இலங்கையில் 1970களில் தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றிய போது இலங்கை தமிழ் மக்களுக்கு அந்த இயக்கங்கள் பற்றி தெரிய வரும் முன்பே, அந்த இயக்கங்களின் முக்கிய தலைவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டில் வந்து தலைமறைவாக இருந்தபோது எந்தவித பிரதிப் பலனும் எதிர்பாராமல், இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு பயம் கொள்ளாது இலங்கை தமிழ் விடுதலை இயக்க தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பலவித உதவிகள் செய்து உணவுகள் கொடுத்து, தமிழ் ஈழ ஆதரவு கொள்கையில் கடைசி வரை உறுதியோடு இருந்து மறைந்த ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும், அம்மா தாமரை பெருஞ்சித்திரனார் அவர்களும் இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகள் பல. அம்மாவின் கையால் பலமுறை உணவருந்தி இருக்கிறேன் என்பது என்றும் நினைவில் நிற்கும் நினைவுகள் ஆகும்.
தென்மொழி அம்மா தாமரை பெருஞ்சித்திரனார் அவர்களின் 12 வது நினைவு தினமான இன்று அவரின் நினைவுகள் என்றும் போற்றப்படட்டும்
No comments:
Post a Comment