ஜூலை மாதம் வருகிறது . 83 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களின் வாழ்வையே புரட்டிப் போட்ட ஆண்டும் மாதமும் ஆகும். யாழ்ப்பாணத்தில் சில சிங்கள ராணுவத்தினரை விடுதலை புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்தி கொலை செய்ததால், இதற்கு பதிலடியாக தென்னிலங்கையில் தமிழர்கள் தாக்கப்பட்டதுடன் வெளிக்கடை சிறையில் இருந்த பல போராளிகள் அரசு உதவியுடன் படுகொலை செய்யப்பட்டனர். முழு உலகமும் இலங்கை அரசை கண்டித்தன. இன்றும் கூட இதைப் பற்றி நினைவு கூறுபவர்கள் சிங்கள அரசின் கொலைகார தன்மையை மன்னிக்க மறக்க தயாராக இல்லை.
இப்படி சிங்கள அரசாங்கம் செய்த படுகொலைக்கு ஒப்பான ஒரு செயல் யாழ்ப்பாணத்திலும் நடந்துள்ளது. விடுதலை புலிகளின் தலைவர்களின் ஒருவரான கிட்டுவின் மீது நடந்த கொலை முயற்சியில் அவரின் கால் மட்டும் துண்டிக்கப்பட்டது. இது அப்போதும் சரி என்றும் சரி உள்வீட்டு பிரச்சினை தான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை மறைக்க விடுதலைப்புலி அருணா தாங்கள் கைது செய்து வைத்திருந்த மற்ற இயக்கத்தவர்கள் பொதுமக்கள் 63 பேருக்கு மேல் விடுதலை புலிகளின் சிறையில் வைத்து துடிக்க துடிக்க கொலை செய்யப்பட்டார்கள். இதற்கும் வெளிக்கடை படுகொலைக்கும் என்ன வித்தியாசம்.
இதைப் பற்றி பேசினாலே விடுதலைப்புலிகள் துரோகிகளை தான் கொன்றார்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு வருவார்கள். இதே சிங்கள அரசு நாங்க சிங்கள அரசாங்கத்துக்கு துரோகிகளை தான் கொன்றோம் என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா.
இனிமேல் சரி கடந்த கால விடுதலை இயக்கங்கள் எல்லாம் சிங்கள அரசு தமிழர்களை தமிழினத்தை அழித்து வந்தது போல் தமிழ் இயக்கங்களும் தமிழர்களையே கொலை செய்து தமிழ் இன விடுதலைப் போராட்டம் நடத்தியதை புரிந்து கொள்ள வேண்டும்
No comments:
Post a Comment