1970 ஆண்டுகளில் பதவிகளுக்காக, மாற்றுக் கருத்துள்ள மக்களின் உண்மையான சேவகர்களை துரோகிகள் என்று கூறி, இளைஞர்களை தவறான வழிகாட்டுதலில் கொலைகாரர்களாக மாற்றி, தமிழ் பொது மக்களையும் தமிழீழம் என்ற மாயையில் வீழ்த்தி பின்பு பாராளுமன்ற உறுப்பினராகிய எமது தமிழ் தலைவர்கள் பதவி சுகத்தை அனுபவித்தார்கள்.
இந்த தலைவர்களை நம்பி ஆயுதம் தூக்கிய இளைஞர்கள் சிங்கள படையுடன் சண்டை இடுவதை விட தங்களுக்குள் அடித்துக்கொண்டு பல ஆயிரம் பேர் இறந்தது தான் மிச்சம். அதைவிட சொந்த தமிழர்களை அழிக்க இந்திய படையுடனும் இலங்கை படையுடனும் சேர்ந்து கொண்டு பல ஆயிரம் தமிழர்களை கொலை செய்தது தான் மிச்சம். தமிழர்கள் செய்த பாவம் கடைசியில் முள்ளிவாய்க்காலில்2009இல் பெருவாரியான தமிழினம் அழிந்து அடிப்படை உரிமைகள் கூட இழந்து நின்றோம்.
அதன் பிறகும் மிஞ்சிய ஆயுத இயக்கத் தலைவர்கள் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டு புனிதர்கள் போல் தமிழ் மக்களை காப்பாற்றுவதாக கூறிக்கொண்டு பணத்துக்கும் பதவிக்கும் மட்டுமே ஆசைப்பட்டு தமிழ் மக்களே ஏமாற்றி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகி தங்களது சுக வாழ்க்கையை தொடர்ந்தார்கள்.
இதற்கும் முடிவு வந்தது சிங்களப் பகுதியில் சிங்கள மக்கள் அரசியலில் புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. ஓரளவு தமிழ் மக்களும் விழிப்புணர்வு பெற்று பழைய கொலைகார தலைவர்களே அப்புறப்படுத்தினார்கள்.
ஆனாலும் தமிழர்கள் ஏற்படுத்திய புதிய மாற்றத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தமிழர்களுக்கு நம்பிக்கை தரக்கூடியவர்களாக இல்லை என்பது கவலை அளிப்பதாக உள்ளது.
எல்லாவற்றிற்கும் உச்சமாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஒளிப்பதிவுகளும், ஒலி பதிவுகளும் மிகவும் தரம் கெட்ட தரமாக உள்ளது. ஒழுக்கத்திலும் கல்வி அறிவிலும் நாங்கள் தான் சிறந்தவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொண்ட இலங்கை வடபகுதி தமிழினம், இன்று தாங்கள் தெரிவு செய்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் ஒழுக்கம் அற்ற செயல்களையும் பேச்சுக்களையும் நினைத்து வெட்கப்படவா போகிறார்கள். அந்தப் பாராளுமன்ற உறுப்பினர் ஆவது தன்னை திருத்தி கொள்வாரா.
மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு ஒன்று மிதித்த கதையாக, ஆயுதப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டு , விழுந்து கிடக்கும் தமிழினத்தை தூக்கி நிறுத்த வந்த பாராளுமன்ற உறுப்பினர் அதுவும் மருத்துவர் தனது தரங்கெட்ட வார்த்தைகளாலும் தூஷன்களாலும் தமிழ் மக்களே பெருமை அடைய செய்கிறார்
No comments:
Post a Comment