இலங்கையின் பத்தாவது பாராளுமன்ற அமர்வில் தமிழரசு கட்சி தலைவர் ஸ்ரீதரன் அவர்கள் தனது முதல் பேச்சை மிக சிறந்த முறையில் ஆற்றி இருக்கிறார். என்ன அவரே குறை காண்பவர்கள் காணலாம். நானும் கடந்த காலங்களில் அவரின் நடவடிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.
ஸ்ரீதரன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் நடவடிக்கைகள் சிறந்த முறையில் இருக்க வேண்டும். முதல் பாராளுமன்ற பேச்சு மாதிரி அரசாங்கத்துக்கு நட்பு கரம் கொடுத்து எங்கள் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும்.
இவரின் பாராளுமன்ற பேச்சை பார்க்கும் போது இலங்கையின் தமிழர்களுக்கு நல்ல ஒரு தலைவர் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை வருகிறது.
ஸ்ரீதரன் அவர்களை குறை கூறி மட்டம் தட்டுவதை விட அவரை உற்சாகப்படுத்தி ஒரு நல்ல தலைவராக இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஸ்ரீதரன் போன்றவர்கள் பொறுப்புணர்ந்து தமிழர்களுக்கு தலைமை தாங்க வேண்டும்.
சில நண்பர்கள் ஸ்ரீதரன் பார் பர்மிட் போன்றவற்றுக்காக பயத்தில் இப்படி நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். கடந்த காலத்தில் தமிழ் மக்களையே கடத்தி கொள்ளை அடித்து வெள்ளி வேன்களில் கார்களில் கொண்டு போய் கொலை செய்து பெண்களை கற்பழித்து தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்தவர்கள் எல்லாம் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு அரசியல் தலைவர்களாக வலம் வந்த போது அவர்கள் செய்த கொலைகளை எல்லாம் ஏற்றுக் கொண்ட மக்கள் ஏன் அவ்வளவு துரோகம் செய்யாத சிறிதரனை ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இனி ஸ்ரீதரன் சிறு தவறு கூட தமிழர் அரசியலில் செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தமிழ் மக்களின் கடமை.
தமிழ் மக்களை கடந்த காலத்தில் கொலை செய்த கொலைகாரர்களையே தலைவராக இதுவரை ஏற்றுக் கொண்டிருந்தோம். அவர்களை விடவா ஸ்ரீதரன் மோசமானவர்
No comments:
Post a Comment