பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Sunday, 3 November 2024

29/06/21 தேசம்நெற் ஜெயபாலன் பற்றிய ஒரு பதிவு

  வெற்றிசெல்வன்       Sunday, 3 November 2024
எனது முகநூல் நண்பர்களுக்கும்
நான் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதல் இன்றுவரை தொடர்ந்து எனது அனுபவங்களை 96 பகுதிகளாக இதுவரை போட்டுள்ளேன். அதற்கு முன்பும் நாலைந்து வருடங்களுக்கு முன்பு சிறுசிறு பதிவுகளாக புளொட் செயலதிபர் உமா மகேஸ்வரனின் மரணத்தின் பின்னணி பற்றி குறிப்பிட்டு சிறு பதிவுகள் போட்டுள்ளேன். பல வருடங்களுக்கு முன்பு தேசம் நெட்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பற்றிய பதிவுகளுக்கு, பல உண்மைகளைகருத்துக்களாக போட்டு இருந்தேன். அப்போதுதான் முகநூலில் பல இயக்கத் தோழர்களும் நண்பர்களும் கிடைத்தார்கள்.
அப்போதிருந்து இன்றுவரை பல முன்னாள் உண்மையான கழக விசுவாச உறுப்பினர்கள், எனது பதிவுகள் தாங்கள் நேசித்த கழகத் தலைவர்களை நான் தவறாக சித்தரிப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு என்னை பலவாறு திட்டி அசிங்கமாக எழுதினாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். காரணம் அவர்கள் இன்று வெளிநாட்டில் இருந்தாலும் இயக்கத்தின் கஷ்டமான காலங்களில் இயக்கத்தில் இருந்து செயல்பட்டவர்கள்.
            ஆனால் கழக செயலதிபர் உமாமகேஸ்வரன் மேல் பல குற்றச்சாட்டுகளை சாட்டி, அவருக்கு மரண தண்டனை கொடுத்த பின்பு உண்மைகளை மறைத்து பதவிக்கு வந்த மேல்மட்ட தலைவர்கள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் இவர்கள் மறைந்த தலைவர் உமாமகேஸ்வரன் மேல் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு மேல் ஆயிரம் மடங்கு அதிகமாக குற்றச் செயல்கள் புரிந்தார்கள். அதாவது கொலை கொள்ளை பாலியல் குற்றச்சாட்டுகள் இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து பொதுமக்களை கொன்றது பல நூற்றுக்கணக்கான பொதுமக்களை காணாமல் போகச் செய்தது போன்ற குற்றச்சாட்டுகள் இவர்கள் மேல் உள்ளது.
இந்தத் தலைவர்களின் நயவஞ்சகமான பேச்சை நம்பி மரண தண்டனைக்கு உரிமை கோரிய தோழர்கள் இன்றுவரை துரோகிகள் என்ற பெயரோடு வாழ்கிறார்கள். அந்த உண்மைகளை பொது வெளியில் கொண்டு வரவேண்டும் என்று தான் நான் இந்தப் பதிவுகளை போடுகிறேன்.
 செயலதிபர் உமா மகேஸ்வரன் மறைவுக்குப் பின், இயக்கத்துக்கு சம்பந்தமில்லாத ஒரே ஒரு குடும்பம் ஆட்சி ராஜன் மூலம் பல வசதி வாய்ப்புகளை பெற்றனர். அந்தக் குடும்பம்  தேசம் நெட் ஜெயபாலன் குடும்பம் மட்டும் தான். காரணம் ஆட்சி ராஜன் தனது நண்பன் வசந்த் கடைசி காலங்களில் செயலதிபர் பற்றிய உண்மைகளை தோழர்களிடம் கூறி, கிட்டத்தட்ட  ஒரு உட்கட்சிபோராட்டத்தை ஏற்படுத்த முயன்றது.
இதுவரை எனது பதிவுகளை தொலைபேசியில் பேசும்போது பாராட்டி விளக்கங்கள் கேட்ட தேசம்நெற் ஜெயபாலன் இப்போது வரும் பதிவுகளில் வசந்த் பற்றிய செய்திகளை பெரிய அளவில் போட வேண்டாம். அதோடு  தான்இந்தியா வந்து ஆட்சி ராஜன் மற்றும் உமாமகேஸ்வரன் மரணதண்டனைக்கு கழக சார்பாக பொறுப்பேற்று கொண்டவர்களுடன் தங்கியிருந்தது பற்றி எழுத வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அவர் எப்படி கேட்டுக்கொண்டது சரி ஆனால் தொடர்ந்து அவர் நீங்கள் அதை எழுதினாலும் தனக்கிருக்கும் பத்திரிகை செல்வாக்கு இன்டர்நெட் செய்திகளின் செல்வாக்கால் அதை பொய்யென்று நிரூபிக்க முடியும் என்று சவால்விடும் தொனியில் பேசியதால்தான் தேசம் நெட் ஜெயபாலனுக்கு ம் எமக்கும் இருந்த தொடர்பை சிறிது எழுதினேன்.
ஆனால் அவர் தன்னை அறிவுஜீவி உத்தமர் என்று நிரூபிக்க என்னை இந்திய உளவுத்துறையின் முகவர் என்று எழுதுகிறார். அதோடு ஒருத்தர் கருத்துக்கு வெற்றிச்செல்வன் தனக்கும் இந்திய உளவுத் துறைக்கும் இருந்த தொடர்பை எழுத்தின் மூலமே எழுதியுள்ளார் என்று பதில் கூறியுள்ளார். அதோடு எனது பதிவுகளில் 94 பதிவை மட்டும்மட்டும் படித்ததாகவும் கூறியுள்ளார்.
அவர் கூறிய கருத்து இயக்க சார்பாக இந்திய உளவுத்துறை யோடு தொடர்பு உள்ளவர்கள் இந்திய உளவுத்துறை முகவர் என்று அடித்துக் கூறுகிறார். நன்று அதேபோல் இயக்கத்துக்காக தமிழ்நாட்டில் கொலை கொள்ளை போதை மருந்து கடத்திய அவரின் சகோதரர் வசந்த் கடைசி வரையில் தனிப்பட்ட முறையில் உலகின் மோசமான சமூகவிரோத செயலான போதை மருந்து விற்பனை செய்பவர்களுடன் கூட்டாக தொழில் செய்தாரா? அதேபோல் தனிப்பட்ட முறையிலும் கொலை கொள்ளை செய்தவரா?
செயலதிபர் உமா மகேஸ்வரனின் கொலையில் இந்தியா உளவுத்துறை சம்பந்தப்பட்டதாகும் நான்  உளவுத்துறை முகவர் என்றும் உறுதிப்படுத்துவதாக கூறுகிறார். மிகவும் நல்ல விடயம். 

இந்திய உளவுத்துறை கொடுத்த பணத்தில்தான்
ஆட்சி ராஜன் தேசம்நெட் ஜெயபாலனை வெளிநாட்டுக்கு அனுப்பினார்.

இந்திய உளவுத்துறை கொடுத்த பணத்தில்தான் ஆட்சி ராஜன் தேசம்நெற் ஜெயபாலனின் சகோதரிக்கு திருமணத்துக்கு சீதனமும் பிரான்ஸ் போக பயணக் காசும் கொடுத்தாரா.

ஜெயபாலன் சென்னையில் ஆட்சி ராஜனுடன் தங்கியிருந்தபோது அவர்கள் ரகசியமாக தங்கியிருக்க இந்திய உளவுத்துறை பணம்தான் பயன்பட்டது

ஆட்சி ராஜனுக்கு திருமணம் செய்ய பெண்ணை கூட்டி வந்து தேசம்நெற் ஜெயபாலனின் அம்மா செலவு காசும், பெண் பார்த்து கொடுத்த தனது உறவினருக்கு ப்ரோக்கர் காசு வேண்டும் என்று கூறி வாங்கிய காசு இந்திய உளவுத்துறை கொடுத்த காசுதான்.

தேசம்நெற் ஜெயபாலனுக்கும்ஆட்சி ராஜனுக்கு நான் வடபழனி சரவண பவனில் கொடுத்த திருமண விருந்து பணமும் இந்திய உளவுத்துறை கொடுத்த பணம்தான்

தேசம் நெட்  ஜெயபாலன் தனது சொந்த மாமாவின் முதல் மனைவியையும் மகளையும் சென்னையின் ஆட்சி ராஜன் பொறுப்பில் ஒப்படைத்து அவர்களை ஆட்சி ராஜன் பார்த்துக்கொண்ட பணமும் இந்திய உளவுத்துறை கொடுத்த பணம்தான்.
இன்னும் பல விடயங்களை எழுதலாம். அசிங்கம். ஜெயபாலனுக்கு என்மேல் உள்ள இன்னொரு கோபம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் பேசியது தான். காரணம். ஜெயபாலன் காதலித்து வந்த பெண்ணை அவரின் அம்மா சென்னை அழைத்து வந்தபோது சீர்திருத்த திருமணம் என்று ஆட்சி ராஜன் வாடகைக்கு இருந்த வீட்டில் சாமி அறையில் அவரின் அம்மா ஆசியோடு நான் தான் தாலி எடுத்துக் கொடுத்தேன். இப்போது குழந்தையுடன் இருக்கும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஒரு இந்திய பிராமணப் பெண்ணை திருமணம் செய்ய அவர் ஓடி  திரிவதாக லண்டன் நண்பர்கள் கூறியதால், நான் உரிமையோடு தேசம்நெற் ஜெயபாலனை கடுமையாக கடிந்து கொண்டேன். அவர் பேசும்போது தனது தனிப்பட்ட வாழ்க்கையில் புத்தி சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை என்று கடுமையாக பேசினார்.

யாரைப் பத்தி எழுதினாலும் தனக்கு கவலையில்லை என்று இருந்துவிட்டு, அவரின் சகோதரர் வசந்த் மற்றும் தேசம்நெற் ஜெயபாலனை பற்றிப் பதிவில் வரும்போது மட்டும் நான் இந்திய உளவுத்துறை முகவர், உமாமகேஸ்வரன் கொலையில் இந்திய உளவுத்துறைக்கு பங்கு உள்ளது எழுதுவர். நான் முகவர் என்றால் செயல் அதிபரின் கொலைக்கு முக்கிய  நேரடி காரணமான ஆட்சி ராஜனிடம் எல்லா தேவையான உதவிகளும் பெற்று, இன்று வசதியாக வாழ்ந்து கொண்டு, காதலித்து திருமணம் செய்த பெண்ணையும் பிள்ளைகளையும் துரத்தி விட்டு, ஆட்சி ராஜனையும் என்னையும் இந்திய உளவுத்துறை முகவர் என்று எழுதுவதற்கு மனம் கூச வில்லையா? நீங்கள் பெற்ற உதவிகள் பற்றிய விபரங்கள் இன்னும் இருக்கு அதை நான் எழுத விரும்பவில்லை.  

இந்தப் பதிவை அனுப்பியதற்கு மனம் வருந்துகிறேன். ஆனால் முழுப்பலனையும் பெற்றுவிட்டு, தங்களைப் பற்றிய செய்திகள் வந்தவுடன் அதை மறைக்க எத்தனை விதமான வார்த்தை ஜாலங்கள். உளவுத்துறை முகவர் என்றும், நான் அவரது  பதிவுகளை பார்த்து தான்எழுதுகிறேன் என்று கூட, எழுதுகிறார்.முதன்முதலில் ஜெயபாலன் வீட்டில் இருந்துகொண்டு செயலதிபர் உமா மகேஸ்வரனை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஜான் மாஸ்டர் காந்தன் பற்றி எவ்வளவு பெருமைப்படுகிறார்
.
திரும்பவும் எனது முகநூல் நண்பர்களிடம் இப் பதிவை போட்டதற்கு மன்னிப்பு கேட்கிறேன்.


logoblog

Thanks for reading 29/06/21 தேசம்நெற் ஜெயபாலன் பற்றிய ஒரு பதிவு

Previous
« Prev Post

No comments:

Post a Comment