பின்தள மாநாட்டுக்கு முன்பு பெரும்பான்மையான கழகத் தோழர்களால் , மத்திய குழு உறுப்பினர்களால் தோழர் ராஜன் ஆல்முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.
செயல் குழுவிற்கு தெரியாமல் அச்சகம் ஒன்றுக்கு பங்கு பணம் போட்டது
செயல் குழுவிற்கு தெரியாமல் தமிழக அரசியல் பிரமுகர் ஒருவரை கழக பணத்தில் பிறநாட்டு அனுப்பியது
செயல் குழுவுக்கு தெரியாமல் தனிநபர் பெயரில் சுவிஸ் வங்கியில் பணம் போட்டது
செயல் குழுவுக்கு தெரியாமல் பஸ் கம்பெனி ஒன்றுக்கு முதலீடு செய்தது
செயல் குழுவுக்கு தெரியாமல் தனது தம்பியின் பெயரில் பிரான்ஸ் வங்கியில் கணக்கு வைத்தது
செயல் குழுவுக்கு தெரியாமல் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்த பெண்களையும் இந்தியப் பெண்களையும் போதைவஸ்து கடத்துவதற்கு பயன்படுத்தியது
செயல் குழுவுக்கு தெரியாமல் கழக பணத்தில் எம்எல்ஏ ஊடாக எஸ்டேட் வாங்கியது
LTTE பாலசிங்கத்தின் வீட்டில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தோழர் அற்புதமும் தோழர் ஜெயபாலனும் தான் செய்தனர் என்று இந்திய போலீசாருக்கு பிழையான தகவல் கொடுத்த மையும் அவர்களை கைது செய்யும்படி போலீசாரை தூண்டியது
தோழர் நிரஞ்சனி விசாரணை செய்த விசாரணை கமிஷன் அவரைநிரபராதி என1984.06. 01 அன்று விடுதலை செய்த பின்னர் சொந்த காரணங்களுக்காக அவரை கொலை செய்த மையம்
செயல் குழுவுக்கு தெரியாமல் இளைஞனை கொலை செய்துவிட்டு அவர் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று சொல்லி மொத்த கழகத்தையும் ஏமாற்றியது
செயல் குழுவுக்கு தெரியாமல் தோழர் சந்ததியாரை கொலை செய்துவிட்டு அவர் சீன சார்பு என்றும் ,JR உடன்இந்திய அரசு ஏற்படுத்திய திம்புப் பேச்சு வார்த்தையை குழப்புகிறார் என்றும் ரமேஷ் பண்டாரி க்கு தகவல் கொடுத்ததும்
தோழர் சந்ததியாரை கொலை செய்துவிட்டு அவர் எமது ஆயுதங்களை காட்டிக் கொடுத்தார் என்றும் பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அதில் ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டார் என்று பத்திரிகைக்கு செய்தி கொடுத்ததும்
பின் தளத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் இருக்கக் கூடியதாக கப்பலில் வந்த கருவிகள் ஏற்பாட்டுக்கு தனது மைத்துனரை நியமித்து கையாள தெரியாமல் கருவிகளை அரசிடம் பறிகொடுத்தது
தென்னிலங்கை இடதுசாரி தோழர்களை ஜெயவர்தனா வுக்குகாட்டிக்கொடுத்தது
செயல் குழுவுக்கு தெரியாமல் ஜெயவர்த்தனாவின் தூதுவர் ஜெய கொடியை தாஜ் ஓட்டலில் சந்தித்ததும்
செயல் குழுவுக்கு தெரியாமல் இயக்கத் தோழர்களை பயன்படுத்தி நாம் அடைக்கலம் புகுந்திருக்கும் இந்த மண்ணில் கொள்ளையடிக்க உத்தரவு கொடுத்து கொள்ளை முயற்சி பிடிபட்டாலும் அவர்கள் இயக்கத்தை விட்டு ஓடியவர்கள் என்று அரசுக்கு காட்டிக்கொடுத்தது
கழகத்தின் பணம் இல்லை என்று கடற்கொள்ளை ஈடுபடும் படியும் கொள்ளையின் பின்பு பொருட்களின் சொந்தக்கார வை உயிருடன் விட வேண்டாம் என்று கரையில் பணிபுரிந்த தோழர்களுக்கு உத்தரவு கொடுத்ததும் இதனால் இலங்கைத் தமிழர் ,முஸ்லிம்களும் ,இந்திய மீனவர்களும் கொலைசெய்யப்பட்ட தினால் விடுதலை இயக்கங்கள் மீது இந்திய மக்கள் வெறுப்படையச் செய்தது மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் இயக்கங்களுக்கு களங்கம் உண்டாக்கியது
இலங்கை உளவாளி என இந்திய அரசினால் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டு இருக்கும் இலங்கை ரகசிய போலீஸ் அதிகாரி கந்தசாமி என்பவரை முன்பு இயக்கப் பணத்தில் இயக்க வேலை என்று சொல்லி லண்டனுக்கு அனுப்பியது
அழியாத கோலத்தை காணவில்லை என்றதும் அவரை ராஜன் தான் கொலை செய்து இருக்கலாம் என்று பொய்யான தகவல்களை கழகத்துக்கு கொடுத்தது
தமிழீழத்தை வென்றெடுக்கும் ஆவலுடன் எமது இயக்கத் தோழர்களின் பிரச்சாரத்தை நம்பி எமது மண்ணைவிட்டு வந்த சக போராளிகளில் 60 பேர் வரை அநாகரீகசித்திரவதைகள் மூலம் கொலை செய்து எரித்த கொடூர செயலை நீண்டகாலமாக இயக்கத்துக்கு மறைத்தது இவைகள் தெரியவரும் பட்சத்தில் முப்பத்தி எட்டு பேர்களின் பெயர்களை மட்டும் வெளியிட்டது
தளத்தில் தாக்குதல்மேற்கொள்வதற்காக மணமேல்குடியில் நாம் அமைத்த முகாமிற்கு தோழர்களை கைது செய்து காவலில் வைக்குமாறு எமக்குத் தெரியாமல் ஆயுதங்களுடன் ஆட்களே முகாமுக்கு அனுப்பியது
செயல் குழு உறுப்பினர்களை வெடி வைக்கவேண்டும் என்று சொன்னதோடு அல்லாமல் கை நீட்டிஅடித்து விட்டு கந்தசாமி இடம் கைது செய்யுமாறு உத்தரவிட்டதும் தகாத வார்த்தைகளினால் ஏசியதும்.
செயல் குழுவுக்கு தெரியாமல் வங்கிகளில் கைப்பற்றிய பணமும் மக்களிடம் இருந்து திரட்டிய பணமும் வெளிநாட்டில் கழக கிளைகளில் இருந்து சேகரித்த பணமும் எப்படி எங்கே செலவிடப்பட்டது என்றும் தெரியாத நிலையிலும் கூட சரியான முறையில் மாநாட்டினை நடத்தி ஜனநாயக பண்புகளை பேணக்கூடிய விடுதலை இயக்கமாக கட்டி எழுப்பலாம் என நம்புகிறோம்.
No comments:
Post a Comment