பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Friday, 14 March 2025

அண்மையில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றுச் சம்பவம்

  வெற்றிசெல்வன்       Friday, 14 March 2025

 கடந்த மாதம் எனக்கு ஏற்பட்ட ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம். 1986 ஆண்டுக்கு முன்பு பிளாட்  இயக்கத்தில் இருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த குட்டி சங்கர் என்பவர் இவர் இயக்கத்தின் அரசியல் செயலர் வாசுதேவாவின் சகோதரியின் மகன். இவர் 1984 ஆம் ஆண்டு டெல்லியில் எனக்கு வேலைகளில் உதவி செய்ய சென்னையில் இருந்து அனுப்பப்பட்ட்டார்.ரெண்டு மாதங்கள் டெல்லியில் எனக்கு உதவியாக வேலை செய்தவர். அதன் பின்பு அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இருக்கவில்லை.


 கடந்த மாதம் முகநூலில் சிவராணி என்ற பெயரில் நட்பு பெற்றிருந்தார். லண்டனில் வசிப்பதாக இருந்தது. இரண்டொரு நாளில் உள்பெட்டி மூலம் வந்து தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போதுதான் கொழும்பில் நிற்பதாகவும் தன்னை ஜனாதிபதி அனுரா குமர அழைப்பின் பேரில் தான் வந்துள்ளதாகவும் கூறினார். இவர் கூறிய பல கதைகளை  நம்ப முடியாதாதாகா இருந்தது. தான் தமிழர் விடுதலைக் கூட்டணி இயக்கத்தை தனது பொறுப்பில் எடுத்து நடத்தப் போவதாகவும், அண்மையில் நான் போட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றிய பதிவை பார்த்ததாகவும், அதனால் என்னைப் போன்ற பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றி தெரிந்த நண்பர்களையும் சேர்த்து தனக்கு உதவி செய்யும்படி கூறினார். அதோடு தமிழர் விடுதலை கூட்டணியே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர  NPP கட்சியும் மஹிந்த ராஜபக்ஷாவும் கோடிக்கணக்கான பணத்தை செலவிட தயாராக இருப்பதாகவும் கூறினார். தனக்கு நீண்ட காலமாக சிங்களத்தில் அவர்களின் நட்பு உள்ளதாகவும் கூறினார்.

 தான் முக்கியமாக என்னை தொடர்பு கொண்டதற்கு காரணம் நான் உடல் நலமில்லாமல் இருப்பதாக கேள்விப்பட்டதாகவும் முன்னால் இயக்கத் தோழர்கள் மருத்துவ உதவிகளுக்கு கஷ்டப்படக் கூடாது என்றும் தான் பல முன்னால் இயக்கத் தோழர்களுக்கு பல லட்சங்கள் உதவி செய்துள்ளதாகவும் அது தனது கடமை என்றும் கூறி, தனது மனைவியும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும், இருவரும் எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று  முடிவு செய்துள்ளதால் எனது வங்கிக் கணக்கையும் விலாசத்தையும் கேட்டார். நான் வங்கி கணக்கு விபரங்கள் மட்டும் கொடுத்தேன்.

 உடனடியாக லண்டனில் இருந்து தனது மனைவி நானூறு பவுன்ஸ் எனது வங்கிக் கணக்கில் போட்டுள்ளதாக கூறினார். ஒரு வாரமாக அந்தப் பணம் வரவில்லை. ஆனால் அவர் தினசரி இன்னும் வரவில்லையா இன்னும் வரவில்லையா என்று கேட்பார். பின்பு 500 பவுன்ஸ் வெஸ்டர்ன் யூனியன் மூலம் அனுப்பி விட்டதாகவும் 50000 இந்திய பணம் கிடைக்கும் என்றும் பணம் அனுப்பிய ரசீது அனுப்புகிறேன் என்று பல நாள் உள் பெட்டியில்  வந்து கூறுவர்.


 சில நாட்களில் பின் என்னோடு தொடர்பு கொள்வதை விட்டுவிட்டார். அவர் ஆன்லைனில் இருக்கும் போது நான் தொடர்பு கொண்டால் கட் பண்ணி விடுவார். கடந்த வாரம் அவர் இருக்கும் போது நான் தொடர்பு கொண்ட போது சிரிக்கிறார்.

 நான் பணம் அனுப்புவேன் என்று நீங்கள் நம்பி விட்டீர்களா என்று. இவரை போன்றவர்கள்  பல முன்னாள் போராளிகளின் வறுமையில் ஆசை காட்டி ஏமாற்றுவதாக வந்த செய்திகளை பார்த்திருக்கிறேன். கடைசியில் நானே இவரின் ஏமாற்று வேலையில் சிக்கிக் கொண்டு இருந்ததை நினைத்து சிரிப்பு தான் வருகிறது.

            இவர் நான் எனது இயக்க அனுபவங்களை பதிவுகளாக போட்டது பார்க்கவில்லை. எனக்கு பழைய இயக்க கதைகளை உண்மை போல் கூறினார். டேவிட் ஐயாவை காரில் கடத்தியது அரசியல் செயலர் வாசுதேவா என்றும் அப்போது தானும் கூட இருந்ததாகவும், கோயம்பேடு அருகில் டேவிட் ஐயாவே காரில் இருந்து உதைத்து தள்ளி விட்டது வாசுதேவா என்றும் கூறினார். அதோடு வாசுதேவாகுக்கு வடபழனி அலுவலக வாடகைக்கு விட்ட உரிமையாளர் மனைவி மூலம் ஒருபெண் குழந்தை இருப்பதாக கூறினார்.

1986 இயக்கத்தில் இருந்த பெண் தோழரே திருமணம் செய்து இயக்கதை விட்டு ஓடியவர் கூறுகிறார்1988 ஆம் ஆண்டு தானும், உமா மகேஸ்வரனும் மாலத்தீவு போய் மாலை தீவை கைப்பற்ற திட்டங்கள் போட்டு வந்ததாகவும் கூறினார். உமா மகேஸ்வரன் மாலைத்தீவு  போகவில்லை என்பதுதான் உண்மை. திரும்பவும் ஒரு பொருந்தாத கதையை கூறினார். தான் 1989 ஆம் ஆண்டு வரை இயக்க வடபழனி அலுவலகத்தில் வேலை செய்ததாகவும் கூறினார். 1988 ஆண்டு ஆண்டு நடுப்பகுதியில் இருந்து 1990 ஆரம்பம் வரை சென்னை அலுவலக இடத்தில் பொறுப்பாக இருந்தது நான் தான். அவருக்கு தெரியவில்லை . டெல்லி அலுவலகம் எல்லாம் நான் இங்கு வரும்போது மூடி விட்டதை. நான் நான்தான் பொறுப்பு என்று கூறவும் என்னை சோதித்துப் பார்த்ததாக கூறி சிரித்தார்.

 இவர் யார் யாருக்கெல்லாம் இப்படி பொய்யான கதைகளை கூறி ஏமாற்றி திரிந்தார் என தெரியவில்லை. லண்டனில் தான் பெரிய ஒரு கம்பெனி வைத்து நடத்துவதாக கூறினார். இவரின் கதையை பார்க்கும் போது இவரும் இவரின் மனைவியும் சேர்ந்து பலரை ஏமாற்றி இருப்பார்கள் என்று தெரிகிறது.

 இதை வாசிப்பவர்கள் இவரிடம் கவனமாக இருங்கள்.





 

logoblog

Thanks for reading அண்மையில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றுச் சம்பவம்

Previous
« Prev Post

No comments:

Post a Comment