பார்வையாளர்களின் எண்ணிக்கை

Search This Blog

Powered by Blogger.

Tuesday, 12 November 2024

78 ஆண்டுகளாக தெரியாத சிங்கள இனவாக அரசாங்கம் பற்றி இப்போதுதான் தமிழ் தலைமைகளுக்கு தெரிகிறது

  வெற்றிசெல்வன்       Tuesday, 12 November 2024

இலங்கை நாடு சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட 78 வருடங்களின் பின்பு இப்போதுதான் அதாவதுஅனுர குமார ஜனாதிபதியாக வந்த பின்பு தான் இலங்கைத் தமிழருக்கு சிங்களத் தலைவர்களை நம்பக்கூடாது தமிழர் பகுதிகளில் சிங்களக் கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வரக்கூடாது இன்று சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். 


1948 ஆண்டிலிருந்து 2024 ஆண்டு வரை இலங்கை சிங்கள அரசுகளுக்கும் இலங்கை சிங்கள ஜனாதிபதிகளுக்கும் மாறி மாறி ஆதரவு கொடுத்து பதவிகளும் பணப்பெட்டிகளும் வாங்கும் வரை இவர்களுக்கு சிங்களத் தலைவர்களை நம்பக்கூடாது என்று தெரியவில்லை. 


இப்போது தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், முன்னாள் ஆயுதக் குழுக்களில் இருந்து இந்திய அமைதிப்படையுடன் பின்பு இலங்கை சிங்கள ராணுவத்துடன் சேர்ந்து தமிழர்களையே சித்திரவதை செய்து படுகொலை செய்து பெண்களையும் குழந்தைகளையும் பஞ்சமா பாதகங்கள் செய்து கொலை செய்தவர்கள், பல தமிழர்களையே காணாமல் ஆக்கி இன்றுவரை அவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களது உறவினர்கள் இன்று வரை தவிக்கிறார்கள். 

இதற்குக் காரணமானவர்கள் இன்று தமிழ் தலைவர்களாக சிங்கள அரசாங்கங்களிடம் இருந்தும் சிங்கள தலைவர்களிடமிருந்தும் சிங்கள ராணுவத்திடமிருந்தும் பதவியும் பணமும் பெற்றுக் கொண்டுதான் இவ்வளவு காலமும் தமிழ் மக்களிடம் நடித்துக் கொண்டு இருந்தார்கள். 

2024 இலங்கையின் NPP கட்சியின் தலைவர் அனுரகுமார ஜனாதிபதியாக வந்தவுடன் இனிமேல் தாங்கள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி சிங்கள அரசுடன் ஜனாதிபதியுடன் பதவியும் பணமும் தங்களுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெற முடியாது என்று தெரிந்தவுடன் இப்போதுதான் தமிழர் பகுதிகளில் சிங்கள கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகள் கூட வரக்கூடாது என நினைக்கிறார்கள்.


மஹிந்தாவை ஆதரித்து பதவியும் பணமும் பெற்றபோது அவர் தமிழருக்கு எதிரான சிங்கள தலைவர் என்று தெரியவில்லை 


அங்கஜன் ராமநாதன் இலங்கை சிங்களக் கட்சியில்வடபகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போது தெரியவில்லை 


ராணுவ தளபதி சரத் போன்சிகா கோத்தபாய ராஜபக்சே மைத்திரிபால பால நாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ சந்திரிகா குமார தூங்க இவர்களை எல்லாம் ஆதரித்து பதவியும் பணமும் பெற்று தங்களையும் தங்களுக்கு நெருக்கமானவர்களையும் சொகுசாக வாழ வைக்கும் போது இவர்கள் தமிழர்களை ஏமாற்றும் சிங்களத் தலைவர்கள் என்று தெரியவில்லையா. ஏன் விடுதலை புலிகள் அமைப்பு கூட கோடிக்கணக்கான பணத்தை வாங்கிக் கொண்டு மஹிந்தா ராஜபக்ச பதவிக்கு வர உதவி செய்தவர்கள் தானே. பணமும் பதவியும் என்றால் எல்லா தமிழ் கட்சிகளுக்கும் தமிழ் இயக்கங்களுக்கும் இலங்கையின் ஜனாதிபதி அல்லது பிரதமர் சிங்களவர் என்று நினைப்பு வராது. 


1948 ஆண்டு முதல் 1972 வரை இலங்கை பிரித்தானிய அரசின் நேரடி கண்காணிப்பில் இருந்த போது, தமிழர் தரப்பில் மிகச்சிறந்த தமிழ் வழக்கறிஞர்கள் அரசியலிலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த போதும் ஏன் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு போட்டு தமிழர்களின் உரிமையை பெற முயற்சி கூட செய்யவில்லை. 

ஆனால் சாதாரண அரசாங்க உத்தியோகத்தர் கோடீஸ்வரன் இங்கிலாந்து வரை வழக்கை போட்டு கொண்டு போய் வெற்றியும் பெற எப்படி முடிந்தது. 


இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இணைந்த வட கிழக்கை வழக்கின் மூலம் ஜேவிபி கட்சி பிரித்த போது ஏன் தமிழ் கட்சிகள் அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தவில்லை. அப்போதும் தமிழ் கட்சிகளில் சிறந்த வழக்கறிஞர்கள் இருந்தார்கள். எந்த தமிழ் கட்சியாவது அதுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்ததா என்பது எனக்குத் தெரியவில்லை தெரிந்தவர்கள் கூறுங்கள். 

2009 கடைசி யுத்தத்தில் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட போது விடுதலைப் புலிகள் இயக்கத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்போது என்ன செய்தார்கள். அவர்கள் எல்லோரும் ரகசியமாக அரசாங்கத்திடம் பணம் வாங்கிக்கொண்டு எப்போது விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்படும் என்று பார்த்துக் கொண்டு மட்டும்தான் இருந்தார்கள்.


அப்போது தனியாக இருந்த இயக்கங்கள் இப்போது தமிழ்த் தேசியம் தமிழ் மக்கள் உரிமைகள் பற்றி பேசும் தமிழ் தலைவர்கள் சிங்கள அரசாங்கத்திடம் கூலிப்படையாக செயல்பட்ட தலைவர்கள் விடுதலைப் புலிகளே கொள்கிறோம் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்களை கொலை செய்து கொள்ளையடித்தார்கள்.


பிரபாகரன் தாங்கள் அழிந்தாலும் வெளிநாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று கூறி சென்றதாக கூறுவார்கள். ஆனால் வெளிநாட்டு தமிழர்கள் இலங்கையின் தமிழர் போராட்டத்தை கூறி சேர்த்த பல பல லட்சக்கணக்கான வெளிநாட்டு பணத்தை தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொண்டு பல ஆயிரம் புதிய பணக்காரர்களாக தொழிலதிபர்களாக வளம் பெறுகிறார்கள் 


யாருமே ஒரு ஆள் பாதிக்கப்பட்ட உண்மையான தமிழ் மக்களுக்கும் போராட்ட களத்தில் நின்று கை கால் இழந்து அனாதைகளாக தெருவில் நிற்கும் முன்னாள் போராளிகளுக்கும் எதுவும் செய்யவில்லை. 



இதுவரை தமிழர்களை ஏமாற்றி பிழைத்த கட்சிகள் இயக்கங்கள் தலைவர்கள் இனிமேல் புதிய சிங்கள அரசாங்கம் NPP வந்தால் தங்களால் அவர்களிடம் பேரம் பேச முடியாது என்ற காரணத்தால், தமிழர்களை காப்பாற்ற தங்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் அப்போதுதான் தமிழர் தேசியம் காப்பாற்றப்படும் தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று பலவித பிரச்சாரங்கள். 


பதவியும் பணமும் பெறும் போது தெரியாத சிங்கள இனவாத தலைமைகள் பற்றி இப்போது NPP கட்சி மட்டும் சிங்கள இனவாத கட்சியாக தெரிகிறது. 

கடந்த 78 ஆண்டுகளாக தமிழருக்கு எதிராக செயல்பட்ட சிங்கள அரசியல் கட்சிகளும் பதவியில் இருந்த சிங்களத் தலைவர்களும் அது போல் தமிழரசிய கட்சிகளும் விடுதலை புலிகள் உட்பட தமிழர் ஆயுத ரீதியான அரசியல் ரீதியான கட்சிகளும் தமிழ் மக்களுக்கு செய்யாத கொடுமைகளும் கொலைகளையும் போல இனி யார் செய்ய இருக்கிறார்கள்.


தமிழ் மக்கள் இனியும் தமிழ் தலைவர்களிடம் ஏமாற வேண்டாம் சிந்தித்து வாக்குகளை போடுங்கள். இதுவரை காலமும் இல்லாத மாதிரி எல்லோருக்கும் இப்போதுதான் தமிழ் மக்கள் மேல் பாசம் வந்துள்ளது. இவர்கள் பதவியில் இருக்கும் போது தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் என்ன எல்லாரும் யோசித்து செயல்படுங்கள்.

 



logoblog

Thanks for reading 78 ஆண்டுகளாக தெரியாத சிங்கள இனவாக அரசாங்கம் பற்றி இப்போதுதான் தமிழ் தலைமைகளுக்கு தெரிகிறது

Previous
« Prev Post

No comments:

Post a Comment