எமது தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகள் திட்டமிட்டு திசை திருப்பப்படுகிறதா?
2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பிருந்த திறமையற்ற ஊழல் மற்றும் பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட தமிழ் தலைவர்கள், மக்கள் தேர்ந்தெடுக்காமல் விட்டதை நினைத்து மகிழ்ந்தோம்.
.. ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காது போல் இருக்கிறது. தேசிய கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றி இதுவரை குரல் கொடுத்ததாக தெரியவில்லை. ஆயுதப் போராட்டத்திற்கு மூல காரணமாக தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கனடாவில் போய் எமது அடிப்படை பிரச்சனைகள் பற்றி பேசி ஏமாற்றி பணம் சேகரிக்க முயற்சி செய்கிறார்கள். இவர்கள் இனி தான் இலங்கை அரசின் மீது போர் குற்ற விசாரணை செய்ய முயற்சி செய்கிறார்களாம்.
இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் தான் தான் உண்மையான தமிழர்களின் பிரதிநிதி என்று கூறி, தனது முன்னாள் துறை சார்ந்த எதிரிகளோடு போராட்டங்கள் நடத்தி, தான் நடத்துவது தான் தமிழர்களுக்காக போராட்டம் என்று கூறி, தன்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் எல்லாம், தனது தமிழர் உரிமைக்கான போராட்டத்திற்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் என்று கூறி வழக்கு நடத்த பெருமளவு பணத்தை எதிர்பார்க்கிறார்.
இவர்கள் திட்டமிட்டு தமிழர்களுக்கான அடிப்படை உரிமைகள் பற்றிய கருத்துக்களை முன் வைக்காமல், சாதாரண நீதிமன்றங்களால் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இதுதான் தமிழர் பிரச்சனை என்று காட்டப் பார்க்கிறார்கள்.
திட்டமிட்டு யாரோ இவர்களை வழி நடத்துகிறார்கள் என்று தெரிகிறது. தமிழ் பொதுமக்கள் தொடர்ந்து இப்படியானவர்களே உற்சாகப்படுத்தாமல் இவர்களை தமிழர்களுக்கான நல்ல பாராளுமன்ற உறுப்பினர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது
No comments:
Post a Comment