தில் கைகளில் விழுந்து விட்டால் இந்தியா ஒரு காலமும் இலங்கையில் தலையிட வாய்ப்பு கிடைக்காது என்று உண்மையைக் கூறி இந்தியா தலையிட வற்புறுத்தினார். அந்த நேரம் போபோஸ் பீரங்கி சர்ச்சையில் சிக்கி ராஜீவ் காந்தியின் பெயர் சிக்கலில் இருந்த நேரம். தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள இலங்கைப் பிரச்சனையை திட்டமிடப்படாத முறையில் அவசர கோலமாக இந்திய அரசு கையாள தொடங்கியதற்கு பாலசிங்கத்தின் ராஜதந்திர நகர்வு ஒரு காரணம். இது பற்றி யாரும் வாய் திறக்கவில்லை. ஆப்ரேஷன் பூமாலை, அடுத்து இந்தியா அமைதிப்படை என்று சம்பவங்கள் நடந்தேறிய து.
புளொட் உமா மகேஸ்வரன் ஒரு பக்கம் இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதிரத் முதலியுடன் கூட்டு சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக, ஈழத் தமிழர் போராட்டத்திற்கு எதிராக விளையாடத் தொடங்கினர்.
மறுபக்கம் தாங்கள் மட்டும்தான் தமிழர் பிரதிநிதிகள் என இந்திய அரசாங்கத்திடம் வற்புறுத்தி வாக்குறுதிகளும் மாதாமாதம் லட்சக்கணக்கான பணமும் பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்த விடுதலைப்புலிகள் நிலைமைகள் தங்களுக்கு சாதகமாக வராததால் இந்தியாவை எதிர்த்து வந்த இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா ஓடு கூட்டு சேர்ந்த விடுதலைபுலிகள் நாங்கள் அண்ணன் தம்பிகள் என்று பகிரங்கமாக கூறி இந்தியாவை எதிர்த்தன. அதோடு பிரேமதாசாவின் பச்சைப்புலிகள் படையில் சேர்ந்து ஜேவிபி என்று கூறி ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களை கொலை செய்ததையும் மறக்க முடியாது. அப்படி கொலை செய்யப்பட்ட சிங்கள இளைஞர்களின் மக்களின் உறவினர் தான் பின்னாளில் இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்தனர். இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை
அதே நேரம் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தின் பின் ஏற்பட்ட வரதராஜ பெருமாளின் தலைமையில் இருந்த மகான அரசு போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே காப்பாற்றுவதே விட இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்து முடிந்தளவு விடுதலைப்புலி இளைஞர்களையும் அவர்களது ஆதரவாளரையும் கொன்றுளித்து பழி வாங்குவதில் மட்டுமே ஈடுபட்டார்கள். முக்கிய தலைவர்கள் திருகோணமலை அமைதிப்படை பாதுகாப்பு என்று கூறி அவர்களது முகாம்களில் முழு நேர குடிகாரர்களாக இருந்ததை மறந்து விட முடியாது.
அதோடு அமைதிப்படை வீரர்களை அழைத்துக் கொண்டு போய் அவர்களோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்களையும் கொலை செய்ததையும் மறந்து விடக்கூடாது. மகான அரசு அதிலிருந்து இயக்கங்களின் தலைவர்கள் நினைத்திருந்தால் இந்திய அமைதிப்படை தமிழர்கள் மேல் நடத்திய தாக்குதலை அரசியல் ரீதியாக தடுத்திருக்க முடியும். இதைப் பற்றி இன்று யாரும் பேசுவதில்லை .
தன் தலையில் மண்ணள்ளி போட்ட கதையாக விடுதலைப் புலிகள் மஹிந்த ராஜபக்சே சகோதரர்களே இடம் பெருமளவு பணம் வாங்கிக்கொண்டு மஹிந்தா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற உதவி செய்ததை மக்கள் இலகுவாக மறந்து விட்டார்கள்.
உலக நாடுகள் கண்காணிப்பில் நோர்வே ஏற்பாடு செய்த அமைதிப் பேச்சு வார்த்தையில் ஒரு விடுதலை இயக்கம் ராஜதந்திரமாக செயல்பட்டு ஓரளவு சரி மக்களை பாதுகாக்க முற்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு உலக நாடும் ஆதரவில்லாத போது மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.
முடிவு என்ன முள்ளிவாய்க்காலில் இனத்தின் போராட்டமே அழிந்துவிட்டது. அதை இன்று பெருமையாக 22 நாடுகள் சேர்ந்து அழித்தன பெருமையாக வேறு பேசிக் கொள்கிறார்கள்.
அன்று விடுதலை இயக்கங்கள் எல்லாம் ஆயுதம் வாங்க பணம் இயக்க நடத்த பணம் என்று கூறி கோடிக்கணக்கான போதைப்பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தி வெளிநாட்டு அப்பாவி இளைஞர்களையும் பெண்களையும் போதைப் பொருளுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதித்தனர். வெளிநாட்டு மக்கள் இளைஞர்கள் பெண்கள் சீரழிந்து சமூக விரோத செயலிழையில் ஈடுபட்டு சமூகத்துக்கு உதவாமல் போனதை பற்றி இந்த விடுதலை இயக்கத்தில் அவர்கள் யாரும் கவலைப்படவில்லை. ஆனால் அவர்களது பேச்சு எழுத்தில் சமூகத்தைப் பற்றிய ஒரு சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று போலியாக வெளியிடப்பட்ட அவர்களது கருத்துக்கள் இன்றும் அவர்களை உத்தமர்களாக காட்ட பரப்பப்படுகிறது. தமிழ் விடுதலை இயக்கங்களில் போதைப்பொருள் கடத்தாத இயக்கம் ஒன்றுமில்லை. விடுதலைப் புலிகளுக்காக மிகப் பெரும் அளவில் பம்பாயில் இருந்து கண்டெய்னர்களில் போதை பொருள் கடத்திய கே பி பத்மநாபா இன்று செஞ்சோலை காப்பாளர்.
நாங்கள் விடுதலை இயக்கங்கள் செய்த பாவங்கள் எல்லாம் இன்று எமது தமிழ் மக்களை திருப்பி அடிக்கின்றன. இன்று எமது தமிழ் இளைஞர்களின் தமிழ் பெண்கள் சகலவிதமான போதைப் பொருளுக்கும் அடிமைப்பட்டு இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதேநேரம் பல அரசியல்வாதிகள் முகநூல் போராளிகள் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை அழிப்பதற்காக போதைப் பொருட்களை விநியோகம் செய்வதாக எழுதுகிறார்கள் கண்டிக்கிறார்கள். அதே நேரம் தமிழ அரசியல்வாதிகளும் இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தி தமிழ் மக்களிடம் விற்பனை செய்வதை கண்டிக்கவில்லை. இது எல்லாம் அன்று நாங்கள் செய்த பாவங்கள் இன்று திருப்பி அடிக்கின்றன. யாரையும் குற்றம் சொல்லி குறை கூறி பயனில்லை.
கடந்த கால சம்பவங்களுக்கு மனப்பூர்வமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டு நாங்கள் திருந்த வேண்டும்
No comments:
Post a Comment