யார் பொறுப்பு
கடந்த இரண்டு நாட்களாக முகநூல்களில் யாழ் மாவட்ட மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு, கிடைக்கவில்லை மருத்துவர்கள் மருந்துகளை வெளிக் கடைகளில் வாங்கிக் கொள்ள எழுதிக் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவமனைகளுக்கு வரும் மருந்துகள் தனியார் மருத்துவமனைகளுக்கு, வெளி மருந்து கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இது இப்போதுதான் நடப்பது போல் எல்லோரும் எழுதுகிறார்கள்.
இந்த மருத்துவ ஊழல் பல பல ஆண்டுகளாக தொடர் கதையாக நடந்து வந்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண அரசு மற்றும் நீண்ட நெடுங்காலமாக மத்திய அமைச்சராக இருந்தவர்கள் எல்லோரும் தான் பொறுப்பு கூற வேண்டும்.
சாவகைச்சேரி மருத்துவமனைக்கு மாறுதலாகி வந்த ஒரு மருத்துவர் அதாவது அர்ச்சனா ராமநாதன் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் என்றால் ஏன் மக்கள் பிரதிநிதிகள் ஏன் இவ்வளவு காலம் வாய் மூடி இருந்தார்கள் அவர்களுக்கும் இந்த ஊழலில் பணம் பங்கு பாய்ந்து இருக்கிறதா?
பல பல வருடங்கள் வாய் மூடி மௌனமாக இருந்த பொதுமக்கள் அர்ச்சனா வருகைக்கு பின் உண்மை நிலை அறிந்து ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தது மட்டுமல்லாமல், அர்ஜுனாவை இலங்கை பாராளுமன்றம் அனுப்பி ஊழலுக்கு எதிராக போராடுவார் என எதிர்பார்க்கிறார்கள். அதை மருத்துவ அர்ஜுனா திறம்பட செய்வாரா இல்லை மற்றவர்கள் போல் சுயநலமாக இருந்து விடுவாரா என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
கடந்த காலத்தில் பதவியில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் மத்திய அரசு மந்திரியையும் மக்கள் தூக்கி எறிந்து இருந்தாலும், பகிரங்கமாக இவர்கள் தங்கள் தவறை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதவியும் பணமும் மட்டுமே ஆசையாக கொண்ட இவர்கள் சகல அரச துறைகளிலும் ஊழலை வளர விட்டு அதில் வரும் பணத்தையும் இவர்களும் பங்கிட்டு கொண்டதாக தான் செய்திகள் வருகின்றன.
ஆயுதமேந்தி இலங்கை ராணுவத்துடனும் சக தமிழர் இயக்கங்களிடமும் போராடி கொலை செய்து மூர்க்க குணம் கொண்ட ஒரு தமிழினம், இன்று உணர்ந்துவிட்டார்கள் இதுவரை காலமும் தமிழ் தலைவர்கள் தங்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வந்ததை பொறுக்க முடியாமல் தமிழ் மக்களும் ஒரு மாற்றத்தை கொண்டு வந்து விட்டார்கள்.
தென்னிலங்கை கட்சிகள் தமிழ் பகுதிகளில் மக்கள் ஏற்றுக் கொள்ள தொடங்கிய விட்டார்கள். இன்று இந்த மாற்றத்தை எதிர்க்கும் பதவி இழந்த தமிழ் அரசியல்வாதிகளும்., வெளி நாட்டில் தமிழ் தேசியம் பேசி இலங்கையில் இருக்கும் தமிழர்கள் உசுப்பேற்றி வரும் வெளிநாட்டு இலங்கைத் தமிழர்களும் தமிழ் மக்களே குறை சொல்லி ஒன்றும் பயனில்லை.
இந்த நிலைமை வந்ததற்கு அதாவது தென்னிலங்கை கட்சிகளை தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வரவேற்றுவதற்கு காரணம் கடந்த கால தமிழ் கட்சிகள் தமிழ அரசியல்வாதிகள் பதவிக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு, அப்பாவி தமிழ் பொது மக்களை வாக்கு வங்கியாக பாவித்தது மட்டுமே.
தமிழ் மக்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை உரிமைகளையும் சேவைகளையும் தங்கள் பதவிகளை வைத்து செய்து கொடுக்கவில்லை.
தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் கௌரவ மந்திரியாகவும் இருந்து விட்டால் மட்டும் போதுமா
இப்போது இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சரி கடந்த காலத்தில் தாங்கள் விட்ட தவறுகளையும் பதவிய இழந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்ட தவறையும் சீர்தூக்கிப் பார்த்து தமிழ் மக்களுக்காக வாழ்ந்து பாருங்கள்.
தமிழ் மக்களும் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்
No comments:
Post a Comment