அதோடு உமா மகேஸ்வரன் கொலையில் மாணிக்கதாசனுக்கும் தனக்கும் அதாவது சித்தார்த்தனுக்கும் உள்ள தொடர்பை மறைப்பதற்கு எங்களை கொலை செய்ய பலமுறை ஆட்கள் அனுப்பியதற்கும் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு உண்மைகளை வெளியில் சொல்லி விடுவதாக சவால் விட்ட ராபின் (உமா மகேஸ்வரனே மே பாதுகாவலராக இருந்த வர்.) அவர்களை சுவிசில் வைத்து கொலை செய்ய டுமால் என்பவரை அனுப்பி ஆறு மாதமாக அவரின் குடும்பத்தோடு பழக விட்டு, ஒரு நாள் சொந்த சகோதரி போல் ராபினின் மனைவியோடு பழகி சமையல் செய்து தரச் சொல்லி சாப்பிட்டு விட்டு, கர்ப்பிணியான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரபினையும் கொலை செய்துவிட்டு, வவுனியா வந்த டுமாலை கட்டிப்பிடித்து வரவேற்று பதவி உயர்வும் கொடுத்து சந்தோஷப்பட்டதை மறக்க முடியாத உத்தமரே.
ராபினின் மனைவி உங்கள் தொகுதியை சேர்ந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர். உங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை எப்படி உங்கள் மனம் ஏற்றுக் கொண்டது. பதவிக்காக என்ன வேண்டும் ஆனாலும் செய்வீர்களா?
நீங்கள் உங்களை உத்தமராக காட்ட அடிக்கடி கூறுவீர்கள் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் தலைக்கும்.
No comments:
Post a Comment